சனி, 18 நவம்பர் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
வண்ணத்துப்பூச்சி வண்ணத்துப்பூச்சி பொன்வண்டின் சகோதரி வானவில் தீட்டிய ஓவியம் இயற்கையின் சத்தமில்லா விமானம் காற்றின் விசிறி எழிலின் எடுத்துக்காட்டு இன்பத்தின் குதியாட்டம... மேலும்
செய்து அசத்தலாம் செய்து அசத்தலாம் தேவையான பொருட்கள்: 1.            சதுர வடிவ, நீல நிற, சற்று தடிமனான காகிதம். 2.            கருப்பு நிற ஸ்கெட்ச் பென். செய்முறை 1.      ... மேலும்
கருந்துளைகள் குறித்த ஆய்வில் இளந்தமிழ் அறிவியலர் கருந்துளைகள் குறித்த ஆய்வில் இளந்தமிழ் அறிவியலர் சேலம் சித்தனூரை சேர்ந்தவர் சதீஸ்குமார் சரவணன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் இன்றைக்கு உலக அளவில் முக்கியமான ஆய்வு ஒன்றினைச் செ... மேலும்
கதைகேளு கணக்குப்போடு
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

செல்வி, கவிதா, தேவி மூவரும் ஓவியம் வரைவதில் திறமை பெற்றவர்கள். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்று மாநில அளவில் நடைபெற இருந்த போட்டியில் பங்குபெற சென்னைக்குக் கிளம்பத் தயாராகினர்.

பள்ளி ஆசிரியை கீதாவின் துணையுடன் உற்சாகத்துடன் இரயில் நிலையம் வந்தனர். அங்கிருந்த எடை பார்க்கும் இயந்திரத்தைப் பார்த்த செல்வி, ஆசிரியையிடம் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை வாங்கினாள். எடைப் பொறியில் ஏறி நின்றாள். தானும் உடன் நிற்கப் போவதாகச் சொல்லிக் கொண்டே கவிதாவும் ஏறிநின்றாள். எடைப் பொறியிலிருந்து 66 கிலோ காட்டிய அட்டை வெளியில் வந்தது. அடுத்ததாக தேவி ஏறியதும், கவிதா தேவியுடன் ஏறி நின்று கொண்டாள். 56 கிலோ காட்டிய அட்டை வெளியில் வந்தது. மூன்றாவது, செல்வியும் தேவியும் சேர்ந்து ஏறி நின்றனர். 70 கிலோ காட்டிய அட்டை வெளியில் வந்தது.

மாணவிகளின் கையில் இருந்த அட்டையைப் பார்த்த ஆசிரியர், இவை உங்களின் எடையா என்றார் அதிர்ச்சியுடன். அம்மா, நாங்கள் இருவர் இருவராகச் சேர்ந்து நின்று பார்த்த எடை இது. இப்போது தனித்தனியாகப் பார்த்து வருகிறோம் என்று சொல்லி, மீண்டும் ஒரு ரூபாய் நாணயங்களை ஆசிரியையிடம் கேட்டனர். அதற்கு ஆசிரியை, தான் கணக்குப் பார்த்து உங்களின் தனித்தனியான எடையினைக் கூறுவதாகக் கூறியதும் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆசிரியை சொன்ன மாணவிகளின் தனித்தனியான எடை எவ்வளவு?

 

விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017