Home சாதனை : உசேன் போல்ட் ஆகணும்!
வெள்ளி, 20 செப்டம்பர் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உண்மையான பிறந்தநாள் விழாக்கள் உண்மையான பிறந்தநாள் விழாக்கள் தமிழகத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, மாநில உரிமை காத்த பெருமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் (செப்-15), சுயமரியாதையும், பகுத்தற... மேலும்
மகிழ்ச்சிச் செய்தி மகிழ்ச்சிச் செய்தி இம் மாதம் (செப்டம்பர் 21, 22) அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் "மனிதநேய & சுயமரியாதை மாநாட்டில்" 'பெரியார் பிஞ்சு' இதழ் குறித்தும், பெரி... மேலும்
எதற்கு? எதற்கு? நிலவில் மனிதன் வாழ்வதற்கு பாதைபோடச் சொல்லும் ‘ நிலவுக்கலன் 2 ‘ (சந்திராயன்) விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்-பட்ட ‘சந்திரயான... மேலும்
சாதனை : உசேன் போல்ட் ஆகணும்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சர்வேஷின் கனவு

79 மெடல்கள், 71 சான்றிதழ்கள், 4 பரிசுகள், 7 விருதுகள் என 82 மாரத்தான் போட்டிகளில் இதுவரை 1205 கிலோ மீட்டர்களைக் கடந்திருக்கிறான் ஒரு 7 வயதுச் சிறுவன். தாம்பரம், நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விசு, விஜயலட்சுமி ஆகியோரின் மகன் சர்வேஷ்.  மழலை மாறாத சர்வேஷ் தனது 4 ஆம் வயதில் கடலூரில்  நடந்த  குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டியில் பங்கேற்று முதன் முதலாக இரண்டாம் பரிசு பெற்றார். ஏவிடி நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் தன் தந்தையோடு, சர்வேஷ் படிக்கும் சாய்ராம் பள்ளித் திடலில் தினமும் 2 கிலோ மீட்டர் ஓடுவாராம்.

குழந்தையின் ஆர்வத்தை பார்த்து மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள  அழைப்புகளும் தேடி வந்ததுண்டு. சில முறை தோல்வியடைந்து துவண்டுபோய் ‘அப்பா வேண்டாம்பா’ என்று அழுதாலும்,  ஒரு நாளும் ஆர்வத்தையும், உழைப்பையும் விட்டதில்லை. சென்னையில் நடந்த மாரத்தான் போட்டில் முதலில் தோற்றாலும், பின் விடாமுயற்சியால், 100 நாளில் ஓடும் சவாலில் 206 கிலோ மீட்டர் ஓடி முடித்தார். இது போல் 7 முறை அல்ட்ரா ரன்னிங் போட்டிகளில் பல சவால்களை எளிதாக எதிர்கொண்டவர்.

தமிழகத்தின் மாரத்தான் வீரர்களின் பட்டியலில் சர்வேஷ் பெயர் இடம்பெற்றிருக்கிறது. பெசன்ட் நகரில் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தானில் பங்கேற்று பெறியவர்களையும் தாண்டி முதல் பரிசை வென்றார். ஓட்டத்தில் இருக்கும் ஆர்வத்தைப் போல் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் அதிகம். கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

மாரத்தான் இருக்கிறதோ இல்லையோ தினமும் பயிற்சியை விடாத சர்வேஷின் கனவு உசேன் போல்ட் போல் ஆவதாம்.!.

- செ.அன்புச்செல்வி

Share
 

முந்தைய மாத இதழ்

சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே! சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே! சோர்ந்து நீயும் இருந்துவிடாதே சோம்பல்தான் வளரும் - உன்னைச் சார்ந்து இருக்கும் நண்பருக்கென்றும் சங்கடமே விளையும்.   மேகம் வானில் சோர்ந... மேலும்
தேசியக் கல்விக் கொள்கை குறித்து வாசகர்கள் கருத்து தேசியக் கல்விக் கொள்கை குறித்து வாசகர்கள் கருத்து ஏழ்மை வரையரையிலும் பல்வேறு ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தேன். அதனால் எனக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டுமே சரியாக வரவில்லை. ஆறாம் வகுப்பில் எனது... மேலும்
தவளை கத்தினால் மழை வருமா? தவளை கத்தினால் மழை வருமா? அ.இளங்கோவன் இந்த ஆண்டும், எப்போதும்போல் கோடை விடுமுறைக்கு தன் தாத்தாவின் சிற்றூருக்கு வந்திருந்தாள் அந்தச் சிறுமி. மலைப்பகுதியை ஒட்டிய ச... மேலும்
செய்து அசத்துவோம் - அழகிய பறவைகள் வீடு செய்து அசத்துவோம் - அழகிய பறவைகள் வீடு வாசன் தேவையான பொருள்கள்: 1.            ஒரு நீள் வடிவ அட்டைப்பெட்டி, 2.            செவ்வக வடிவத்தில் தங்களுக்குப் பிடித்தமான நிறத்திலான ... மேலும்