Home சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம்
வெள்ளி, 03 ஜூலை 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி தேவையான பொருட்கள்: 1. சிறிது தடிமனான செவ்வக வடிவ வெளிர் நீல நிற அட்டைகள் இரண்டு. 2. உருளையான சிறிது நீளமான குச்சி ஒன்று 3. அளவுகோல், 4.... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா? காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா? பெற்றவர்கள், பெரியவர்கள் ஏன் சில ஆசிரியர்கள் கூட மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வேண்டிக் கொண்டால் தேர்வு சிறப்பாக எழுதலாம் என்ற... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்) தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்) கடந்த இதழில் ஒத்துழைப்பு இணைப்புச்சொற்களை இணைத்தோம். இந்த இதழில்... சார்பு இணைப்புச் சொற்களைப் [Sub-Ordinate Conjunctions] பார்ப்போமா? சார... மேலும்
சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம் சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம் குதுவைத் தோட்டம் எப்பவும் ரொம்ப அழகாகவும், அமைதியாகவும் இருக்கும். தேவையில்லாத எந்தச் சத்தமும் அங்கு இல்லாததுனால பறவைகள் கத்துறது கூட அவ்வ... மேலும்
சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

குதுவைத் தோட்டம் எப்பவும் ரொம்ப அழகாகவும், அமைதியாகவும் இருக்கும். தேவையில்லாத எந்தச் சத்தமும் அங்கு இல்லாததுனால பறவைகள் கத்துறது கூட அவ்வளவு அழகா கேட்கும். இன்னும் சில சமயங்களில் காற்று மரத்தின் மீது மோதும் போது ஏற்படும் சப்தம் கூட இசையாக நம் செவிகளில் பாயும்.

எங்கு பார்த்தாலும் வாழையும், மஞ்சளும், கரும்பும் என விளைநிலமெல்லாம் பயிர்கள் வளர்ந்து காட்சிக்கு இரம்மியமாக இருக்கும். இதுல இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா, தோட்டத்துக்குள்ளவே வீடு இருப்பதனால ஒவ்வொரு வீடும் தூரம் தூரம் உயர வளர்ந்த மனிதர்களைப் போன்று வானத்தோடு கதை பேசிக் கொண்டிருக்கும். இன்னும் சொல்லிட்டே போகலாம். அவ்வளவு அழகானது குதுவைத் தோட்டம். அடடா ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல மறந்தே போயிட்டனே... மூன்று பகுதிகளிலும் மலையால் சூழப்பட்டதுதான் இந்தப் பகுதி.

இங்குதான் கவின் எனும் குட்டி பாப்பா இருந்தா. ரொம்ப அழகா இருப்பா. எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு கேள்வி கேட்டுகிட்டே இருப்பா. அவ அளவுக்கு குறும்பு பண்ண முடியாதுன்னு சொல்லலாம். அவ்வளவு குறும்பும் பண்ணுவடாள். குழந்தைகளுக்கு குறும்பும் ஓர் அழகுதானே.

கவினுக்குப் பறவைகள் சத்தம்னா அவ்வளவு பிடிக்கும். அதுவும் கிளி சத்தம்னா அவ்வளவு பிடிக்கும். அவ வீட்டு மேல எப்பவுமே பறவைகள் கூட்டமாக பறந்து போய்க்கிட்டே இருக்கும். அதுல கிளிகள் பறந்து போகும் போது கத்துச்சுன்னா உடனே சிரிக்க ஆரம்பித்துவிடுவாள். கவின்கிட்ட பறவைகள் விளையாட்டு பொம்மைகள் தான் அதிகமாக இருக்கும். அதுலயும் கிளி பொம்மைகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

மாலை நேரத்தில் பறவைகள் தங்கள் இருப்பிடத்திற்குக் கூட்டமாகச் செல்வதைப் பார்ப்பதுதான் அவளின் பொழுது போக்கு. அன்றைய தினமும் வழக்கம் போல பறவைகள் செல்வதைப் பார்த்துக் கொண்டே விளையாடியவள், அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டாள். அவள் தூங்கிய கொஞ்ச நேரத்திற்குள் பெரும் இடி சத்தத்தோடு மழை பெய்யத் தொடங்கியது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கவின் திடீரென எழுந்து உட்கார்ந்து அழத் தொடங்கிவிட்டாள்.

கவினின் அழுகை சத்தத்தைக் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அனைவருமே எழுந்துவிட்டனர். எதுக்கு அழுகிறானு யாருக்குமே தெரியவில்லை. ஒருவேளை இடி சத்ததுக்குதான் அழறானு நினைச்சிட்டு, அவளிள் அம்மா அருணா சமாதானப் படுத்துனாங்க. என்ன சொல்லியும் கவின் அழுகையை நிறுத்தவே இல்லை. காய்ச்சல், இல்ல... வயிற்று வலியா இருக்குமான்னு கூட பார்த்தாங்க அப்படியும் ஒன்றுமில்லை. எதுக்கு அழுவுறான்னு மட்டும் யாருக்குமே தெரியலை. ஆனா நேரம் ஆக ஆக இன்னும் பலமாக அழத் தொடங்கினாள்

கிளிச்சத்தம் கேட்டா சிரிப்பானு நினைச்சுட்டு அவ அப்பா செங்கோ கிளி மாதிரி கீச், கீச், கீச்சுன்னு கத்துனாரு. அப்படியும் அவளின் அழுகை குறைந்தபாடில்லை. அவளைச் சமாதானப்படுத்த எல்லோரும் முயற்சித்தும் ஒரு பயனுமில்லை.

நேரம் ஆக ஆக, அவளே தன் அழுகையைக் குறைத்துக் கொண்டு மெல்ல பேசத் தொடங்கினாள்

“அம்மா இந்த மழைக்கு கிளிகள் எங்க தங்கும், பாவம் அதெல்லாம் நனைஞ்சுடாதா?’’ என்றாள்

இப்போதுதான் கவினின் அழுகைக்கான காரணம் எல்லோருக்கும் புரிந்தது.

“கிளிகள் எல்லாம் நனையாதுடா செல்லம், அதெல்லாம் அவங்களோட கூட்டில் பத்திரமாக இருக்கும்’’ என்றாள் அருணா

“அப்படினா, மழைச்சாரல் கிளிக் கூட்டுக்குள் போகுமே, அதுல நனைஞ்சுதுன்னா கிளிகளுக்கு காய்ச்சல் வருமே, அப்படி காய்ச்சல் வந்தா கிளிகளுக்கு யாரு ஊசி போடுவா, மாத்திரை கொடுப்பா?’’ என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

கவினின் இந்த கேள்விகளால் எல்லோரும் திகைத்துப் போயிருந்தார்கள்.

“மழைச்சாரல் எல்லாம் உள்ள போகாது, நீ ஒன்னும் கவலைப்படாதே’’ என்று சமாதனப் படுத்தினாள் அம்மா.

இருந்தாலும் அவ தூங்காம அழுதுகொண்டே இருந்தாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களுக்கு “கவின் பாப்பா, இனி மழை வந்தா எல்லா கிளிகளையும் நம்ம வீட்டுக்கு வரச் சொல்லிடலாம். சரியா, மழை வந்தால் அவை நனையாதுல்ல’’ என்றார் அப்பா செங்கோ.

“நிஜமாவாப்பா, கிளிகளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தர்லாமா’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“நிச்சயமா, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தர்லாம், இப்ப நீ தூங்கு’’ என்றார். அப்பாவின் இந்த  சமாதான வார்த்தையைக் கேட்டு நம்பிக்கையோடு தூங்கினாள் கவின்.

மறுநாள் காலைல முதல் வேலையாக கவின் எழுந்தவுடன் வீட்டுக்குப் பின்புறம் இருந்த தென்னை மரத்தில் இருந்த பொந்தைக் காட்டி இதுதான் “கிளிகளின் வீடு’’ என்றார் அப்பா.

மேலும் கிளிகள் மழைவந்தா நனையாது, சாரலும் படாது என்றார்.

“அப்பா, நீங்க தான சொன்னீங்க இது தென்னை மரம் தேங்காய்கள் காய்க்கும் என்று! இதுல எப்படி கிளிகள் வந்துச்சு’’ என்றாள் கவின்.

“இந்தத் தென்னை மரம் நோய்வாய்ப் பட்டதால வறண்டு போச்சு. அதனால அங்கிருந்த பொந்துல கிளிகள் வாழுது’’ என்றார்.

பேசிக்கொண்டே இருக்கும் போது ஒரு தாய்க்கிளி எங்கிருந்தோ பறந்து வந்து குஞ்சுக் கிளிக்கு உணவூட்டியது.

இதைப் பார்த்த கவின்,

“அய்... கிளி கிளி’’ என்று மகிழ்ச்சியாகக் கத்தினாள். கிளிக் குஞ்சுக்கு உணவூட்டுவதைப் பார்த்துக் கொண்டே அவள் அம்மா ஊட்டிய உணவையும் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டாள் கவின். உணவு சாப்பிட அடம்பிடிக்கும் கவினுக்கு  அன்றிலிருந்து மூன்று வேளை உணவையும் கிளிகளைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டு விடுவாள்.<

Share
 

முந்தைய மாத இதழ்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி? பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி? பாசத்திற்குரிய பேத்தி பேரன்களே, எப்படி இருக்கீங்க? உலகமே வீட்டுக்குள்ளே முடங்கி, ‘ஊரடங்கு, வீட்டில் முடங்கு’  என்றெல்லாம் உள்ள நிலையில், நீ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா? காரணமின்றி ஏற்காதீர்கள் - ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா? வாழைப்பழத்தை உறிக்கும்போது, அதில் சில பழங்கள் இரட்டையாக ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தப் பழங்களைச் சாப்பிடக்கூடாது என்று ஒதுக்கிவிடுவார்கள்.... மேலும்
கண்ணாடி! கண்ணாடி! எனக்கு எதிரே கண்ணாடி என்னைப் பார்த்தேன் முன்னாடி நினைத்த போதே என்னைப்போல் கணத்தில் காண மகிழ்ந்தேனே!   வலது கையால் செய்ததை மறதி ஏதும்... மேலும்
இலவசக் காற்று இத்தாலியைச் சேர்ந்த 93 வயதான ஒருவர், கோவிட்-19-ல் இருந்து மீண்ட பிறகு, மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் நேரத்தில் ஒரு நாள் வென்டிலேட்டர் பய... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழுடன் வித்தியாசமான கோணங்களில்... மேலும்