Home சிறுவர் கதை : ப்யூஸ் போன பல்பு
திங்கள், 06 ஜூலை 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி தேவையான பொருட்கள்: 1. சிறிது தடிமனான செவ்வக வடிவ வெளிர் நீல நிற அட்டைகள் இரண்டு. 2. உருளையான சிறிது நீளமான குச்சி ஒன்று 3. அளவுகோல், 4.... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா? காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா? பெற்றவர்கள், பெரியவர்கள் ஏன் சில ஆசிரியர்கள் கூட மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வேண்டிக் கொண்டால் தேர்வு சிறப்பாக எழுதலாம் என்ற... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்) தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்) கடந்த இதழில் ஒத்துழைப்பு இணைப்புச்சொற்களை இணைத்தோம். இந்த இதழில்... சார்பு இணைப்புச் சொற்களைப் [Sub-Ordinate Conjunctions] பார்ப்போமா? சார... மேலும்
சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம் சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம் குதுவைத் தோட்டம் எப்பவும் ரொம்ப அழகாகவும், அமைதியாகவும் இருக்கும். தேவையில்லாத எந்தச் சத்தமும் அங்கு இல்லாததுனால பறவைகள் கத்துறது கூட அவ்வ... மேலும்
சிறுவர் கதை : ப்யூஸ் போன பல்பு
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கன்னிக்கோவில் இராஜா

“அடடா! மின்சாரம் (கரண்ட்) போயிடுச்சே” என வருத்தப்பட்டாள் ஆர்த்தி.

“என்னம்மா ஆர்த்தி, வீட்டுப்பாடம் எழுத முடியலையா?’’ என்று கேட்டபடி மெழுகுவத்தியை ஏற்றினார் அவளின் அம்மா.

அறை முழுவதும் வெளிச்சம் உண்டானது. உள் அறையில் ‘எமர்ஜென்சி’ விளக்கைப் போட்டார் அப்பா.

“அதுக்குத்தான் அப்பவே சொன்னேன். அணு உலை வந்தால் எல்லாம் சரியாயிடும்னு... அம்மாவும் பொண்ணும் அணு உலை ஆபத்து.. அணு உலை ஆபத்து..ன்னு போர்க்கொடி தூக்கினீங்க” எனக் கிண்டல் செய்தார் அப்பா.

“ஆமா. இவரு அமைச்சரு பாரு! இவர் சொன்னா அணு உலை வேண்டும். இல்லைன்னா வேண்டாம்” என அம்மாவும் பதிலுக்குக் கிண்டல் செய்தார்.

“அப்பா! ஜப்பான்ல சுனாமி தாக்கி, அணு உலைகள் வெடிச்சு, கதிர்வீச்சுப் பரவி, மக்களுக்குப் பேராபத்தை உண்டாக்கியது தெரியுமில்லே, உங்களுக்கு?” என்றாள் ஆர்த்தி.

“ம்..ம்.. தெரியும் படிச்சிருக்கேன்” என்றார் அப்பா.

“அப்ப, மின்சாரம் தயாரிக்க மாற்றுவழி இருக்கான்னு விஞ்ஞானிகள் யோசிக்கிறதே இல்லையா?” என்று ஆதங்கப்பட்டார் அம்மா.

“அம்மா! அணு உலை மூலமா மின்சாரம் தயாரிக்கும் வழி முறைக்கு மாற்றாக மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும், குப்பையிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க விஞ்ஞானிகள் முயன்று-கொண்டுதான் இருக்குறாங்க!” என்றாள் ஆர்த்தி.

“ஏற்கெனவே நீரிலிருந்தும், குப்பையிலிருந்தும் தயாரிக்கிறாங்க. விஞ்ஞானிகள் புது முயற்சியா மண்ணிலிருந்து மின்சாரம் பண்றாங்களா.. எப்படி?” என ஆர்வமாகக் கேட்டார் அம்மா.

“என்ன... நிலக்கரியோட ஆற்றலையும், மலையில் இருந்து விழும் அருவியின் ஆற்றலையும், பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வாங்க” என்றார் அப்பா.

“அப்பா! இது எல்லாமே ஏற்கெனவே செய்துகிட்டுத்தான் இருக்காங்க. அதற்கு ஈடாக நிலத்தின் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யலாம்” என்றாள் ஆர்த்தி.

“என்னது.. நிலத்தோட வெப்பத்தல மின்சாரமா? கேட்பதற்கு வியப்பா இருக்கே” என்றனர் இருவரும்.

“ஆமாம். உலகத்துல பல இடங்கள்ல புவி வெப்ப மண்டலங்கள் இருக்குது. அந்த இடங்களில் மேக்மா (விணீரீனீணீ) என்னும் உருகிய பாறைக்குழம்பு, மண்ணுக்கு அடியில் இருந்து மேலே உள்ள கழிவுப் பாறைகளில் தங்கியுள்ள தண்ணீரைக் கொதிக்க வைக்குது’’ என்று ஆர்த்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே...

“என்னது? பாறை தண்ணீரைக் கொதிக்க வைக்குதா?’’ என்று கேட்டார் அம்மா.

“ஆமாம்மா! இதுக்கே நீங்க ஆச்சரியப்பட்டா... இன்னும் சொல்லப் போறச் செய்தியைக் கேட்டா என்ன ஆவீங்கன்னே தெரியல’’ என்றாள் ஆர்த்தி.

“சரி, சரி. மீதியையும் சொல்லிடு ஆர்வத்தை அடக்கமுடியல’’ என்றார் அப்பா.

“அதாவது கழிவுப் பாறைகளில் தங்கியிருக்கிற தண்ணீரைக் கொதிக்க வைக்குது இல்லையா.. அந்தக் கொதித்த நீர், ஆவியாகி நிலத்துல ஏற்படக்கூடிய வெடிப்புகளால் உண்டான  பிளவுகளின் வழியே வெளியே வரலாம். இந்த வெடிப்புகளுக்கு மேல் கிணறுகளின் மீது மூடுவதைப் போல் மூடி போட்டு விட்டால் வேண்டிய அளவுகளில் அந்த நீராவியை நாம எடுத்து மின்விசை உற்பத்திக்கு உரிய “டர்பைன்” இயந்திரங்களைச் சுழலச் செய்து மின்சார உற்பத்தி செய்யலாம்’’ என்றாள் ஆர்த்தி.

‘ஓகோ!’ எனக் கண்களை அகல விரித்தார் அம்மா.

“அது மட்டுமல்ல, ஆழம் அதிகமாக ஆக.. ஆக.. வெப்பம் கூடும். 3000 மீட்டர் (9843அடி) ஆழத்துல 260 டிகிரி சென்டிகிரேடாக... அதாவது ஏறக்குறைய 492 டிகிரி ஃபாரன்ஹீட்டாக அதிகரிக்கும்’’ என்றாள் ஆர்த்தி.

“அப்ப இதற்கான ஆலைகளை அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்படுத்தி இருக்குமே’’ என்றார் அப்பா.

 

 

 

 

“1904ஆம் ஆண்டுல இத்தாலியிலதான் புவி வெப்பத்தைப் பயன்படுத்தும் ஆலை முதன்முதலாக ஏற்படுத்தினாங்க. அது இரண்டாம் உலகப் போரில் முழுவதுமாக அழிந்து போச்சு”

“அச்சச்சோ” என வருந்தினார் அம்மா.

“ஆனாலும், அதை மறுபடியும் உருவாக்கிட்டாங்க. அதுதான் இன்றுவரை பயன்பாட்டுல இருக்கு. அப்புறம் அமெரிக்கா பார்த்தது... அவங்க நாட்டுல இந்தப் புவிவெப்ப ஆலைக்காக மண்ணையும் பூமியையும் துளைக்க ஆரம்பிச்சாங்க. ஆனாலும் பலன் கிடைக்கல. முயற்சி செய்தாங்க. தோல்வி ஆச்சு. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தாங்க. 1956ஆம் ஆண்டுதான் அவங்க முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.”

“அதானே! முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு சொல்வாங்களே’’ என்றார் அம்மா.

“ம்...ம்...’’ என்று கட்டை விரலை உயர்த்தி அம்மாவுக்கு வாழ்த்துச் சொன்னார் அப்பா.

“நீராவியைப் பெறுவதற்காகத் துளைப்பது மிக மிகக் கவனமாகச் செய்ய வேண்டிய வேலை.,  கிணற்றை உடனே மூடாவிட்டால், உள்ளிருந்து வரும் நீராவி கட்டுக்கடங்காமப் போய்விடும்’’ என்றாள் ஆர்த்தி.

“அய்யய்யோ!’’ எனப் பயந்தார் அம்மா.

“முன்னாடி ஒருமுறை ஒரு கிணறு இப்படித்தான் நீராவியால உடைஞ்சு சிதறி, ஆயிரக்கணக்கான டன்கள் மண்ணை வானத்தை நோக்கி வாரி வீசிடிச்சாம். அந்தக் கிணற்றை மூட முடியவே இல்லையாம். இன்னைக்கும் பூமியின் உள்ளேயிருந்து நீராவி அதன் வழியாக வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்குதாம்!”

“அப்ப... கவனமாகச் செய்ய விஞ்ஞானிகள் முயற்சி எடுக்கலையா?’’ என்று கேட்டார் அப்பா.

“அதற்கான முயற்சியில்தான் பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் ஈடுபட்டுக்கிட்டே வர்றாங்களாம். அதுமட்டுமல்ல... நிலத்தின் பாதாளத்தில் அணுகுண்டுகளை வெடித்து அங்கே பெரிய நீர்த் தேக்கங்களை உண்டாக்கலாம் என்பது இன்னொரு திட்டமாம். இதன் மூலமா கனிமப் பொருள்களையும் எடுக்கலாமாம்! இந்த முறையில அணு மின்சாரத்தோட போட்டியிட்டுப் புவி வெப்ப மின்சக்தியை நிலைக்கச் செய்ய முடியும்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்’’ என்றாள் ஆர்த்தி.

“அட! எவ்ளோ பயனான ஆராய்ச்சி’’ என்றார் அம்மா.

“நிலக்கரியை எரித்து மின்விசை உற்பத்தி செய்யும்போது புகை உண்டாகுது. அந்தப் புகையால காற்றுக் கெட்டுப் போகுது. அதே போல, அணு உலைகளால் மின்சக்தி உற்பத்தி செய்யும்போது அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கக் கழிவுப் பொருள்கள் பல பிரச்சனைகளை உண்டாக்குது. இந்த மாதிரியான எந்தத் தொல்லையும் புவி வெப்ப மின்விசை உற்பத்தியில இல்லையாம்... இப்ப புரியுதா! நாங்க ஏன் அணு உலை வேண்டாம்னு சொன்னோம்னு’’ என்றாள் ஆர்த்தி.

“அட... அட... இந்த மின்சாரம் போய் இருட்டு வந்தாலும் உன்னோட இந்த விளக்கத்தால என்னோட அறிவுக் கண் பிரகாசமா ஒளிவிட ஆரம்பிச்சுடுச்சு. ஆனால், இதிலேயும் பூமிக்கடியில் அணுகுண்டுகளை வெடிக்கிறது, கனிமப் பொருள்களை எடுக்கிறதுன்னு பிரச்சினைகள் இருக்கு. அணு உலை வேண்டாம்னு சொல்லிட்டு, அணு குண்டுகளை வெடிக்கிறதுங்கிறது சரியான யோசனை இல்லையே! மனிதனின் மின்சாரத் தேவையைத் தீர்க்க, இன்னும் தீவிரமாக, ஆபத்தில்லாத வழிகளை யோசிக்கணும்.’’ என்றார் அப்பா.

“அட! ப்யூஸ் போன பல்புன்னு நெனைச்சுக்கிட்டு இருந்த அப்பாவையே ஒளிரச் செஞ்சிட்டுயே’’ எனப் பெருமையாகச் சொன்னார் அம்மா.

“என்னது?!’’ என அப்பா முறைக்க...

ஆர்த்தியும், அம்மாவும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

Share
 

முந்தைய மாத இதழ்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி? பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி? பாசத்திற்குரிய பேத்தி பேரன்களே, எப்படி இருக்கீங்க? உலகமே வீட்டுக்குள்ளே முடங்கி, ‘ஊரடங்கு, வீட்டில் முடங்கு’  என்றெல்லாம் உள்ள நிலையில், நீ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா? காரணமின்றி ஏற்காதீர்கள் - ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா? வாழைப்பழத்தை உறிக்கும்போது, அதில் சில பழங்கள் இரட்டையாக ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தப் பழங்களைச் சாப்பிடக்கூடாது என்று ஒதுக்கிவிடுவார்கள்.... மேலும்
கண்ணாடி! கண்ணாடி! எனக்கு எதிரே கண்ணாடி என்னைப் பார்த்தேன் முன்னாடி நினைத்த போதே என்னைப்போல் கணத்தில் காண மகிழ்ந்தேனே!   வலது கையால் செய்ததை மறதி ஏதும்... மேலும்
இலவசக் காற்று இத்தாலியைச் சேர்ந்த 93 வயதான ஒருவர், கோவிட்-19-ல் இருந்து மீண்ட பிறகு, மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் நேரத்தில் ஒரு நாள் வென்டிலேட்டர் பய... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழுடன் வித்தியாசமான கோணங்களில்... மேலும்