Home பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. அச்சம் வேண்டாம்; எச்சரிக்கை அவசியம்!
சனி, 19 செப்டம்பர் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] - 16 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] - 16 கே.பாண்டுரங்கன் பெரியார் பிஞ்சுகளே! அருமை நெஞ்சங்களே! மீண்டும் நம் நினைவுக்கு .... Coordinating Conjunctions = ஒத்துழைப்பு இணைப்புச... மேலும்
தைக்காத சட்டை! தைக்காத சட்டை! நெய்யும் எந்தத் துணியும் இல்லா நேர்த்தி யான சட்டை! மெய்யில் ஒன்றிப் பிறவி அன்றே மிளிர்வ தான சட்டை!   பொய்யும் இல்லை புழுதி மண்ணும் ப... மேலும்
”எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா” ”எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா” பெரியார் பிஞ்சுகளே... அடுத்த மாதம் நம் பெரியார் தாத்தா பிறந்தநாள் வருகிறது அல்லவா? அந்த இதழில் இடம்பெறும் வகையில், “எனக்குப் பிடித்த பெர... மேலும்
மெய் சொல்லல் மெய் சொல்லல் மெய் சொல்லல் நல்லதப்பா தம்பி! மெய் சொல்லல் நல்லதப்பா! கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் - நீ உண்டதைச் சொல்லென்று சொன்னாலும், மண்டை யுடைத்... மேலும்
கோமாளி மாமா-8 : மாற்றம் வருமா? கோமாளி மாமா-8 : மாற்றம் வருமா? விடுமுறை நாள் மாலை நேரம் பூங்காவில் கதை சொல்ல கோமாளி மாமா வந்தார். வழக்கமாகக் குழந்தைகள் வரும் மரத்தடியில் ஒருவரையும் காணோம். சரி குழந்தைக... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. அச்சம் வேண்டாம்; எச்சரிக்கை அவசியம்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே!

நலந்தானா? சென்ற மார்ச் முதல் வாரத்தில் வந்த ‘பெரியார் பிஞ்சு’ இதழில், மணியம்மை பாட்டியின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். ஏன் என்பதை உங்களுக்கெல்லாம் ஓரளவு விளக்கியிருந்தேன். நீங்கள் எல்லாம் அதை நல்லா படிச்சிருப்பிங்க இல்லையா? அதன்படி சென்னையிலே நம்ம மகளிர் அணித் தோழர்களும், கழகப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்ட விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றதை பெரியார் வலைக்காட்சியில் நேரலையில் நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பார்த்திருக்கக் கூடும். பார்க்கவில்லையானால் மீண்டும் உங்கள் பிரின்ஸ் அண்ணாவுக்கு ஒரு செய்தி வேகமாக அனுப்பி மீண்டும் ஒளிபரப்பக் கேளுங்கள்.

பார்த்துப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! மணியம்மை பாட்டியால் வார்க்கப்பட்டு ஆளாகி, இப்போது பெரியவர்களாகி குடும்பங்கள் நடத்தும் தலைவியாகவும், தலைவர்களாகவும் ஆகியுள்ள பலரும் திருச்சி மற்ற வெளியூர்களிலிருந்து வந்து கலந்து கொண்டு, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக் காப்பாளர் உங்கள் தங்காத்தாள் அக்காவின் தலைமையிலே ஒரு அணியாக மேடைக்கு வந்து பள்ளிக்கூடம் உள்ளிட்ட மற்ற பல நல்ல பணி செய்யத் திட்டமிடும் அளவுக்கு அவரவர்களே பணம் போட்டு, ஒரு லட்சம் போல நன்றிக் காணிக்கையாக என்னிடம் அளித்தனர். எனது கண்கள் மகிழ்ச்சிக் கண்ணீரை உகுத்தன!

எந்த ஒரு சிறு செயல் _ நன்மை செய்தாலும் அதற்கு உடனே ‘Thanks’-  நன்றி என்று பெரியார்    தாத்தா சொல்லாமலிருக்க மாட்டார்! அந்த நல்ல பழக்கம். நன்றியை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல், செயலில் காட்டி, ஒரு லட்ச ரூபாய் திரட்டி தாங்களே பகிர்ந்துகொண்ட அந்த ‘முன்னாள் பிஞ்சு’களின் செயல் எடுத்துக்காட்டான செயல் அல்லவா?

வசதி படைத்தவர்கள் பணம் நன்கொடையாகக் கொடுப்பது எளிது.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா காட்சிகளை பெரியார் வலைக்காட்சியில் காண...

https://youtu.be/MTKSA5aHCts

குழந்தைகளாக இருந்த காலம் முதல் இன்றும் எளிய வாழ்க்கையை இனிய வாழ்க்கையாகக் கருதி வாழும் இவர்கள் ஒரு லட்ச ரூபாய் தருவது 100 கோடிக்கு மேலே மதிக்கப்பட வேண்டியதொன்று அல்லவா?

பாட்டிக்கான நூற்றாண்டு அஞ்சல் தலை வெளியீடு, நூற்றாண்டு மலர் வெளியீடு, இவை தாண்டி கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் கலி.பூங்குன்றன், புரட்சிப் பாவலர் அறிவுமதி, யுகப் புதுமைக் கவிஞர் யுகபாரதி இப்படி பலரும் எழுதி, பிரபல இசையமைப்பாளர் தமிழ்த்திரு. தாஜ் நூர் அவர்களின் சிறப்பான இசையில் இனிய நல்ல பாடகர், பாடகியர் பாடிய இன்னிசைப் பாக்கள் இசைகேட்டு மயங்கும் அளவுக்கு “தூற்றலைத் தோற்கடித்த வீராங்கனை’’ என்ற பெயரில் இசைத் தொகுப்பு வெளியிடுகிறது. நீங்கள் எல்லாம் வீட்டிலும் வெளியிலும் பாடிட வேண்டும் அப்பாடல்களை!

இப்போது உலககையே பயமுறுத்தி வரும் கரோனா வைரஸ் 19 (Covid 19) இருந்தும் கூட்டம் குறையவில்லை. (இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அனைத்து நிகழ்ச்சிகளையும் நாம் ரத்து செய்துவிட்டோம்)

இருபால் அறிஞர் பெருமக்கள், வி.அய்.டி.வேந்தர் வேலூர் கோ.விசுவநாதன், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சி.பி.அய் பத்மாவதி அம்மையார் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா பேசினார்கள்.

ஈரோட்டில் நாகம்மையார் பாட்டிக்கும், வேலூரில் மணியம்மையார் பாட்டிக்கும் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பிருந்தது!

பெண்ணுரிமைக்காக உங்கள் அக்காள்கள் எல்லாம் அருள்மொழி அக்கா தலைமையில் போட்டி போட்டு மிக அருமையாகப் பேசினார்கள். நேரந்தான் போதவில்லை. என்ன செய்ய ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தானே இருக்கு?

நீங்கள் எல்லாம் பாட்டு பாடுவீர்கள்தானே! இப்போது வெளியிடப்பட்டுள்ள “தூற்றலைத் தோற்கடித்த வீராங்கனை’’ இசைத் தொகுப்பின்  பாடல்களைக் கேட்டு எனக்கு முன்னால் பாடிக்காட்டுறீங்களா? நல்லது!

அடுத்து உலகத்தையே ஆட்டிப் படைத்து, உலுக்கும் கரோனா வைரஸ் நம்ம இரண்டு வகையறாக்களுக்கும் அதிகமான எச்சரிக்கை விடுது! என்ன செய்ய?

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட தாத்தா, பாட்டிகளும் தனிமையில் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும்.

தும்மல் வந்தால் கைக்குட்டையை வைத்து பிறர் மீது நீர்த் துகள்கள் படாதவாறு கவனமாக தும்மலைச் சமாளிக்க வேண்டும்.

இருமல், சளி எச்சரிக்கை! ஜுரம் வரக்கூடாது.

கரோனாவைத் தடுப்போம்!

- ஆசிரியர் தாத்தாவின் உரை கேட்க

https://www.youtube.com/watch?v=KiiTmWzJzdg

கைகளை சோப்புப் போட்டு நன்றாக முன்பும் பின்பும் குறைந்தது 20 வினாடிகளாவது நன்றாகத் தேய்த்து கழுவித் துடைத்து, பிறகு கிருமி நாசினிகளை கைகளில் தடவிக் கொள்ள வேண்டும்!

உணவுகூட ‘கன்னா பின்னா’ உணவுகளை ஒரு சில மாதங்களுக்கு உண்ண வேண்டாம்! வீட்டில் அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, அண்ணன், அக்கா சொல்வதை ஒழுங்காகக் கேளுங்கள். இந்தத் தொற்று காற்று மூலம் பரவவில்லை; சளித்துகள், இருமல் போன்றவற்றால் பரவுகிறது என்பதால் தனிமைதான் முக்கிய மருந்தாம்!

எல்லா கோயில் சாமிகளே பயந்து போய் இருக்காங்க!

தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் கோவிந்தனே கரோனோ பயத்தில் கதவைச் சாத்திவிட்டார்!

சனிஸ்வர பகவானுக்கு எங்கே சளி பிடித்து சளீஸ்வரராகி விடுவாரோ என்று பயந்து அந்தக் கோயில், பூசை, புனஸ்காரங்களை மூடிவிட்டார்கள்!

சர்வசக்தி டூப்பு புரிஞ்சுதல்லவா! அது கிடக்கட்டும்!

நீங்க எல்லாம் கவனமாக இருங்க!

கை குலுக்கவே குலுக்காதீர்கள். வணக்கம் தெரிவிக்கலாம். தள்ளி நின்று! பாட்டி தாத்தா முத்தம் எல்லாம் கொஞ்சக் கூடாது. லீவு குடுங்க அதற்கு! கவனம்!

கரோனாவை ஒழிக்க நமக்காக இரவு பகல் பாராமல் தூய்மைப் பணி செய்யும் தொழிலாளர் தோழர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், நலவாழ்வுப் பணியாளர்கள் எல்லோருக்கும் நன்றி! நன்றி! என்று ஓங்கி முழங்கிடுவோம்!

நோய்க்காக பயமும் வேண்டாம்! அலட்சியமும் கூடாது!

அடுத்த மாசம் சந்திப்போமா?

உங்கள் பாசமிகு ஆசிரியர் தாத்தா,

- கி.வீரமணி

Share
 

முந்தைய மாத இதழ்

ஜூலை - 15 - கல்வி வளர்ச்சி நாள் ஜூலை - 15 - கல்வி வளர்ச்சி நாள் ஜூலை - 15 - கல்வி வளர்ச்சி நாள் சிரிப்புடன் முகத்தினில் சிறிதேனும் அறிவொளி சேர்ந்திடார்க் கிருப்பவை சீழுடைப் புண்கள்!   விருப்புடன் ... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: உண்மையே மேன்மை! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: உண்மையே மேன்மை! பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே, உங்களில் சிலரை பெரியார் பிஞ்சுகளுக்கான பரிசளிப்பு விழாவிலும், மாணவர்களுக்கான பழகு முகாம் நிகழ்விலும், கா... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) - 15 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) - 15 கே.பாண்டுரங்கன் Correlative Conjunctions என்றால் என்ன? பெயரிலேயே தெரிகிறதே... Co(r)‘relative’ Conjuntions CO என்றால் “உடன்’’ Relative என்... மேலும்
இளம் வயதில் தென் அமெரிக்கச் சிகரத்தைத் தொட்ட இந்திய மாணவி! இளம் வயதில் தென் அமெரிக்கச் சிகரத்தைத் தொட்ட இந்திய மாணவி! மும்பையைச் சேர்ந்த மாணவி காம்யா கார்த்திகேயன் என்பவர் மும்பை கொலாபாவில் உள்ள இந்திய கப்பற்படை பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவி தென்... மேலும்
கோமாளி மாமா-7 : முடியும் கோமாளி மாமா-7 : முடியும் ஓவியம், கதை:மு.கலைவாணன் கோமாளி மாமா பூங்காவுக்குள் நுழையும் போதே கதை சொல்லும் மரத்தடியில் மாணிக்கம் மல்லிகா, செல்வம் மூன்று பேரும் இருப்ப... மேலும்