Home தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்)
சனி, 28 நவம்பர் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
இசைப்போம் வாரீர்! - ஜாதி ஜாதி ஜாதி என்று இசைப்போம் வாரீர்! - ஜாதி ஜாதி ஜாதி என்று இசைக் குறிப்பு: விஜய் பிரபு Scale F minor 6/8 ஜாதி ஜாதி ஜாதி என்று தாழ்ந்து போனவன் /சாச சாச  சாரி  காம/  பாத   பாம க... / தமிழன் என்று... மேலும்
மாமழை போற்றுவோம்! மாமழை போற்றுவோம்! நிலவுலகின் நீரெல்லாம் நீராவியாய் எழும்பியே நீலவானப் பரப்பினையே மேகமாகி மூடுமே! உலவுகின்ற காற்றுமாங்கே உரசுகையில் கரைந்துமே உதிருகின்ற ந... மேலும்
வீர வரலாறு : நிறவெறியை வென்ற அய்ந்து வயது வீர வரலாறு : நிறவெறியை வென்ற அய்ந்து வயது ‘ரூபி பிரிட்ஜஸ்’ குழந்தைகளுக்கான ஒரு திரைப்படம். அது ஒரு சிறுமியின் கதை. அந்தச்சிறுமி கருப்பு இனத்தவர். இங்கே எப்படி தாழ்த்தப்பட்டோரை, உயர... மேலும்
கோமாளி மாமா-11 : அன்பைக் கொடு! கோமாளி மாமா-11 : அன்பைக் கொடு! ஓவியம், கதை:மு.கலைவாணன் மாணிக்கமும், கோமாளி மாமாவும் தோட்டத்திற்குள் ஒன்றாக வந்தனர். கதை சொல்லும் மரத்தடியில் மல்லிகா மட்டும் வருத்தத்துட... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: அர்ஜுனா என்றால் இடி தலையில் விழாதா? காரணமின்றி ஏற்காதீர்கள்: அர்ஜுனா என்றால் இடி தலையில் விழாதா? சிகரம் மின்னல் மின்னி இடி இடிக்கும்போது “அர்ஜூனா, அர்ஜூனா” என்று சொன்னால் இடி தாக்காது என்று மக்கள் நம்பி, அவ்வாறே சொல்கின்றனர். பிள்ளைகள... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்)
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கடந்த இதழில் ஒத்துழைப்பு இணைப்புச்சொற்களை இணைத்தோம். இந்த இதழில்...

சார்பு இணைப்புச் சொற்களைப் [Sub-Ordinate Conjunctions] பார்ப்போமா?

சார்பு இணைப்புச் சொற்கள் [Sub-Ordinate Conjunctions]

[DEPENDENT SENTENCE],  [INDEPENDENT SENTENCE] ஆகிய இரண்டு வகைச் சொற்றொடர்களை இணைக்கும் சொற்கள்தான் சார்பு இணைப்புச்சொற்கள் [Sub-Ordinate Conjunctions]

DEPENDENT என்றால் சார்ந்திருப்பது... (சிறு வயதில் பெற்றோரைச் சார்ந்து வாழும் குழந்தை போல)

INDEPENDENT
என்றால் சாராமல் இருப்பது... (பெரியவர்களான பிறகு, பெற்றோரைச் சாராது இருப்போமல்லவா? அதைப்போல]

இவை இணைந்து புதிய சொற்றொடரை உருவாக்குகின்றன.

எடுத்துக்காட்டாக இரண்டு சொற்றொடர்களை எடுத்துக்கொள்வோம்.

1. “பூச்செடி நன்றாக வளர்ந்தது’’

“The flower plant grows up’’

2. “மகிழன் பூச்செடிக்கு நாள்தோறும் தண்ணீர் ஊற்றினான்’’

“Magizhan poured water to the flower plant daily’’

மேலே கண்ட இரண்டு சொற்றொடர்களில்..

முதல் சொற்றொடருக்குக் காரணம் [சார்பு] எதுவும் தேவையில்லை. [தனித்த சொற்றொடர் அதாவது INDEPENDENT SENTENCE].

இரண்டாவது சொற்றொடருக்கு காரணம் [சார்பு] தேவை. அதாவது, “காரணம் என்ன?’’ என்ற கேள்வியுடன், சார்ந்து பொருள் தரும் ஒரு சொற்றொடர் [DEPENDENT SENTENCE].

மேற்சொன்ன இரண்டு சொற்றொடரையும் எப்படி இணைப்பது? எந்த இணைப்புச்சொல் [Conjunction] போட்டால் சரிவரும்? “BECAUSE’’ அதாவது “காரணத்தால்’’ என்ற சார்பு இணைப்புச்சொல் [Sub-ordinate Conjunction] கொண்டு இணைக்கலாமல்லவா!

தமிழில்...

பெரும்பாலும், சார்ந்து இருக்கும் சொற்றொடரின் கடைசியில் தான் சார்பு இணைப்புச்சொல்[Sub-ordinate conjunctios] வரும். [விதி விலக்கும் உண்டு] ஆனால் பொருள் மாறாது. பாருங்கள்....

“மகிழன் பூச்செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றிய காரணத்தால்,

பூச்செடி நன்றாக வளர்ந்தது’’

ஆங்கிலத்தில்....

சார்ந்து இருக்கும் சொற்றொடரின் [DEPENDENT SENTENCE] முன்புறம்தான் சார்பு இணைப்புச்சொல் [Sub-ordinate Conjunction] வரும்.

Because Magizhan poured water to the flower plant daily, The flower plant grows up.

OR [அதையே மாற்றியும் எழுதலாம்]

The flower plant grows up because Magizhan poured water to the flower plant daily. என்றும் சொல்லலாம்.

சரி... எந்ததெந்த இணைப்புச் சொற்களை சார்பு இணைப்புச்சொற்கள் [Sub-ordinate Conjunctions] என்று சொல்லுவோம்? இங்கே...

“A WHITE BUS’’  என்று ஆங்கில சுருக்க முறையில்... நினைவில் வைத்துக்கொள்வோம்.

A WHITE BUS

A=ALTHOUGH, AS LONG AS

W=WHENEVER, WHILE, WHEN

H=HOWEVER, HENCE

I=IF, INSPITE OF,

T=THOUGH,

E=EVEN IF, EVEN THOUGH

B=BECAUSE,

U=UNLESS, UNTIL

S=SINCE

குறிப்பு: இவை தவிரவும் இன்னும் நிறைய சார்பு இணைப்புச்சொற்கள்[Sub-ordinate Conjunction]  உள்ளன. இப்போது சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.

Although Anitha ha got more Marks in 12th standard, she could not become a Doctor.

அனிதா பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும், அவரால் மருத்துவர் ஆக முடியவில்லை.

As long as Sundar, the Doctor is in our area, we need not to think about the illness.

எங்கள் பகுதியில் சுந்தர் மருத்துவராக இருக்கும் வரை. நாங்கள் எந்த நோயைப் பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை.

Whenever Anitha got tired in reading, She thought about her family situation and studied well.

எப்போதெல்லாம் அனிதா படிக்கும்போது சோர்வடைகிறாரோ, (அப்போது) அவர் தன் குடும்ப நிலை உணர்ந்து படித்தார்.

When I was in Madurai, I went to see Thirumalai nayakker mahal.

நான் மதுரையிலிருந்தபோது, (நான்) திருமலை நாயக்கர் மகாலை பார்க்கப் போனேன்.

He is poor, however he is mindly rich.

அவர் ஏழையாக இருக்கிறார். எனினும் அவர் மனதளவில் பணக்காரராக இருக்கிறார்.

If you like to achieve your goal, you should believe yourself.

நீ சாதிக்க விரும்பினால் நீ உன்னை நம்ப வேண்டும்.

In spite of being small matter, you must take a note.

சிறிய விவரமாக இருந்த போதிலும், ஒரு குறிப்பெடுத்துக்கொள்.

Though he was a Police man, he apologised to me.

அவர் ஒரு காவல் துறை அதிகாரியாக இருந்த போதிலும், அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.

Even if it is a big problem, Face the problem with fear.

அது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கூட, அந்தப் பிரச்சினையைப் பயத்துடனேயே எதிர்கொள்ளுங்கள்.

He could become a singer, because he practiced well.

அவர் ஒரு மிகப்பெரிய பாடகர் ஆக முடிந்தது. காரணம் அவர் தகுந்த பயிற்சியை மேற்கொண்டான்.

Unless you leave the bad friendship, you cannot succeed.

கெட்ட நண்பர்களை விட்டு விலகாவிடில், நீ வெற்றி பெற முடியாது.

Until you get up earlier, you can plan a full day.

காலையில் சீக்கிரம் எழும் வரை, உன்னால் ஒரு முழு நாளைத் திட்டமிட முடியும்.

Since he is sincere, he can read 7 books in one week.

அவர் மிகவும் கருத்தூன்றி இருக்கிறபடியால், ஏழு புத்தகங்களை ஏழு நாள்களில் படித்து முடிக்க முடிகிறது.

(மீண்டும் இணைவோம்)

Share
 

முந்தைய மாத இதழ்

நல்லுணவு நல்லுணவு கேழ்வரகு கம்பு சோளம் கேடற்ற வரகு சாமை கூழ்குடித்தல் எல்லாம் பண்டைக் குலத்தமிழர் சீர்ஆ காரம்;   காலையிலே நீரா காரம் கடும்கோடைக் கேற்ற... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல! அன்பார்ந்த பேத்தி, பேரன்களே, எல்லாரும் எப்படி இருக்கிங்க? “கொரோனா காரணமாக எவ்வளவு நாள் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே இருப்பது. ‘போர்’ ... மேலும்
துடுக்குத் தம்பி! துடுக்குத் தம்பி! “என்னடா தம்பி, எப்டி இருக்க? என்ன படிக்கிற? நல்லாப் படிக்கிறியா? எவ்ளோ மார்க் வாங்குற?” “ஏன் அங்கிள், நாங்க என்னைக்-காச்சும் பெரியவங்களைப... மேலும்
கதை கேளு.. கதை கேளு..: வானவில்லின் வண்ண மகள் கதை கேளு.. கதை கேளு..: வானவில்லின் வண்ண மகள் விழியன் அன்பாவுக்கு ஏழு வயது. அவள் வீட்டில் எல்லா வசதியும் இருந்தது. எது கேட்டாலும் கிடைக்கும் வசதி இருந்தது. ஆனால் அவள் எதையுமே கேட்டதில... மேலும்
பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு எதுக்குக் குளிக்கணும் எதுக்குக் குளிக்கணும்? குளிச்சாத்தான் அழுக்குப் போகும். எதுக்கு அழுக்குப் போகணும் எதுக்கு அழுக்குப் போகணும் அழுக்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: விழிக்கும் முகராசிக்கு  ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா? காரணமின்றி ஏற்காதீர்கள்: விழிக்கும் முகராசிக்கு ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா? சிகரம் இரவு உறக்கத்திற்குப் பின் விடிந்து விழிக்கும் போது யார் முகத்தில் முதலில் விழிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அன்றைக்கு நல்லதும் கெட்டத... மேலும்