Home ஊரடங்கில் என்ன செய்கிறோம்?
புதன், 20 ஜனவரி 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
இசைப்போம் வாரீர்! - பத்து வயதில் ஒரு இன மொட்டு இசைப்போம் வாரீர்! - பத்து வயதில் ஒரு இன மொட்டு Scale : C minor Chorus பாடல்: கவிஞர் கலி.பூங்குன்றன் இசை: கவி இசைப்பேழை: காலம் வெல்லும் தொகையறா: காற்றும் மழையும் சொல்லும் /பாக  / ... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : DEGREES OF COMPARISON - 19 (ஓப்பீட்டு நிலைகள்) தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : DEGREES OF COMPARISON - 19 (ஓப்பீட்டு நிலைகள்) இந்தக் கொடி மரம் என்ன சொல்கிறது? -ஒரு பண்புச்சொல்லுக்கு மூன்று வெவ்வேறு நிலைகள் இருக்கின்றன என்பதைத்தான். நமக்குத் தெரியும் _ மனிதனுக்கு ப... மேலும்
கோமாளி மாமா-11 : உன்னை நம்பு கோமாளி மாமா-11 : உன்னை நம்பு ஓவியம், கதை: மு.கலைவாணன் விடுமுறை நாள். தோட்டத்து மரத்தடியில் கதை கேட்பதற்காகவே மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் சரியான நேரத்திற்கு வந... மேலும்
ஊரடங்கில் என்ன செய்கிறோம்?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பெரியார் பிஞ்சுகளின் கடிதம்

அன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு,

உங்கள் பேரக்குழந்தைகளின் வணக்கம். நாங்கள் அனைவரும் நலம். உங்களுடைய நலம் அறிய ஆவல். கரோனா தொற்று நோய் காரணமாக அரசாங் கம் அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக எங்களுக்கு கிடைத்துள்ள விடுமுறைக் காலத்தை நாங்கள் பயனுள்ள வகையில் செலவிடுகிறோம் தாத்தா.

நீங்கள் கலந்துகொண்ட மாநாடுகள் மற்றும் கழக நிகழ்ச்சிகளில் எங்கள் பெற்றோரோடு கலந்துகொண்ட நாங்கள் உங்கள் உரைகளை ஆர்வமாகக் கேட்டிருக் கிறோம். அதில் எங்களுக்கு பிடித்தது, பெரியார் தாத்தா வின் கொள்கைகளில் "மனிதன் தானாகவும் பிறக்க வில்லை, மனிதன் தனக்காகவும் பிறக்கவில்லை",

"மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு"

"கடவுளை மற மனிதனை நினை" போன்றவற்றை தாங்கள் சொல்லும்போது கேட்டதாகும்.

பெரியார் தாத்தாவை பார்த்திராத எங்கள் பெற்றோரும், நாங்களும் மனிதனை மனிதனாக வாழச் செய்யும் பெரியார் கொள்கைகளை ஏற்று, நடப் பது மற்றும் பரப்புவதற்கு காரணம் பெரியாரை எங்களிடம் சேர்த்திட்ட நீங்கள்தான் தாத்தா.

எங்களுக்கும் உங்களைப்போல் உலகம் அறிந்த மனிதராக வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்குக் காரணமான வழிகளை நாங்கள் உங்களை வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது, உங்களின் வெற் றிக்கான காரணமாக நாங்கள் கண்டது "தந்தை பெரியார் கொள்கையை முழுமையாக, உண்மையாகப் பின்பற்றுவது" ஆகும்.

ஆகவே எதிர்காலத்தில் நாங்களும் கல்வி அறிவுடன் மனிதனாக வாழ தந்தை பெரியார் கொள்கையையும் ஏற்று நடப்பதே என்று முடிவு செய்து பயணிக்கிறோம் தாத்தா. அந்த வகையில் கிடைத்துள்ள விடுமுறை நாட்களில் காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, நம்முடைய இதழான விடுதலை எங்கள் ஊருக்கு காலை 7 மணிக்கு வந்துவிடும். ஒருவர் ஒருவராக தங்களின் அறிக்கை, தலையங்கம், வாழ்வியல் சிந்தனைகள் ஆகியவற்றை சத்தமாக படித்து மற்றவர்கள் கேட்டறிவது. காலை உண விற்கு பிறகு வீட்டுக்குள்ளேயே சில விளையாட்டுகளை விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது பணிகள், மதிய உணவிற்கு பிறகு மாலை நாங்கள் எழுதும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆவது.  போட்டி தேர்வு களில் பெரியார் 1000 (ஒரு நாளைக்கு 50 வினாக்கள்) கணித அடிப்படைச் செயல்கள், பொது அறிவு, ஓவியம் வரைதல், தமிழ் ஆங்கிலம் சொற்றொடர்கள் எழுது வது, தமிழ் ஆங்கிலம் இலக்கணம் அறிதல் ஆகியவை அடங்கும். மாலை 5 மணிக்கு வீட்டின் அருகில் உள்ள இடத்தில் இறகுப்பந்து, கபடி, கைப்பந்து போன்றவற்றை விளையாடுவோம்.

மாலை 6 மணி அளவில் youtube-இல் பார்த்து சிற்றுண்டி செய்து அனைவருக்கும் கொடுத்து நாங்க ளும் சாப்பிடுவோம் தாத்தா. இரவு 7 மணிக்கு போட்டித் தேர்வுகளை எழுதி, நடுவர்களாக உள்ளவர்களால் திருத்தப்பட்டு முதல் பரிசு வரை அனைவரும் பெறு வோம் தாத்தா.

போட்டித் தேர்வுக்கு நாங்கள் தயார் ஆகும் போது உங்களுடைய தன்னம்பிக்கையூட்டும் பொன்மொழி யான, "நம்மால் முடியாதது யாராலும் முடியாது யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்" என்பது எங்களைத் தயார்படுத்தும் என்பது மிகை யல்ல தாத்தா. இரவு உணவிற்குப் பிறகு சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு உறங்கச் செல்வோம் தாத்தா. தந்தை பெரியாரை எங்களிடம் சேர்த்த உங்களுக்கு நன்றி தாத்தா. வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கையை ஏற்று உறுதியுடன் வாழ்வோம்.

தங்கள் உண்மையுள்ள பேரக்குழந்தைகள் ஜெ.ஜெ.கவின், 12ஆம் வகுப்பு

செ.சி.காவியன், 10ஆம் வகுப்பு

ஜெ.ஜெ.காவியா, 9ஆம் வகுப்பு

க.செ.கபிலன், 9ஆம் வகுப்பு

க.செ.கவுசல்யா,  7ஆம் வகுப்பு,

செ.சி.கண்மணி, 7ஆம் வகுப்பு

அ.வெ.கயல், கண்ணந்தங்குடி கீழையூர்,

ஒரத்தநாடு ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம்

“நீங்கள் ஊரடங்கு காலத்தில் என்ன செய்தீர்கள்?” என்று சுவைபட எழுதுங்கள் -  பெரியார் பிஞ்சுக்கு அனுப்புங்கள்!

Share
 

முந்தைய மாத இதழ்

குண்டு மல்லி! குண்டு மல்லி! செடியினிலே இதழ்விரித்துக் குண்டு மல்லியே - பூத்துச் சிரித்துமனம் கவர்ந்திழுப்பாய் குண்டு மல்லியே!   நெடுந்தொலைவு வரையினிலும் குண்டு ... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: ஜாதி ஒழிப்புக்குப் போராடிய திராவிடச் சிறுவன்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: ஜாதி ஒழிப்புக்குப் போராடிய திராவிடச் சிறுவன்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, என்ன கொரோனா கொடுந்தொற்று பரவியுள்ள _ இந்தக் காலகட்டத்தில் _ மிகவும் விழிப்புடன் கவனமாக, வெளியில் செல்லுவ... மேலும்
நோபல் பரிசு - 2020 நோபல் பரிசு - 2020 ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் தன்னிகரற்ற சேவையை வழங்கியோருக்க... மேலும்
சிறுவர் கதை : எப்படி குளிர்விப்பாய்? சிறுவர் கதை : எப்படி குளிர்விப்பாய்? விஜய் பாஸ்கர் விஜய் இரும்புக் கொல்லர் ஒருவர், கம்பியைப் பழுக்க வைத்து அதை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார். அப்போது யாரோ விசும்பும் சத்தம் ... மேலும்