Home ”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?”
வெள்ளி, 20 செப்டம்பர் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உண்மையான பிறந்தநாள் விழாக்கள் உண்மையான பிறந்தநாள் விழாக்கள் தமிழகத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, மாநில உரிமை காத்த பெருமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் (செப்-15), சுயமரியாதையும், பகுத்தற... மேலும்
மகிழ்ச்சிச் செய்தி மகிழ்ச்சிச் செய்தி இம் மாதம் (செப்டம்பர் 21, 22) அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் "மனிதநேய & சுயமரியாதை மாநாட்டில்" 'பெரியார் பிஞ்சு' இதழ் குறித்தும், பெரி... மேலும்
எதற்கு? எதற்கு? நிலவில் மனிதன் வாழ்வதற்கு பாதைபோடச் சொல்லும் ‘ நிலவுக்கலன் 2 ‘ (சந்திராயன்) விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்-பட்ட ‘சந்திரயான... மேலும்
”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?”
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான்.

“அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி! அதில் 7ஆவது குறளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது என்ன என்று சொல்லு பார்க்கலாம்” என்றான்.

“சரி, பள்ளியில் ஏதாவது சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஏதாவது நமக்கு தெரிந்த குறளாகத் தான் இருக்கும்’ என்று நினைத்து கொண்டு...

“அந்த குறள் முதல் சொல், கடைசிச் சொல் இரண்டும் சொல்லு நான் பதில் கண்டுபிடிக்கிறேன்” என்றேன்.

“முதல் சொல் ‘யாதானும்’ “கடைசிச் சொல் ‘வாறு’ “என்றான். நான் ‘பெபே’ என்று விழித்து விட்டு, “சரிடா நீயே பதில் சொல்லு” என்று கேட்டேன்.

அவன் “அந்தக் குறள்...

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு

இதன் பொருள்

நல்லா படித்தவருக்கு எந்த நாடும் அவரோட சொந்த நாடு போலத்தான்; எந்த ஊரும் அவரது சொந்த ஊர் தான்; அப்படி இருக்க சிலர் ஏன் சாகும் வரை கூட ஒழுங்காக படிக்க மாட்டேன் என்கிறார்கள்.

இதன் சிறப்பு _ இதில் ‘துணைக்கால்’ எழுத்து மொத்தம் 11 முறை வரும்” என்றான்.

“ஆகா சூப்பரர்டா உங்க மிஸ் சொல்லிக் கொடுத்தாங்களா, நல்லது” என்றேன்.

அதற்கு அவன், “இல்லப்பா free time நானே திருக்குறள் எடுத்து படிப்பேன். அப்படி இதை நானே தான் கண்டு பிடித்தேன்” என்றான்.

எனக்கு உண்மையில் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. உடனே swiggy மூலம் ஒரு சிக்கன் பர்கர் ஆர்டர் செய்து கொடுத்தேன்.

- டி.எஸ்.கிருஷ்ணவேல்

Share
 

முந்தைய மாத இதழ்

சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே! சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே! சோர்ந்து நீயும் இருந்துவிடாதே சோம்பல்தான் வளரும் - உன்னைச் சார்ந்து இருக்கும் நண்பருக்கென்றும் சங்கடமே விளையும்.   மேகம் வானில் சோர்ந... மேலும்
தேசியக் கல்விக் கொள்கை குறித்து வாசகர்கள் கருத்து தேசியக் கல்விக் கொள்கை குறித்து வாசகர்கள் கருத்து ஏழ்மை வரையரையிலும் பல்வேறு ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தேன். அதனால் எனக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டுமே சரியாக வரவில்லை. ஆறாம் வகுப்பில் எனது... மேலும்
தவளை கத்தினால் மழை வருமா? தவளை கத்தினால் மழை வருமா? அ.இளங்கோவன் இந்த ஆண்டும், எப்போதும்போல் கோடை விடுமுறைக்கு தன் தாத்தாவின் சிற்றூருக்கு வந்திருந்தாள் அந்தச் சிறுமி. மலைப்பகுதியை ஒட்டிய ச... மேலும்
செய்து அசத்துவோம் - அழகிய பறவைகள் வீடு செய்து அசத்துவோம் - அழகிய பறவைகள் வீடு வாசன் தேவையான பொருள்கள்: 1.            ஒரு நீள் வடிவ அட்டைப்பெட்டி, 2.            செவ்வக வடிவத்தில் தங்களுக்குப் பிடித்தமான நிறத்திலான ... மேலும்