புதன், 17 ஜனவரி 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
திறமை திறமை உயர்ந்த பனைமரம். அதன் ஓலை நுனியில் கூடுகட்டிக் கொண்டிருந்தது ஒரு தூக்கணாங்குருவி. தன் சின்ன அலகால் ஓலையின் ஓரத்திலிருந்து இழை எடுத்து பி... மேலும்
சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி உடுமலைப்பேட்டை மாணவரின் கண்டுபிடிப்பு! உடுமலைப்பேட்டையைச் சார்ந்த மாணவர் சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி ஒன்றை உருவாக்கி சிந்திப... மேலும்
மார்ச்-8 மகளிர் தினச் சிந்தனை
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பெண்ணால் முடியும்

கல்வியில் ஆண்களைவிட பெண்களே முதலிடத்தில் உள்ளனர் என்பதை, ஒவ்வொரு வருடமும் வெளிவரும் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

படிப்பில் மட்டுமா? தொழில்துறை, காவல்துறை, கணினி, விண்வெளி, விஞ்ஞானம் என்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தருகின்றனர். இன்று உலகின் முக்கியத் துறையாக வளர்ந்துவரும் நிருவாகத்துறையிலும் பெண்களே முன்னிலையில் உள்ளனர்.

அண்மையில் பிசினஸ் வீக் என்னும் இதழ் 58,000 மேலாளர்களை எடுத்துக் கொண்டு நடத்திய ஆய்வில் சிறப்பான மேலாளர்கள் பெண்களே என்ற முடிவினைத் தந்துள்ளது.

25 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் மருத்துவராக இருந்து கவுன்சிலிங் பணியினைச் செய்து வருபவர் டாக்டர் பென் கார்சன். ஒரு சிக்கலுக்குத் தீர்வு சொல்வது, புதுப்புது உத்திகளை உருவாக்குவது, முடிவெடுப்பது, மற்றவர்களை ஊக்கப்படுத்துவதில் பெண்களே திறமைசாலிகள். பெண்கள் உயர் பதவிகளுக்குத் தகுதியற்றவர் என்பதோ, பரிசீலிக்காமலிருப்பதோ தவறான கண்ணோட்டம் என்கிறார்.

ஹார்வோர் பிசினஸ் ரிவ்யூ இதழ் தனது கட்டுரையில், பெண் நிருவாகிகளை அதிகம் கொண்டிருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் அதிக லாபத்துடன் இயங்குவதாகக் கூறியுள்ளது. பெண்கள் பல வகைகளில் ஆண்களைவிட சிறந்த நிருவாகிகளாகத் திகழ்கின்றனர் என்கிறார் நோபால் பரிசு பெற்ற கேரி பெக்கர்.

சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள ரீபர் என்னும் வளரும் மனிதவள (பி.ஸி) நிறுவனம் சிறந்த நிருவாகி ஆணா? பெண்ணா? என்ற கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. இதில், பெண்களே என்று கையை உயர்த்தியோர் 38% பேர், ஆண்களே என்றவர்கள் 29% பேர். ஒழுங்காக வேலை செய்தால் இருவருமே சிறந்த நிருவாகிதான் எனக் கூறியோர் 33% பேர். புரிந்து கொள்ளும் தன்மை பெண்களிடமே அதிகமாக உள்ளது என்றோர் 60%பேர். மிகத் தெளிவான திட்டமிடலுடன் இருப்பவர்கள் பெண்களே என 51% பேர் கூறியுள்ளனர்.

பெண்கள் எந்தவொரு புதிய இடத்திலும் சூழ்நிலைக்கேற்றவாறு தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வர். புரிந்து கொள்ளும் திறன் பெண்களிடமே அதிகமாக உள்ளது. பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் மட்டுமல்ல, ஆண்களைவிடத் திறமையாக நிருவாகம் செய்யும் வலிமையும் உடையவர்கள் என்றே பெரும்பாலான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த எதார்த்த சூழலை உணர்ந்து இளம்பருவத்திலேயே பெண் குழந்தைகளை உறுதிமிக்க உள்ளம் படைத்தவர்களாக உருவாக்க வேண்டும். இதை, பெற்றோர்கள் உணர வேண்டும். நம் சமூகம் இதுவரை விதித்த அறிவுத்தடைகளை நீக்கி, அறிவாற்றல் மிக்க புதிய பெண்ணினத்தைப் படைக்க வேண்டும்.

பெண் குழந்தைகளிடம் உள்ள அனைத்துத் திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் திணிக்காமல் அறிவாற்றலுடன் செயல்புரியும் துணிச்சல் உடையவர்களாக வளர்க்க வேண்டும். வெளி உலக அனுபவங்களுக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிர் நீச்சல் போடும் தைரியத்தினையும் ஊட்டி வளர்க்க வேண்டும்.

ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் கொடுத்து வளர்த்தால் நம் நாட்டை வளமாக்க உதவும் வலிமை வாய்ந்த ஆயுதங்களாக பெண்கள் திகழ்ந்து சாதனை படைத்து சரித்திரத்தில் இடம் பெறுவர்.

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017