Home அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்!
சனி, 17 ஆகஸ்ட் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
கதை கேளு... கதை கேளு : அன்பால் உருவான பாலம் கதை கேளு... கதை கேளு : அன்பால் உருவான பாலம் விழியன் இரவு முழுதும் சியா எறும்பு தூங்கவில்லை. யாரையும் தூங்கவிடவும் இல்லை. தன் அறையில் இருந்த எல்லா எறும்புகளும் மாறி மாறி கேள்விகள் கே... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழைப் படிப்பது போல, வித்தியாசம... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம் சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம் ஊருக்கு ஒதுக்குப்புறம், பாழடைந்த மண்டபம். அதில் வௌவால் ஒன்று குடியிருந்தது. அது இருட்டியதும் வெளியில் சென்று சுற்றித் திரிந்து இரைதேடித... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகள் - சிவக்குமார், ராஜபாளையம் மேலிருந்து கீழ் 1.            இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் பெண் பிரதமர் (4) 2.            இந்தச் ச... மேலும்
அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்! அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்! உடுமலை சிறிய உருவங்கள்; பெரிய சிந்தனைகள்! பழகுமுகாமின் நான்காம் நாளில் (9.5.19) தஞ்சை சரபோஜி அரண்மனைக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது, திட... மேலும்
தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி அந்தக் கணினி செஸ் ஆடியபோது விஸ்வநாதன் ஆனந்த் வாய் பிளந்து நின்றார். அதைப் பற்றிக் கேட்டபோது “ கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது” என்றார். கூக... மேலும்
அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

உடுமலை

சிறிய உருவங்கள்; பெரிய சிந்தனைகள்!

பழகுமுகாமின் நான்காம் நாளில் (9.5.19) தஞ்சை சரபோஜி அரண்மனைக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது, திடீரென்று ’பஞ்ச்’ வசனங்களைச் சொல்லத் தொடங்கிவிட்டனர். பெரியார் பிஞ்சு தியானேஸ்தான் “மை நேம் இஸ் மைனா; அயாம் ஃப்ரம் சைனா!” என்று சொல்லித் தொடங்கி வைத்தான். தனக்குப்பிடித்த நுங்கு சாப்பிடுவதைக்கூட ஒத்திவைத்துவிட்ட இளந்தளிர், “ஏய் மாமி; இங்க இல்ல சாமி!” என்று பஞ்ச் வசனத்தை கொஞ்சம் கொள்கைப் பக்கமாக திருப்பி வைத்தார். பெரியார் பிஞ்சு சீனிவாசன், “ஒரு ரூபாய்னா காசு; பெரியாருன்னா மாசு!” என்று சூழலுக்கு இன்னும் கொஞ்சம் சுதி ஏற்றி வைத்தார். சுற்றி இருந்த பிஞ்சுகள் ’பஞ்ச்’ வசனம் பேசுகின்ற இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். தொடர்ந்து “சாப்பிடறதுன்னா பூமரு; கடவுள்னா கொஞ்சம் ஓவரு” என்று எழிலன் சொல்ல, தண்மதி “கடவுள்னா வெறும் கல்லு; அம்மா சொல்றதுதான் நல்ல சொல்லு!” என்று இரண்டாவது ‘பஞ்ச்’சை சொல்லி முடித்தார். கவிஞரால் ‘புதியவன்’ என்று பெயரை மாற்றிக் கொள்ளும்படி பரிந்துரைக்கபட்ட; ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீஹரி, “நாங்க இருப்பது பூமி; இங்கு இல்ல சாமி!” என்று சொல்லி பூரிப்படைந்தான். மீண்டும் இளந்தளிரிடம் காதுகொடுத்தால், “மம்மி; கொடுத்த நுங்கு கம்மி!” என்று சொல்லி அய்ந்து சுளைகள் நுங்கு சாப்பிட்ட பிறகும் தனது நுங்கு தாகம் தணியவில்லை என்பதை சூசகமாக உணர்த்தினார். “நீ பாப்பானுன்னா; நான் பெரியார்!” என்று சூழலை மேலும் சூடேற்றினார் தண்மதி! அந்தச் சூடு பழகுமுகாம் வளாகத்திற்குள் நுழையும் வரையும் தொடர்ந்தது. அவர்களது சிந்தனை வற்றாத நதியைப் போல பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தது.

வீதி நாடகமும்! விழுந்து விழுந்து சிரித்த பெரியார் பிஞ்சுகளும்!

பழகுமுகாமின் நான்காம் நாள் மாலை சிந்தனைக்கும், சிரிப்புக்கும் விருந்தளித்து பிஞ்சுகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது  தெற்குநத்தம் சித்தார்த்தன்-_பெரியார் நேசன் குழுவினரின் “வந்து பாருங்கள் தெரியும்” என்ற வீதிநாடகம் ‘ஆரியர்கள் வருகையும் திராவிடர்கள் வீழ்ச்சியும்’, ’பார்ப்பனர் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்’, ’கிரிக்கெட் மோசடிகள்’, ’கிராமத்தில் கிரிக்கெட்’, ’கிராமத்தில் பிள்ளையார்’, ’கிறித்துவ மதத்தில் மூடநம்பிக்கைகள்’, ’தர்கா மோசடி’ என்ற 7 தலைப்புகளில் நடத்திக் காட்டப்பட்டது. நாடகத்தில் நடித்த வீதிநாடகப் பயிற்றுநர்கள் தெற்குநத்தம் சித்தார்த்தன், பெரியார் நேசன், நடிகர்கள் ராஜவேல், ரமேசு, செந்துறை மதியழகன் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்து பிஞ்சுகளின் நெஞ்சைக் கொள்ளையடித்தனர்.

“சொந்தமாக நாடகம் எழுதி நடித்துக் காட்டிய பெரியார் பிஞ்சுகள்’’

பழகுமுகாமின் நிறைவு நிகழ்ச்சியில் (10.05.2019) யாருடைய வேண்டுகோளும் இன்றி, தன்னுணர்வால் உந்தப்பட்டு, “ஸ்டெர்லைட் ஆலையும்; விவசாயமும்’’ என்ற தலைப்பில் ஓர் அருமையான மேடை நாடகத்தை நடித்துக்காட்டிய  சந்தோஷ், புதியவன் (ஸ்ரீஹரி), அவனிகோ இளந்திரையன், தியனேஷ், தமிழ் அமுதன்  ஆகியோர் அனைவரின் பாராட்டுகளையும்  அள்ளிச் சென்றனர். குறிப்புப் புத்தகத்தில் பழகுமுகாம் நிகழ்வுகளை முறையாக பதிவு செய்திருந்த அவனிகோ இளந்திரையன் மற்றும் நிகழ்ச்சியின் இடையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்த பாவனாவுக்கு   ஆசிரியர் தாத்தா எழுதிய “வாழ்வியல் சிந்தனைகள்’’ புத்தகங்களை பரிசாக அளித்து மகிழ்ந்தார் மானமிகு வீ.அன்புராஜ்!

மீண்டும் அடுத்த ஆண்டில் என்னென்ன-வெல்லாம் வேண்டும் பழகு முகாமில் என்று ஒரு பெரும் பட்டியல் பிஞ்சுகளிடம் இருக்கிறது. அவற்றை நிறைவு செய்யும் வகையில் அடுத்த நிகழ்வைத் திட்டமிடுவதுதான் இப்போதைய சவால்!

நிறைவு

Share
 

முந்தைய மாத இதழ்

சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா? சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா? சிகரம் காலையில் எழுந்தவுடன் வீட்டிற்குமுன் பெண்கள் சாணி கலந்த நீரைத் தெளிப்பார்கள். கிராமங்களைப் பொறுத்தவரை இது எல்லா வீடுகளிலும் கடைப்பி... மேலும்
"தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்” கரும்பின் சுவை நமக்குத் தெரியும். கரும்பின் சத்து இது... இது... இன்னது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதுபோல இங்கே ஆங்கிலத்தில் பேசுவதற... மேலும்
புவியை ஆளலாம்! புவியை ஆளலாம்! காலை மாலை வேளைகளில் நடை நடக்கலாம்! காற்று வாங்கி கடற்கரையில் களைப்பைப் போக்கலாம்! நூலகத்தை நாடிப் படித்து அறிவில் உயரலாம்! நுண்ணறிவு... மேலும்
தேசியக் கல்விக் கொள்கை - உங்கள் கருத்து என்ன? தேசியக் கல்விக் கொள்கை - உங்கள் கருத்து என்ன? கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் உருவாக்கிய புதிய தேசியக் கல்விக் கொள்கை _ -2019க்கான வரைவை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. கல்வியாளர்க... மேலும்
உயர்வு உயர்வு ‘அறிவும் திறனும் நிறைந்திருந்தால் அகிலம் தன்னில் உயர்ந்திடலாம் - எனும் செறிவாம் உலகக் கருத்தினிலே சிறிய மாற்றம் நாம்காண்போம்;   அறிவு... மேலும்