Home மாமல்லபுரம் to ஆஸ்கர் விருது
ஞாயிறு, 31 மே 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை உயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை மனித குலத்திற்கு நல்வழிகாட்டியவர்களுக்கு நன்றிசெலுத்தும் வகையில் உலகம் எங்கும் சிலைகள் உண்டு. திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்... மேலும்
ஊரடங்கில் என்ன செய்கிறோம்? ஊரடங்கில் என்ன செய்கிறோம்? பெரியார் பிஞ்சுகளின் கடிதம் அன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு, உங்கள் பேரக்குழந்தைகளின் வணக்கம். நாங்கள் அனைவரும் நலம். உங்களுடைய நலம... மேலும்
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! விடைகள்: 1. சிறுவன் தொப்பியில் உள்ள இறகு, 2. வீட்டின் புகைக்கூண்டு, 3. நத்தை, 4. பட்டாம் பூச்சி, 5. மரம், 6. கோழியின் கொண்டை, 7. பறவையின்... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி இடமிருந்து வலம் 1. மே 1 _______ தினம் (6) 4. நாடு தழுவிய வேலைநிறுத்தம் ______ என்று அழைக்கப்படும். (3) 5. இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவ... மேலும்
வரைந்து பழுகுவோம் வரைந்து பழுகுவோம் ‘வாட் சப்’பிங்.. குச்சி மிட்டாய் சப்பிங்! புள்ளிகளை இனையுங்கள் - புள்ளினத்தைப் பாருங்கள் மேலும்
மாமல்லபுரம் to ஆஸ்கர் விருது
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

அண்மையில் மாமல்லபுரம் சீன அதிபரின் வருகையால் சிறப்புக் கவனம் பெற்றது. இப்போது ஒரு சிறுமியால் அனைவரின் பார்வையும் மீண்டும் மாமல்லபுரம் பக்கம் திரும்பியுள்ளது. தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் ‘ஸ்கேட்டிங்’ பலகையுடன் புறப்பட்டு வருகிறாள் 9 வயதுச் சிறுமி கமலி. கமலியின் தாய் சுகந்தி வருமானத்திற்கு மீன் விற்று பிழைப்பு நடத்துபவர். மகளின் ‘ஸ்கேட்டிங்’ ஆசையைப் புரிந்துகொண்டு, உறவினர் ஒருவர் மூலம் ‘ஸ்கேட்டிங்’ பலகையை வாங்கித் தந்தார். அதுதான் அவளை ஆஸ்கர் விருதுத் தேர்வுப் பட்டியல் வரை கொண்டு சென்றுள்ளது.

இந்தியா வந்த இங்கிலாந்து ஆவணப் படத் தயாரிப்பாளர் சாஷா என்பவர், கமலியை ‘ஸ்கேட்டிங்’ பலகையோடு அவள் செய்யும் சாகசங்களை வீடியோ எடுத்துள்ளார். அதனை ‘கமலி’ என்னும் பெயரில் ஆவணக் குறும்படமாக மாற்றினார். மும்பையில் கடந்த மே மாதம் நடந்த பன்னாட்டு குறும்பட விழா மற்றும் அட்லாண்டா திரைப்பட விழாக்களில் சிறந்த குறும்பட இயக்குநர் விருதை, சாஷாவின் ‘கமலி’ படம் பெற்றது. 2020ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கும் இப்படம் தகுதி பெற்றுள்ளது. இதுகுறித்து கமலி கூறுகையில்,

“படிப்பில், ஸ்கேட்டிங்கில் கவனமாக உள்ளேன். சாதிக்க ஆசை. மற்றவர்கள் எனக்கு உதவ வேண்டும்’’ என்கிறார். “வருமானத்திற்கு மீன் வறுவல் விற்றுப் பிழைக்கிறேன். கமலியை சிறந்த ஸ்கேட்டிங் வீராங்கனையாக உருவாக்க உறுதுணையாக நிச்சயம் அவருடன் இருப்பேன். எங்கள் வாழ்க்கைப் படம் ஆஸ்கர் விருதுத் தேர்வுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி” என்கிறார் கமலியின் தாயார். வறுமையை வென்று, சாதனை புரிந்துள்ள கமலி, அனைவருக்கும் எடுத்துக்-காட்டாக நிற்கிறார்... இல்லை சறுக்குகிறார்!

- ராகவ்


கணிதப் புதிர் - சுடோகு


 

Share
 

முந்தைய மாத இதழ்

சிறுவர் பாடல்  - புத்தகம்! சிறுவர் பாடல் - புத்தகம்! புத்தகமே அறிவுக்கு வித்து புகழினையே பெற்றுத்தரும் சொத்து வித்தகனாய் ஆக்குகின்ற பள்ளி வீண்சோம்பல் போய்விடுமே தள்ளி!   அறியாமை இருளினைய... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. அச்சம் வேண்டாம்; எச்சரிக்கை அவசியம்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. அச்சம் வேண்டாம்; எச்சரிக்கை அவசியம்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே! நலந்தானா? சென்ற மார்ச் முதல் வாரத்தில் வந்த ‘பெரியார் பிஞ்சு’ இதழில், மணியம்மை பாட்டியின் நூற்றாண்டு விழ... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே!உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’  இதழுடன் வித்தியாசமான  கோணங்களில்... மேலும்
கோமாளி மாமா-4 கோமாளி மாமா-4 ஓவியம், கதை: மு.கலைவாணன் விடுமுறை நாள்-மாலை நேரம். மாணிக்கமும், செல்வமும் வழக்கம்போல் பூங்காவுக்கு வந்து விட்டனர். கதை சொல்வதற்கு கோமாளி ... மேலும்