Home காரணமின்றி ஏற்காதீர்கள்! - ஆமை புகுந்த வீடு உருப்படாதா?
புதன், 08 ஏப்ரல் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
வீட்டுள் பறக்கும் விசிறிப் பறவை! வீட்டுள் பறக்கும் விசிறிப் பறவை! விட்டத்திலும் தலைகீழாய் வீட்டுள் தொங்கும் பறவை! ஒட்டிநிற்கும் சுவர்மீதும் ஒற்றைக்காலுப் பறவை!   எட்டவைத்தும் நடைபோட இயன்றிடாத பறவை... மேலும்
இசைப்போம் வாரீர்! - சித்திரச் சோலைகளே. இசைப்போம் வாரீர்! - சித்திரச் சோலைகளே. இசைக் குறிப்பு: விஜய் பிரபு சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே... / பபப / பதமப / பப பப / மபமக /  ரிகரிச சகம / சித்திரச்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - தந்தை எழுத்தைத் தலைப்பெழுத்தாகப் போடுதல்? காரணமின்றி ஏற்காதீர்கள் - தந்தை எழுத்தைத் தலைப்பெழுத்தாகப் போடுதல்? சிகரம் தந்தையின் பெயரிலுள்ள முதலெழுத்தைத் தங்கள் பெயருக்குத் தலைப்பெழுத்தாகக் கொள்வது  வழக்கில் உள்ளது. தந்தைதான் உயிரணுவைத் தருகிறான். ... மேலும்
கொரோனா தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்குப் பாதிப்பில்லை கொரோனா தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்குப் பாதிப்பில்லை மருத்துவர் இரா.கௌதமன், பெரியார் மருத்துவக் குழுமம் புதியதாக பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதால் தாய்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு... மேலும்
குறுக்கெழுத்துப்போட்டி சரியான விடையும் வெற்றிபெற்றோரும் பிப்ரவரி 2020 குறுக்கெழுத்துப்போட்டி சரியான விடையும் வெற்றிபெற்றோரும் பிப்ரவரி 2020 ச.குகன் இர.அறிவரசி நா.சங்கீதா மார்ச் 2020 சா.சாஜிதாபர்வீன் இரா.அன்புச்செல்வன், தூத்துக்குடி எம்.அஹ்மத் ஸலாவர் இர.அன்புச்செல்வன்,... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்! - ஆமை புகுந்த வீடு உருப்படாதா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சிகரம்

‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்னும் மூடநம்பிக்கை கிராமப்புற மக்களிடையே காணப்படுகிறது. இந்த மூடநம்பிக்கையின் விளைவால், ஆமை புகுந்த வீட்டை விற்கக் கூட முடியாது. காரணம், அதை வாங்க யாரும் முன்வர மாட்டார்கள்.

ஆமை என்பது நிலத்திலும் நீரிலும் வாழும் ஓர் உயிரினம். அதனால் யாருக்கும் எந்தக் கேடும் வராது. பாம்பு, கொசு, பூரான், தேள் போன்றவை கேடு தரக் கூடியவை. ஆனால், அவை வீட்டுக்குள் வந்தால் அந்த வீடு உருப்படாது என்று சொல்லாமல், எந்தத் தீங்கும் செய்யாத ஆமை வந்தால் மட்டும் அந்த வீடு உருப்படாது என்று நம்புவது முட்டாள்தனம் அல்லவா?

அப்படியென்றால் ஆமை புகுந்த வீடு என்பதற்கு வேறு பொருள் இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

ஆமை என்றதும் நமக்கு கடல் பகுதியும், மீனவர்களும் நினைவுக்கு வரலாம். நெய்தல் நிலப்பகுதியிலிருந்து வந்த சொலவடையோ என்றும் தோன்றலாம்.

ஆனால், பன்னெடுங் காலமகவே, தமிழர்கள் கடல்வணிகம் செய்தவர்கள். கடலில் நெடுந்தொலைவு பயணித்து உலகெங்கும் தங்கள் ஆளுமையைச் செலுத்தியவர்கள். அவ்வாறு கடல் பயணம் செய்வதற்கு உகந்த வழிகளை கடலில் காட்டும் வழிகாட்டிகள் கடல் ஆமைகள். எனவே, மீனவர்களுக்கும், கடலோடிகளுக்கும் ஆமைகள் மதிப்புக்குரிய உயிர்கள்.

பிறகு எப்படி இந்தச் சொல்லாடல் உருவாகியிருக்கலாம் என்று யோசித்தால், நிலப் பகுதிகளிலும், ஏரி, குளங்களிலும் ஆமைகள் உண்டு. இவை நிலத்தாமை எனப்படுபவை. இவை நிலத்தைத் துளைத்து உள் சென்று முட்டையிட்டு வசிக்குமாம். ஓரிடத்தில் ஆமை புகுந்தால் அங்கேயே வாழத் தலைப்பட்டு விடுமாம். இதனை அங்கிருந்து விரட்டுவது கடினமாக அன்றைக்கு இருந்தது என்றும், அதனால் நிலப் பகுதிகளில் இந்தச் சொலவடை உருவாகியிருக்கலாம் என்றும் சொல்கிறார் ஆய்வாளர் ஒரிசா பாலு. இன்று ஏரி, குளங்களையெல்லாம் அழித்து, மனிதர்கள் வீடுகள் கட்டிய பிறகு, தங்கள் இருப்பிடங்கள் ஒழிக்கப்பட்டதால் “மனிதர்கள் புகுந்த பகுதி உருப்படாது’’ என்று ஆமைகள் சொன்னால்... அது சரியாக இருக்கும். ஆமைக் கறியை மனிதன் சாப்பிடுகிறான். ஆமை புகுந்த மனிதனே நன்றாக இருக்கும்போது, வீடு உருப்படாது என்பது மூடத்தனமல்லவா?

ஆனால், உண்மையில் மனிதனை உருப்பட விடாமல் செய்யும் சில ஆமைகள் உண்டு. அவை, பொறாமை, கல்லாமை, இயலாமை, முயலாமை போன்றவை. பொறாமை உடையவன் அடுத்தவர் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் வயிறு எரிவான், கவலைப்படுவான். மாறாக, தான் முன்னேற முயற்சி மேற்கொள்ள மாட்டான். இப்படிப்பட்டவன் உருப்படவேமாட்டான்.

அதேபோல் கல்லாதவன், முயற்சி செய்யாதவன், எதையும் செய்யும் திறனில்லாதவன் உருப்பட மாட்டான். ஆக, இந்த ஆமைகள் நுழைந்த வீடு  அதாவது, பொறாமை, இயலாமை, கல்லாமை, முயலாமை ஒரு வீட்டில் உள்ளவர்கள் உள்ளத்தில் நுழைந்தால் அந்த வீடு உருப்படாது என்று வேண்டுமானால் அதற்குப் பொருள் கொள்ளலாம்.

ஒப்பிலியப்பன் என்பது ஒரு கடவுளின் பெயர். அதாவது, அந்தக் கடவுள் ஒப்பில்லாதவர் என்பது  அதற்குப் பொருள். ஆனால், ஒப்பிலியப்பன் என்பது நாளடைவில் உப்பிலியப்பன் என்றாகி, உப்பு இல்லாத உணவுகளை அந்தக் கடவுளுக்குப் படைக்கத் தொடங்கி, அப்படியே படைத்தும் வருகின்றனர்.

போகி என்பது இந்திரன் பெயர். மழையைத் தருபவன் இந்திரன் என்பதால் மழைப் பண்டிகையைப் போகிப் பண்டிகை என்றனர். ஆனால், நாளடைவில் போகி என்பதற்கு போக்கி என்று பொருள் கொள்ளப்பட்டு, அன்று வீட்டில் உள்ள பழையவற்றைப் போக்குதல் என்று எண்ணி பழைய பொருள்களைக் கொளுத்துகின்றனர். இவை போலத்தான் ஆமை புகுந்த வீடு என்னும் மூடநம்பிக்கையும் வந்துள்ளது. எனவே, ஆமை புகுவதால் மட்டும் அல்ல; ஆமையை வளர்த்தால்கூட அந்த வீடு கெட்டுப் போகாது. இதுவே உண்மை!

ஆசிரியரின் வாழ்த்து பிஞ்சுகளின் பிரச்சாரம்

வெள்ளக்கோவிலில், ஜனவரி 1 அன்று ஆசிரியர் தாத்தா அவர்கள் வழங்கிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பெரியார் பிஞ்சுகள் சாலையில் வடித்து அறிவியல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வெள்ளக்கோவில் ஒன்றியப் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சு.சிவகுமார்_புனிதா ஆகியோரின் மகள், பெரியார் பிஞ்சு பழகு முகாமில் பயிற்சி பெற்ற “பெரியார் பிஞ்சு’’ செந்தமிழரசி அவர்கள் தலைமையில், பெரியார் பிஞ்சுகள் அகில், தனின், வினிஸ் ஆகியோர் “2020ஆம் புத்தாண்டு அறிவியல் புத்தாண்டாக மலரட்டும்’’ என்று சாலைகளில் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரியார் பிஞ்சுகளின் இந்த முயற்சியை அப்பகுதியிலுள்ள பலரும் பாராட்டி ஊக்குவித்தனர்.<

Share
 

முந்தைய மாத இதழ்

ஓவியம் வரைவோம்! ஓவியம் வரைவோம்! சித்திரமும் கைப் பழக்கம் சிறந்துயரும் நல் வழக்கம் பத்திரமாய் மனம் அதனை பழக்கி வெல்கநீ பதக்கம்!   உள்ளம் உடலினை இணைத்திடும் உயரும் ஆற... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. :மணியம்மைப் பாட்டியின் நூற்றாண்டு பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. :மணியம்மைப் பாட்டியின் நூற்றாண்டு பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே! சென்ற ‘பெரியார் பிஞ்சு’ இதழ் மூலம் உங்களையெல்லாம் சந்தித்து, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் அருகில் உள்... மேலும்
2020 பிப்ரவரி இதழ் குறுக்கெழுத்துப் போட்டி - திருத்தப்பட்ட கட்டம் 2020 பிப்ரவரி இதழ் குறுக்கெழுத்துப் போட்டி - திருத்தப்பட்ட கட்டம் கடந்த இதழ் (பிப்ரவரி 2020) குறுக்கெழுத்துப் போட்டிக்கான கட்டங்களில் 8ஆம் எண் தவறான இடத்தில் குறிப்பிடப்பட்டுவிட்டது. எனவே, சரியான கட்டம் இ... மேலும்
திராவிட வாசகர் வட்டம் நடத்தும் - பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020 திராவிட வாசகர் வட்டம் நடத்தும் - பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020 * சிறுவர்களுக்கு ஆர்வமும் அறிவும் வளர்க்கும் வகையில் எந்த ஒரு பொருள் குறித்தும் கதை அமையலாம். * கதைகளில் கற்பனை / Fantasy கலந்து எழுதலாம்... மேலும்
குழந்தை வளர்ப்பு : குழந்தைகளைக் கண்டியுங்கள்! குழந்தை வளர்ப்பு : குழந்தைகளைக் கண்டியுங்கள்! இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்டிப்பதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படி கண்டிக்காமல் வளர்ந்தவர்கள்தாம், 'டீ... மேலும்
கணிதப் புதிர் சுடோகு கணிதப் புதிர் சுடோகு கடந்த இதழ் சுடோகு விடை: மேலும்