Home செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி
வெள்ளி, 03 ஜூலை 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி தேவையான பொருட்கள்: 1. சிறிது தடிமனான செவ்வக வடிவ வெளிர் நீல நிற அட்டைகள் இரண்டு. 2. உருளையான சிறிது நீளமான குச்சி ஒன்று 3. அளவுகோல், 4.... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா? காரணமின்றி ஏற்காதீர்கள் - கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா? பெற்றவர்கள், பெரியவர்கள் ஏன் சில ஆசிரியர்கள் கூட மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வேண்டிக் கொண்டால் தேர்வு சிறப்பாக எழுதலாம் என்ற... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்) தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்) கடந்த இதழில் ஒத்துழைப்பு இணைப்புச்சொற்களை இணைத்தோம். இந்த இதழில்... சார்பு இணைப்புச் சொற்களைப் [Sub-Ordinate Conjunctions] பார்ப்போமா? சார... மேலும்
சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம் சிறுவர் கதை : கிளி காய்க்கும் தென்னை மரம் குதுவைத் தோட்டம் எப்பவும் ரொம்ப அழகாகவும், அமைதியாகவும் இருக்கும். தேவையில்லாத எந்தச் சத்தமும் அங்கு இல்லாததுனால பறவைகள் கத்துறது கூட அவ்வ... மேலும்
செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

தேவையான பொருட்கள்:

1. சிறிது தடிமனான செவ்வக வடிவ வெளிர் நீல நிற அட்டைகள் இரண்டு.

2. உருளையான சிறிது நீளமான குச்சி ஒன்று

3. அளவுகோல், 4. பசை, 5. கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா.

செய்முறை:

1. முதலில் இரண்டு அட்டைகளில் ஒன்றை எடுத்து, அதில் ஒரு கிளியின் படத்தை வெட்டி ஒட்டிக் கொள்ளவும்.

2. பிறகு மற்றோர் அட்டையை எடுத்து, அதில் ஒரு கூண்டு படத்தை வரைந்து கொள்ளவும். (அல்லது படம் கிடைத்தால் வெட்டி ஒட்டிக் கொள்ளவும்)

3. இப்பொழுது கிளி பட அட்டையைத் திருப்பி வைத்து அதில் பசையைத் தடவி, படம் 3---இல் காட்டியபடி குச்சியை எடுத்து நடுவில் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.

4. பின்பு கூண்டு படத்தை எடுத்து (கூண்டு வெளிப்புறம் தெரியும் படி) அந்தக் குச்சி ஒட்டிய படத்தின் மீது ஒட்டிக் கொள்ளவும்.

5. இப்பொழுது படம் 4--இல் உள்ளது போல.

ஒரு புறமும் கிளியும் மறுபுறம் கூண்டும் தெரியும்.

6. பிறகு உங்கள் நண்பரிடம் படம் 5--இல் உள்ளது போல. இரண்டு உள்ளங்கைகளுக்கும் நடுவில் குச்சியை வைத்தபடி, ஆனால் உங்கள் நண்பர் பக்கம் கூண்டு மட்டுமே தெரியும்படி காட்டி, “இந்த கூண்டுக்குள் கிளியை வரவைக்கவா’’ என்று விளையாட்டாய் சவால் விடுங்கள்.

7. பிறகு படம் 6--இல் காட்டியபடி முன்னும் பின்னும் உருட்டினால் கிளி கூண்டுக்குள் இருப்பது போல உங்கள் நண்பருக்கு தெரியும்.

கண்ணின் நிலைப்புத் தன்மையினைப் (Persistence of Vision) புரிந்து, மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தொடக்கக்கட்ட சோதனை முயற்சிகளின் அடிப்படையில்தான் சினிமா தொழில்நுட்பம் வளரத்தொடங்கியது. இதற்கு Thaumatrope என்று பெயர். இதையே நீங்கள் வட்ட வடிவில் காசு போன்று அட்டையில் செய்து, குச்சிக்கு பதில் இருபுறமும் துளையிட்டு நூல் கட்டி சுற்றிச் சுண்டிவிடுவதன் மூலமும் செய்து மகிழலாம்.

Share
 

முந்தைய மாத இதழ்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி? பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி? பாசத்திற்குரிய பேத்தி பேரன்களே, எப்படி இருக்கீங்க? உலகமே வீட்டுக்குள்ளே முடங்கி, ‘ஊரடங்கு, வீட்டில் முடங்கு’  என்றெல்லாம் உள்ள நிலையில், நீ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா? காரணமின்றி ஏற்காதீர்கள் - ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா? வாழைப்பழத்தை உறிக்கும்போது, அதில் சில பழங்கள் இரட்டையாக ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தப் பழங்களைச் சாப்பிடக்கூடாது என்று ஒதுக்கிவிடுவார்கள்.... மேலும்
கண்ணாடி! கண்ணாடி! எனக்கு எதிரே கண்ணாடி என்னைப் பார்த்தேன் முன்னாடி நினைத்த போதே என்னைப்போல் கணத்தில் காண மகிழ்ந்தேனே!   வலது கையால் செய்ததை மறதி ஏதும்... மேலும்
இலவசக் காற்று இத்தாலியைச் சேர்ந்த 93 வயதான ஒருவர், கோவிட்-19-ல் இருந்து மீண்ட பிறகு, மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் நேரத்தில் ஒரு நாள் வென்டிலேட்டர் பய... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழுடன் வித்தியாசமான கோணங்களில்... மேலும்