புதன், 17 ஜனவரி 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
திறமை திறமை உயர்ந்த பனைமரம். அதன் ஓலை நுனியில் கூடுகட்டிக் கொண்டிருந்தது ஒரு தூக்கணாங்குருவி. தன் சின்ன அலகால் ஓலையின் ஓரத்திலிருந்து இழை எடுத்து பி... மேலும்
சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி உடுமலைப்பேட்டை மாணவரின் கண்டுபிடிப்பு! உடுமலைப்பேட்டையைச் சார்ந்த மாணவர் சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி ஒன்றை உருவாக்கி சிந்திப... மேலும்
வாடாத மலர்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கல்பனா சாவ்லா

பூமித்தாய் ஈன்ற மக்கள் கோடி - கோடி. அதில் பெண்ணென்று ஒரு பால் அமைத்து மனித குலத்தைக் கோடானு கோடி ஆண்டுகளாய் வாழ வைக்கிறாள். பெண் குலத்திற்கு அவலங்களை விட சாதனைகள் பெருகிவரும் காலமிது. விண்வெளியில் பாலம் அமைத்து, திறமையாய்ச் சாதித்த கல்பனா சாவ்லா - பால்வழி அண்டத்தினைத் தொட்ட முதல் இந்தியப் பெண் குடிமகள் என்ற பேற்றைப் பெற்றவர்.

1961 ஆம் ஆண்டில் பிறந்த கல்பனா சாவ்லா ஹரியானாவிலுள்ள கர்னலில் வளர்ந்து ஆண்களே வியக்கும் வகையில் பெண்-குலத்திற்குப் பெருமை சேர்த்தார். வாழ்க்கையையே பந்தயமாக்கும் மானிடர் உலகில் விஞ்ஞானத்தைக் குதிரையாக்கி விண்வெளியில் சிந்தைக்கெட்டா தூரம் பறந்து, அல்லும், பகலும் அயராதுழைத்து விண்-கலத்தைச் சோதனைக் களமாய் ஏற்று முதலில் 19.11.1997 இல் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார். அடுத்து 16.1.2003 இல் சென்றார். அய்ந்தாண்டில் இரண்டாவது சுற்று விண்-வெளிப் பயணம். யாருக்கு வாய்க்குமிந்த அரிய வாய்ப்பு. கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தவும் ஒரு திறன் வேண்டும்.

16 நாள்கள் ஆய்வின் முடிவுகள் மனித உடல் குறித்த ஆய்வு. புற்றுநோய் செல் வளர்ச்சி என்று கட்டுரைக்கெட்டாத 80 ஆய்வுகளைத் தொகுத்த ஏழு விஞ்ஞானிகளில் ஒருவராய் இருந்தார். ஆய்வுகளின் தொகுப்பு ஆனந்தத்தின் எல்லையை நெருங்கியது.

2003 பிப்ரவரி - 1 சனிக்கிழமை கென்னடி விண்வெளி மய்யம் தரையிறங்க வேண்டிய விண்கலத்தை வரவேற்க உற்சாகத்துடன் காத்திருந்தது. விண்கலம் பூமியின் புவியீர்ப்பு விசைக்குள் இறங்கியது. இரண்டு இலட்சம் அடி உயரத்தில், 20 ஆயிரம் கி.மீ வேகத்தில், விண்கலத்தின் வால் பகுதி ஹைட்ரஜன் அழுத்தத்தால் புகையத் தொடங்கியது. 16 நிமிடங்கள் புகைந்து, பின் பேரிடியென வெடித்துச் சிதறியது. டெக்சாஸ் நகரில் கொலம்பியா யு.எஸ் ஓடம் துகள் துகளாய்ச் சிதறி விஞ்ஞான உலகை உலுக்கியது. கென்னடி விண்வெளி மய்யம் இலவு காத்த கிளியாய் சோகத்தில் குலுங்கியது.

40 க்கு மேல் மரணம் அபூர்வமற்றதாகி விட்ட காலமிது. 42_இல் மரணத்தைத் தழுவிய கல்பனா சாவ்லா விண்ணில் பிப்ரவரி 2- இல் சாம்பலானது பெண்ணின வானில் மறையாத நட்சத்திரம். சாதனைப் பெண்களுக்கு எடுத்து22காட்டாய்க் கிடைத்த வீராங்கனை. உலக விஞ்ஞானி. அழகிய சிரித்த குழந்தை மனம். கொஞ்சும் பஞ்சாபி மொழி. தெளிவான அறிவியல் ஆங்கிலம். இனி நமக்கு நேரில் இல்லை. சாதனைப் பட்டியலில் மட்டுமே!

வீரம், உழைப்பு, சாதனைக்குப் பரிசாய் இன்றும் ஆண்டு தோறும் கல்பனா சாவ்லா பெயரில் சாதனை விருதுகள் வழங்கப்படுகிறது. ஆறுதல் இல்லையென்றாலும் அடுத்தடுத்துக் காண்போம்! கல்பனா சாவ்லாக்களை.

- நா.சுப்புலட்சுமி,
திருப்பத்தூர்

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017