Home சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா?
வெள்ளி, 18 அக்டோபர் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு எண்ணிப்பார் ஏழு வேறுபாடு விடைகள்: 1. வீட்டின் புகை கூண்டு, 2. பந்து, 3. வாத்தின் இறக்கை, 4. வண்டு, 5. சிறுமியின் தொப்பி, 6. வீட்டின் கதவு, 7. நாய்குட்டி உடலிலுள்ள... மேலும்
பிஞ்சு வாசகர் மடல் பிஞ்சு வாசகர் மடல் “பிப்ரவரி 2019 பெரியார் பிஞ்சு இதழில் ‘விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்று வெளியாகி இருந்தது. விட்டில் பூச்சி எப்ப... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்! காரணமின்றி ஏற்காதீர்கள்! கண்படுமோ... பிறர் கண்படுமோ... -சிகரம் திருஷ்டி  சுற்றிப் போடுதல் சரியா? கிராமப்புறங்களில் திருஷ்டி சுற்றிப் போடுதல் என்பது வழக்கில் உள... மேலும்
விந்தைப் பெரியார் விந்தைப் பெரியார் சாதிகளை வெறுத்தார் சாத்திரத்தை மறுத்தார் வேதியத்தை வெறுத்தார் விதிவலியை மறுத்தார்   சடங்குகளை வெறுத்தார் சங்கடங்கள் அறுத்தார் மடமைக... மேலும்
அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சிகரம்


காலையில் எழுந்தவுடன் வீட்டிற்குமுன் பெண்கள் சாணி கலந்த நீரைத் தெளிப்பார்கள். கிராமங்களைப் பொறுத்தவரை இது எல்லா வீடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

காலையில் (வைகறை) எழுந்ததும் சாணி தெளிக்க வில்லையென்றால் மூதேவி உள்ளே வந்துவிடுவாள்; சீதேவி வெளியே போய்விடுவாள் என்பார்கள்.

இதில் மூதேவி சீதேவிக்கெல்லாம் வேலை-யில்லை. அதிகாலைப் பொழுதில் இவ்வாறு தெளிப்பதை தவறாது செய்யவேண்டும் என்பதற்காக கூறப்பட்ட அச்சுறுத்தலே இதுவாகும். மற்றபடி இது உண்மையல்ல.

காலைப் பொழுதில் சாணி கலந்த நீரைத் தெளிப்பது தூய்மை சார்ந்த ஒரு வழக்கமேயாகும்.

ஓரிடத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமானால் சாணமிட்டு மெழுகுவதை அக்காலத்திலிருந்து வழக்கத்தில் வைத்திருக்-கின்றார்கள். மண் தரையுள்ள வீடுகளை வாரம் ஒருமுறை சாணமிட்டு மெழுகுவார்கள். இவையெல்லாம் தூய்மையைக் காக்கவேயாகும்.

காலையில் ஒரு பாத்திரத்தில் உள்ள நீரில் ஒரு மாங்காய் அளவு சாணத்தைக் கரைத்து வீட்டின்முன் தெளிப்பார்கள்.

இரவு வேளைகளில் ஏதாவது சிறு பூச்சிகள் வெளியில் அடைந்திருந்தாலும், பாம்பு போன்றவை பதுங்கியிருந்தாலும் இந்த நீர் பட்டதும் ஓடிவிடும்.

மேலும், மண்ணின் புழுதி பறக்காமல் இருக்கவும், எச்சில் போன்ற அசுத்தங்கள் மறையவும் இது பயன்படுகிறது.

அது மட்டுமின்றி இவ்வாறு தெளித்த பின் கூட்டி கோலம் போட்டு அழகுபடுத்துவார்கள். இதைத் தவிர வேறு நோக்கம் இவ்வழக்கத்திற்கு இல்லை.

வேண்டுமானால், சாணத்திற்கு மாற்றாக டெட்டால் கலந்த நீர் தெளித்தும் தூய்மைப்படுத்தலாம். அந்தக் காலத்தில் அவர்களுக்கு கிடைத்தது சாணம். சாணந்தான் தெளிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

எலுமிச்சைக் காவு கொடுத்தால் விபத்து வராதா?


புது வாகனங்களை முதன் முதலில் பயன்படுத்தும் போது அதன் சக்கரத்தில் எலுமிச்சம் பழத்தை வைத்து, அதன்மீது வாகனத்தை ஏற்றி நசுக்கிச் செல்வார்கள். இதற்குக் காவு கொடுத்தல் என்று பெயர்.

இது மூடநம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த செயலாகும். புதுவாகனங்கள் காவு கேட்கும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. எனவே, முன்கூட்டியே அதற்கு எலுமிச்சம் பழத்தைக் காவு கொடுத்துவிட்டால், அதன்பின் அது உயிர்ப்பலி எதுவும் கேட்காது என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்யப்படுகிறது.

எந்திரங்கள் உயிரற்றவை. அவற்றுக்கு உணர்வுகளோ, உள்ளமோ, சிந்தனையோ கிடையாது. அப்படியிருக்க அது எப்படி காவு கேட்கும்? காவு கொடுக்கப்படுவதை அவை அறியப் போவதோ, உணரப் போவதோ இல்லை; அறிந்து அமைதி அடையப் போவதும் இல்லை.

காவு கொடுத்து விட்டோம். இனி நமக்கு இடர் வராது என்று போலித்தனமான மனநிறைவு கொள்ளவே இது பயன்படும்; மற்றபடி காவு கொடுப்பதால் எவ்வகைப் பயனும் இல்லை; பாதுகாப்பும் இல்லை.

திருவிழாக் காலங்களில் கூட எலுமிச்சைப் பழங்களை காவு கொடுப்பார்கள். அதாவது, அந்த விழாவின்போது எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக அவ்விதம் செய்யப்படுகிறது.

ஆனால், எலுமிச்சை காவு கொடுப்பதால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நாம் எச்சரிக்கையோடும், முன்னேற்பாட்டோடும், திட்டமிட்டும் செயல்படுவதன் மூலம் மட்டுமே உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியுமேயன்றி இப்படிப்பட்ட மூடச் செயல்களால் அல்ல.

அம்மை வார்த்த வீட்டில் வேப்பிலை செருகுதல்


ஒரு வீட்டில் யாருக்காவது அம்மை வந்தால், உடனடியாக அந்த வீட்டின் கூரை முகப்பில் ஒரு வேப்பிலைக் கொத்தைச் செருகி வைப்பார்கள்.

அடுத்தவர்கள் அந்த வீட்டில் அம்மை வளர்த்துள்ளது என்பதை அறிந்து கொள்ள ஓர் அடையாளமாகவே அது செருகப்பட்டது.

அதை அறிந்தவர்கள் அவ்வீட்டிற்கு வருவதையோ அல்லது அவ்வீட்டில் பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் கேட்பதையோ தவிர்த்து விடுவார்கள்.

தெருவில் போகும் பிச்சைக்காரர்கள் கூட அந்த வேப்பிலை அறிவிப்பைப் பார்த்து, அவ்வீட்டில் எதுவும் பிச்சை கேட்காமல் சென்றுவிடுவார்கள்.

அம்மை ஒரு தொற்றுநோய். அம்மை வந்தவர் வீட்டிலிருந்து பொருளை பிறர் பெறாமல் இருக்கவே இந்த அறிவிப்பு.

வேப்ப இலை அம்மை நோய்க்கு உரிய மருந்து. வேப்ப இலையையும் மஞ்சள் தூளையும் நீருடன் சேர்த்து காய்ச்சி கால் டம்ளர் அளவிற்கு ஒரு நாளைக்கு மூன்று வேளைப் பருகினால் அம்மை வந்தவர்க்கு விரைவில் குணமாகும். வராதவர் பருகினால் அம்மை வராமல் தடுக்கும். அம்மை வந்தவர்க்கு உடல் அரிக்கும் அப்போது விரலால் சொறியாமல் வேப்பிலையால் வருடினால் நல்லது.

மற்றபடி வேப்பிலைக்கு தெய்வீக சக்தி என்று எதுவும் இல்லை. அது ஒரு மருந்து.<

Share
 

முந்தைய மாத இதழ்

கதை கேளு... கதை கேளு : கதகதப்பு கதை கேளு... கதை கேளு : கதகதப்பு பூராயணியும் மாலதியும் இளஞ்சிவப்பு நிற நீண்டபுல்லின் கீழே நீந்தியபடி முந்தைய தினம் பார்த்த சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். இருவ... மேலும்
செப்டம்பர் 16 - உலக அமைதி நாள் செப்டம்பர் 16 - உலக அமைதி நாள் அமைதி காப்போம்! ‘அணுவை ஆக்கப் பணிக்கன்றி அழிவுக் காகக் கொள்ளாதீர்’ அணுவின் ஆற்றல் அறிந்திட்ட அய்ன்ஸ்டின் அன்றே உரைத்திட்டார்;   குறு... மேலும்
தங்கத் தாத்தா! தங்கத் தாத்தா! தங்கத் தாத்தா எங்க தாத்தா தங்கத் தாத்தா எமக்கு வாய்த்த சிங்கத் தாத்தா எங்கள் வாழ்வில் ஏற்றம் தந்து எம்மைக் காத்த அன்புத் தாத்தா!   ... மேலும்
தந்தை பெரியார் தந்தை பெரியார் ஈரோடு ஈன்றெடுத்த தலைவரவர்! ஈடில்லா தியாகத்தில் இமயமவர்! மூடநம்பிக்கையை ஒழித்த முன்னோடி! முன்னேற்றப் பாதை காட்டிய கண்ணாடி! பெண்ணுரி... மேலும்
விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க! விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க! கடந்த இதழ் தொடர்ச்சி... சரவணா இராஜேந்திரன் விண்வெளியில் வீடு கட்டினால் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா? 1.            கதிரியக்கத் தா... மேலும்
செய்து அசத்துவோம் : அலங்கார விளக்குக் கூடு செய்து அசத்துவோம் : அலங்கார விளக்குக் கூடு தேவையான பொருள்கள்: 1.            உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வண்ணத்திலான சிறிது தடிமனான செவ்வக வடிவ காகிதம். 2.            காகிதம். ... மேலும்