Home எதற்கு?
வெள்ளி, 18 அக்டோபர் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு எண்ணிப்பார் ஏழு வேறுபாடு விடைகள்: 1. வீட்டின் புகை கூண்டு, 2. பந்து, 3. வாத்தின் இறக்கை, 4. வண்டு, 5. சிறுமியின் தொப்பி, 6. வீட்டின் கதவு, 7. நாய்குட்டி உடலிலுள்ள... மேலும்
பிஞ்சு வாசகர் மடல் பிஞ்சு வாசகர் மடல் “பிப்ரவரி 2019 பெரியார் பிஞ்சு இதழில் ‘விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்று வெளியாகி இருந்தது. விட்டில் பூச்சி எப்ப... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்! காரணமின்றி ஏற்காதீர்கள்! கண்படுமோ... பிறர் கண்படுமோ... -சிகரம் திருஷ்டி  சுற்றிப் போடுதல் சரியா? கிராமப்புறங்களில் திருஷ்டி சுற்றிப் போடுதல் என்பது வழக்கில் உள... மேலும்
விந்தைப் பெரியார் விந்தைப் பெரியார் சாதிகளை வெறுத்தார் சாத்திரத்தை மறுத்தார் வேதியத்தை வெறுத்தார் விதிவலியை மறுத்தார்   சடங்குகளை வெறுத்தார் சங்கடங்கள் அறுத்தார் மடமைக... மேலும்
அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
எதற்கு?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

நிலவில் மனிதன் வாழ்வதற்கு பாதைபோடச் சொல்லும் ‘ நிலவுக்கலன் 2 ‘

(சந்திராயன்)

விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்-பட்ட ‘சந்திரயான் 2’ விண்கலம் பூமியின் வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதைக்குள் சென்றுள்ளது. .

நிலவுக்கலன் என்னும் ‘சந்திரயான் 2’ விண்கலம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாகும். அதாவது, தரையிறங்குவதற்காக உள்ள ஒரு கலனையும், சுற்றுவட்டப்பாதையிலிருந்து ஆய்வு செய்வதற்காக செயற்கைகோள் போன்ற ஒரு கலனையும், நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக ஒரு வாகனத்தையும் கொண்டுள்ளது.

இம் மூன்று பகுதிகளும், நிலவில் ஆராய்ச்சி-களை மேற்கொள்வதற்குரிய ஆய்வுக் கருவிகளை தனித்தனியே கொண்டிருக்கும். அவற்றைப் பயன்படுத்தி, நிலவில் தண்ணீர், தாதுக்கள் இருப்பு போன்றவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.

‘சந்திரயான் 2’ விண்கலமானது, ‘ஜிஎஸ்எல்வி மார்க் 3’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் முனைப்பகுதியில் ஆய்வுக்கலன் வைக்கப்-பட்டுள்ளது.

ஜூலை 22-ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய ‘சந்திரயான் 2’ விண்கலம், ஆகஸ்ட் 15-அன்று நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. பிறகு இது நிலவைச் சுற்றிவந்து செப்டம்பர் மாதம் 6 அல்லது 7ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்திலுள்ள இரண்டு மிகப் பெரிய பாறைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்துருவத்தின் முக்கியத்துவம்

"தடையற்ற தொலைத்தொடர்பு, கற்பாறைகள் அற்ற நிலப்பரப்பு, சூரிய மின்கலன் மூலம் விண்கலத்தை இயக்குவதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வசதி ஆகிய காரணங்களினால்தான் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்க முடிவுசெய்துள்ளோம்" என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நிலவில் மனிதர்களின் குடியிருப்புக்குச் சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தென்துருவம் கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் முதல் முறையாக விண்ணுக்கு அனுப்பிய ‘பேரேஷீட் விண்கலம்’ இதே பகுதியில் தரையிறங்கும்போதுதான் விபத்தில் சிக்கியது. இருந்தபோதிலும், நிலவின் வேறுபட்ட பகுதிகளில் விண்கலங்களை தரையிறக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டிய அவசியம் உள்ளதாக ‘இஸ்ரோ’ கூறுகிறது.

‘ஜிஎஸ்எல்வி மார்க் 3’ ராக்கெட் சிறீஅரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட 15 நிமிடங்களில், ‘சந்திரயான் 2’ விண்கலம் சுற்றுவட்டப் பாதையில் வலம் வர ஆரம்பித்தது. பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்ததும், ‘சந்திரயான் 2’ விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதியிலிருந்து லேண்டர் தனியே பிரிந்து தென்துருவத்தில் தரையிறங்கும்.

ஆர்பிட்டரிலிருந்து தனியே பிரியும்போது, நொடிக்கு 100 கி.மீ. வேகத்தில் சென்று-கொண்டிருக்கும் லேண்டர், அடுத்த 15 நிமிடங்களில் தனது வேகத்தை நொடிக்கு 30 கி.மீ. வேகத்துக்கு குறைப்பதே இஸ்ரோ இதுவரை கையாண்டதிலேயே மிகவும் சவாலான காரியமாக இருக்கும்” என்று கூறுகிறார் சிவன்.

மெதுவாகத் தரையிறங்கிய பிறகு, ரோவர் ஒரு நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் வேகத்தில் நகர்ந்து நிலவின் பரப்பை ஆய்வு செய்யத் தொடங்கும். ஆனால், இந்த ரோவர் வாகனம் தனது ஆயுட்காலத்தில் மொத்தமாக 500 மீட்டருக்கு மேலாக நகராது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவிலுள்ள தாதுக்கள் குறித்த ஆராய்ச்சியை ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளும்,  நிலவில் ஏற்படக்கூடிய அதிர்வுகள் குறித்து லேண்டரிலுள்ள கருவிகளும் ஆய்வுகளை மேற்கொள்ளும். அதே சூழ்நிலையில், ஆர்பிட்டர் கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அதன் வேகத்திலேயே சுற்றிக்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும்.

‘சந்திரயான் 2’ திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக 603 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், மொத்த திட்ட செலவில் 80 சதவிகிதத்தை நாட்டின் தனியார் நிறுவனங்கள் பூர்த்தி செய்துள்ளன. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை வடிவமைப்பதற்காக மொத்தம் 375 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இதிலும் 60% தொகையை 120 தனியார் நிறுவனங்கள் பகிர்ந்துகொண்டு பங்களித்துள்ளன.

"நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இந்த சந்திரயான் 2 திட்டம் முன்மாதிரியாக விளங்கும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சிவன். இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள், புயல்களிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கும், கிராமப்புற இந்தியாவிற்கான ‘பிராட்பேண்ட்’ இணைப்பைக் கொண்டுவருவதற்கும் உதவியதைப் போன்று, நிலவை ஆய்வு செய்யும் ‘சந்திரயான் 2’ திட்டமும் மனிதகுலத்திற்கு உதவும் தகவல்களை வெளிக்கொணரும் என்று எதிர்பார்க்கலாம்.

Share
 

முந்தைய மாத இதழ்

கதை கேளு... கதை கேளு : கதகதப்பு கதை கேளு... கதை கேளு : கதகதப்பு பூராயணியும் மாலதியும் இளஞ்சிவப்பு நிற நீண்டபுல்லின் கீழே நீந்தியபடி முந்தைய தினம் பார்த்த சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். இருவ... மேலும்
செப்டம்பர் 16 - உலக அமைதி நாள் செப்டம்பர் 16 - உலக அமைதி நாள் அமைதி காப்போம்! ‘அணுவை ஆக்கப் பணிக்கன்றி அழிவுக் காகக் கொள்ளாதீர்’ அணுவின் ஆற்றல் அறிந்திட்ட அய்ன்ஸ்டின் அன்றே உரைத்திட்டார்;   குறு... மேலும்
தங்கத் தாத்தா! தங்கத் தாத்தா! தங்கத் தாத்தா எங்க தாத்தா தங்கத் தாத்தா எமக்கு வாய்த்த சிங்கத் தாத்தா எங்கள் வாழ்வில் ஏற்றம் தந்து எம்மைக் காத்த அன்புத் தாத்தா!   ... மேலும்
தந்தை பெரியார் தந்தை பெரியார் ஈரோடு ஈன்றெடுத்த தலைவரவர்! ஈடில்லா தியாகத்தில் இமயமவர்! மூடநம்பிக்கையை ஒழித்த முன்னோடி! முன்னேற்றப் பாதை காட்டிய கண்ணாடி! பெண்ணுரி... மேலும்
விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க! விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க! கடந்த இதழ் தொடர்ச்சி... சரவணா இராஜேந்திரன் விண்வெளியில் வீடு கட்டினால் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா? 1.            கதிரியக்கத் தா... மேலும்
செய்து அசத்துவோம் : அலங்கார விளக்குக் கூடு செய்து அசத்துவோம் : அலங்கார விளக்குக் கூடு தேவையான பொருள்கள்: 1.            உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வண்ணத்திலான சிறிது தடிமனான செவ்வக வடிவ காகிதம். 2.            காகிதம். ... மேலும்