Home உயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள்
சனி, 20 ஜூலை 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?” ”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?” திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான். “அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி! அதில் 7ஆவது குறளுக்கு ஒரு ... மேலும்
உயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள் உயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள் என்ன! கடல் மரணிக்கப் போகிறதா? என்ற கேள்வி எழலாம், ஆம்! இந்தப் பெருவெளி இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அதில் உயிரோட்டம் உள்ளது என்று பொ... மேலும்
பயணம் - பாடம் பயணம் - பாடம் தேன் எடுப்போமா? அடலேறு கடந்த வாரம் தேனி மாவட்டம் சென்றிருந்தோம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. ஆனால் இப்போது நான் சொல்லப்போவது தேனியின் அழ... மேலும்
சாதனை : உசேன் போல்ட் ஆகணும்! சாதனை : உசேன் போல்ட் ஆகணும்! சர்வேஷின் கனவு 79 மெடல்கள், 71 சான்றிதழ்கள், 4 பரிசுகள், 7 விருதுகள் என 82 மாரத்தான் போட்டிகளில் இதுவரை 1205 கிலோ மீட்டர்களைக் கடந்திருக்... மேலும்
கொம்பு முளைச்சிருக்கா? கொம்பு முளைச்சிருக்கா? அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை பிஞ்சண்ணா காலையிலிருந்தே இளவமுதனின் போக்கு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான் அவனது அண்னன் இளமாறன். பள்ளி தொடங்... மேலும்
உயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

என்ன! கடல் மரணிக்கப் போகிறதா? என்ற கேள்வி எழலாம், ஆம்! இந்தப் பெருவெளி இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அதில் உயிரோட்டம் உள்ளது என்று பொருள். அது போல்தான் கடலும்! அதன் இயற்கையான தன்மை மாறும்போது அது உயிரிழப்பதாகத் தானே பொருள். உலக உயிர் உற்பத்திக்கே தோற்றுவாயான கடல்கள் தாமாக மடியவில்லை. மனிதர்கள் கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

அட்லாண்டிக் பெருங்கடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பார்க்க மிகப் பெரிய ஆய்வுத் திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் வாழும் உயிரினங்கள், பவளப் பாறைகள் அனைத்தும் நலமாக இருக்கின்றனவா என்பதை சோதனை நடத்தும் இந்தத் திட்டத்திற்கு

அய்-_அட்லாண்டிக் என்று பெயரிட்டுள்ளனர்.

அட்லாண்டிக் பெருங்கடல்தான் இந்த கிரகத்தின் இரண்டாவது பெரிய கடல்.

அய்ரோப்பிய ஒன்றியத்தால் நிதி அளிக்கப்பட்ட அய்-_அட்லாண்டிக் திட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்துள்ளன. இதனை ஒருங்கிணைப்பது ‘எடின்பர்க்’ பல்கலைக்கழகம்.

இதற்காக, கடலுக்குள் ஆய்வு செய்யும் ரோபோக்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இது ஆர்க்டிக் முதல் தென் அமெரிக்கா வரை உள்ள கடல்பரப்பை ஆய்வு செய்யும்.

பருவநிலை மாற்றம் கடலுக்கடியில் உள்ள தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று மதிப்பிடும். இந்த ஆய்வின் முடிவுகள் அட்லாண்டிக் குறித்த திட்டங்களை அரசுகள் முன்னெடுக்க உதவும்.

இந்நிலையில் மும்முனைத் தாக்குதலில் அட்லாண்டிக் பெருங்கடல் மூச்சுத் திணறுவதாக கூறுகிறார் அய்-_-அட்லாண்டிக் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மர்ரி ரோபர்ட்ஸ். மேலும் அவர், “அட்லாண்டிக் பெருங்கடல் பிராண வாயுவை இழந்து வருகிறது,” என்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம். புவி வெப்பத்தில் 90 சதவிகிதத்தை பெருங்கடல்களே உறிஞ்சுகின்றன.

இந்தக் குழுவானது 12 இடங்களில் ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது. பவளப் பாறைகளும் அழிந்து வருவதாக கூறுகிறார் பேராசிரியர் லாரன்ஸ்.

பவளப் பாறைகள் என்பவை பல்வகை கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடம். பவளப்பாறைகள் அழிவென்பது பல உயிரினங்களின் அழிவு. கடல் வெப்பம், உப்புத்தன்மை, மற்றும் பிராண வாயு ஆகியவை இந்த ஆய்வில் முதன்மையாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்கிறார் பேராசிரியர் கன்னின்கம்.

அதுபோல எவ்வளவு சூரிய ஒளி பெருங்கடலுக்குள் நுழைகிறது என்பதும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்கிறார் அவர்.

இந்த திட்டத்தில் இணைந்துள்ள பிற அமைப்புகள், நிதியையும் இதற்கான தொழில் நுட்பங்களையும் வழங்குகின்றன. இதனுடைய மதிப்பு முப்பது மில்லியன் யூரோக்கள். “கடலின் இயல்பு எப்படி மாறுகிறது? எதனால் மாறுகிறது? என்பதை ஆராய்வதே எங்கள் நோக்கம். இதனை புரிந்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் என்ன சவாலை நாம் எதிர்கொள்ள போகிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியும். இதனை புரிந்து கொண்டபின், இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாமென அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்” என்கிறார் பேராசிரியர் ராபர்ட். அட்லாண்டிக் கடல்மீது அக்கறைகொண்ட அய்ரோப்பிய நாடுகள் முன்வந்து, அதை உயிர்ப்பிக்கும் பணியை துரிதமாகச் செய்கின்றனர்,  அட்லாண்டிக் கடற்பகுதியில் ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க கரைப் பகுதிகள் உள்ள

43 விழுக்காடு தவிர மற்றவை அனைத்தும் அய்ரோப்பிய மற்றும் அமெரிக்க அய்க்கிய நாடுகளின் கீழ் வருகிறது. ஆகவே அவர்கள் அதிக அக்கறை கொண்டு கடலைப் பராமரிக்கின்றனர். ஆனால் இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளில் 97 விழுக்காடு நாடுகள் ஏழை மற்றும் தொழில்நுட்ப வசதியற்ற நாடுகள் ஆகும். அட்லாண்டிக் பெருங்கடலை விட அதிக பாதிப்புகளை இந்தியப் பெருங்கடல் எதிர்கொண்டு வருகிறது.   இந்தியப் பெருங்கடல் மூலமாக ஏற்படும் பருவநிலை மாற்றம்,  மழை காரணமாக உலகின் 73 விழுக்காடு மக்கள் பசியாறுகின்றனர். இந்த நிலையில் நமது இந்தியப் பெருங்கடல் வேகமாக மரணித்துக்கொண்டு இருக்கிறது, இதனை ஆய்வு செய்ய உலக நாடுகள் முன்வரவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும்.

Share
 

முந்தைய மாத இதழ்

பழகு முகாம் பழகு முகாம் பழகுமுகாம் ஏன் குழந்தைகளின் குதூகலத் திருவிழாவாக இருக்கிறது? பழகுமுகாம் ஏன் குழந்தைகளை ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கிறது? பழகுமு... மேலும்
தெரிந்து கொள்வோம் தெரிந்து கொள்வோம் உலக நாகரீகத்தின் மூத்த குடிகள் நாங்கள் என பெருமை கொள்வோம், அதற்கான அறிவியல் ஆதாரங்களும் வந்துவிட்டன. கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடிய... மேலும்
புதிய பாடம்! புதிய பாடம்! வெயிலின் வெப்பம் குறைஞ்சிடுச்சு விடுப்பும் கூட முடிஞ்சிடுச்சுபயிலும் பள்ளி திறந்திடுச்சு பாடம் புதிதாய் ஆயிடுச்சு!புதிய ஆசான் வந்தாச்சு பு... மேலும்