Home செயல் வடிவம்: நதிகளை இணைக்கத் திட்டம் தரும் மாணவி
புதன், 19 பிப்ரவரி 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
கமழி (ஓசோன்) ஓட்டை கமழி (ஓசோன்) ஓட்டை கதை கேளு.. கதை கேளு.. ஆண்டு 2075. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த மாநாடு இன்னும் சில நிமிடங்களில் துவங்கிவிடும். கமழிப் (ஓசோன்) படலத்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் : தேங்காய்க்குக் குடுமி ஏன்? காரணமின்றி ஏற்காதீர்கள் : தேங்காய்க்குக் குடுமி ஏன்? தேங்காய் உரிக்கும்போது அதற்குக் குடுமி வைப்பது சம்பிரதாயம், குடுமி வைக்காமல் முழுவதும் உரித்து விட்டால் சண்டை போடுவார்கள். தேங்காய் உடைக்கு... மேலும்
சாதித்த வீராங்கனை : விண்வெளிப் பயணத்தில் சாதித்த வீராங்கனை! சாதித்த வீராங்கனை : விண்வெளிப் பயணத்தில் சாதித்த வீராங்கனை! இந்த வாரத்தில், அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச், பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (அய்.எஸ்.எஸ்), ஒரு பெண்ணாக 289 நாள்களைக் கடந்த போத... மேலும்
உலக நாடுகள் : போர்ச்சுக்கல்(Portugal) உலக நாடுகள் : போர்ச்சுக்கல்(Portugal) அமைவிடமும் எல்லையும்: *           அய்ரோப்பா கண்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நாடு. *           வடகிழக்கில் ஸ்பெயினும், மேற்கிலும... மேலும்
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி : விடை - பரிசுகள் கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி : விடை - பரிசுகள் கடந்த ஜனவரி 2020 இதழுக்கான குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கேற்ற ஏராளமான பிஞ்சுகளில் சரியான விடை எழுதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: என்.சங்க... மேலும்
செயல் வடிவம்: நதிகளை இணைக்கத் திட்டம் தரும் மாணவி
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

இந்தியா விண்வெளித் துறையில் புதிய உயரத்தை எட்டி வருகிறது. பல குழந்தைகள் விண்வெளித் துறையில் பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர்தான் சபீதா. 14 வயதாகும் இவர், கரூர் அரங்கபாளையம் பகுதியிலுள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறார். கரூர் மாவட்டத்தில் முதல் மாணவியாகத் தேர்வு பெற்று. சில மாதங்களுக்குமுன் இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ளார். மேலும், இந்த ஆண்டுக்கான ‘மானக்’ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதுக்குத் தேர்வு பெற்ற இவரின் லட்சியத் திட்டம் பொதுநல நோக்கோடு திட்டமிடப்பட்ட ஒன்றாய் அமைந்துள்ளது. அது பல ஆண்டுகளாக அரசுகள் கூறிவந்த நதிகள் இணைப்புத் திட்டம்தான். அதற்கு எவ்வளவு செலவாகும் என்னும் திட்டத்தையும் தயாராக வைத்துள்ளார்.

“மத்திய அரசு நதிகளை இணைக்க 30 லட்சம் கோடி செலவாகும் என்கிறது. ஆனால், நான் தயார் செய்துள்ள திட்டத்தின்படி 3 லட்சம் கோடிதான் செலவாகும். அதாவது பூமிக்கு அடியில் ‘பைப் லைன்’ (குழாய் இணைப்பு) வசதிகளை மேற்கொண்டு நதிகளை இணைக்க முடியும்” என்கிறார். (நதிகளை இணைத்தல் அவசியமா? அவற்றால் இயற்கை மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டா என்ற கேள்விகள் இருப்பினும், சபீதா வகுக்கும் திட்டத்தில் அந்தப் பாதிப்புகள் இருக்குமா என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.)

சபீதாவின் இந்தச் செயல்முறை திட்டத்திற்-கு உதவியாக இருப்பவர் _ அவருடைய அறிவியல் ஆசிரியர். தன்னுடைய திட்டத்தை அரசு நிறைவேற்றினால் எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சமின்றி மக்கள் வாழ வழிவகுக்கும் என்கிறார் சபீதா. உலகில் தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் நடக்கும் என அறிவியலாளர்கள் கூறிவரும் நிலையில், அதற்கு இளம் அறிவியல் ஆர்வலராக புதிய திட்டத்தை முன்மொழியும் சபீதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன பிஞ்சுகளே!

மகிழ்

Share
 

முந்தைய மாத இதழ்

தாய்மொழியே உயர்வு! தாய்மொழியே உயர்வு! தெளிவாய் எதையும் சிந்திக்க தேர்ந்த மொழி-தாய் மொழியேதான்; எளிதாய்க் கற்றுப் புரிந்திடலாம்; ஏற்றம் பெற்றே வென்றிடலாம்;   உன்றன் முன்னோர... மேலும்
பொங்கல் விழா ! பொங்கல் விழா ! ஆரிய விழாக்களின் சாத்திரம் சடங்குகள் அண்டாது பிறக்கும்தைத் திங்கள் விழா! பாரினில் பகுத்தறி வோடுநம் தமிழரின் பண்பாடு பரப்பும்மெய்ப் பொங்... மேலும்
அமெரிக்காவிலிருந்து... ஆப்பிரிக்காவுக்கு உணவுப்பொட்டலம்! அமெரிக்காவிலிருந்து... ஆப்பிரிக்காவுக்கு உணவுப்பொட்டலம்! பாசத்திற்குரிய அருமை பேத்தி, பேரன்களே, எல்லோரும் போன மாதம் பெரியார் பிஞ்சு இதழில் எனது அமெரிக்கப் பயணம் பற்றியும் அதில் கண்ட விநோதங்களைப்... மேலும்
செயல் வடிவம்: நதிகளை இணைக்கத் திட்டம் தரும் மாணவி செயல் வடிவம்: நதிகளை இணைக்கத் திட்டம் தரும் மாணவி இந்தியா விண்வெளித் துறையில் புதிய உயரத்தை எட்டி வருகிறது. பல குழந்தைகள் விண்வெளித் துறையில் பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களு... மேலும்