Home கதை கேளு.. கதை கேளு.. : பூக்கோ
திங்கள், 03 ஆகஸ்ட் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா எதையும் கண்டு அஞ்ச மாட்டாள்   பேய் பூதம் இல்லை என்பாள் ஒத்தைக் கண்ணன் நம்ப மறுப்பாள்   இடியின் சத்தம் ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - கொரோனா எப்போது ஒழியும்? கடவுளுக்குத்தான் தெரியுமா? காரணமின்றி ஏற்காதீர்கள் - கொரோனா எப்போது ஒழியும்? கடவுளுக்குத்தான் தெரியுமா? சிகரம் கடவுள் நம்பிக்கை என்பது பகுத்தறிந்து பார்க்காமல் ஏன்? எப்படி? என்று வினா எழுப்பி விடை காணாமல், அப்படியே ஏற்றுக் கொள்வதால் வருவதாகு... மேலும்
திரைப்படம் - ஜோ ஜோ ரேபிட் திரைப்படம் - ஜோ ஜோ ரேபிட் இரண்டாம் உலகப் போருக்கு முக்கியக் காரணமாக இருந்த ஜெர்மனியில் நடைபெற்ற கொடுமையான நிகழ்வுகளை, கொஞ்சம் கிண்டலான நாடகம் போல, நகைச்சுவையாகப் பு... மேலும்
இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம் இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம் இசைக் குறிப்பு: விஜய் பிரபு தொகைறா... D minor பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் / நிசசாச /  நீச...  /  நிசசாச / பிறந்த பின்னர், / சசச ச... மேலும்
செய்து அசத்துவோம் - தீப்பெட்டி தந்திரம் செய்து அசத்துவோம் - தீப்பெட்டி தந்திரம் வாசன் பக்கம்: 1 தேவையான பொருட்கள்: 1. ஆறு அல்லது ஏழு குச்சிகளுடன் கூடிய ஒரு தீப்பெட்டி 2. பழைய ஒரு ரூபாய் நாணயம் பக்கம் 2 1. ஆறு அல்... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி இடமிருந்து வலம்: 1. பச்சைத் தமிழர் கர்மவீரர் கல்வி வள்ளல் ______ பிறந்தநாள் ஜூலை 15. (5) 3. மழை ______ வேறு சொல். (2) 5. நாம் வசிக்கும்... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. : பூக்கோ
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

விழியன்

ருத்ரய்யா கால்நடை மருத்துவமனை. மஞ்சள் வெயில் தவழ்ந்த மாலை வேளை. கால்நடை மருத்துவமனை என்று பெயர்ப் பலகை வைத்து இருந்தாலும் மொத்தம் இரண்டே அறைகள் கொண்டது தான். மருத்துவமனை திறந்திருந்தால் மொத்தம் நான்கு ஜீவன்கள் இருக்கும். மருத்துவர் ருத்ரய்யாவும் மூன்று பூனைகளும். ருத்ரயாவிற்கு எப்படியும் அய்ம்பது வயதிற்கு மேல் இருக்கும். மருத்துவருக்கான இருக்கையில் அமர்ந்து இருப்பார். அவருக்குப் பின்னால் இருக்கும் மேஜையில் மூன்று பூனைகளும் வந்து அமர்ந்துகொள்ளும். அவர் மருத்துவமனையைப் பூட்டிச் சென்றதும் மூன்று பூனைகளும் மாடிக்கு ஓடிவிடும். தினமும் காலையும் மாலையும் ஒரு பாட்டில் நிறைய பால் கொண்டு வந்து பூனைகளுக்கு ஊற்றுவார். மருத்துவம் பார்க்க நாய்கள் வரும்போது மட்டும் பூனைகள் பதுங்கிக்கொள்ளும்.

வழக்கமாக நான்கில் இருந்து அய்ந்து நபர்கள் அவர்கள் செல்லப் பிராணிகளை அழைத்து வருவார்கள். இன்று ஒருத்தருமே வரவில்லை. மருத்துவர் ருத்ரய்யா மாலை ஆறு மணிக்கு எல்லாம் மருத்துவமனையை பூட்டிவிடுவார். ஞாயிறு மாலை எனில் அய்ந்து மணிக்கே பூட்டிவிட்டு சைக்கிளில் கிளம்பிடுவார். ஆமாம் அவரிடம் ஒரு பழைய மிதிவண்டி உள்ளது. மிதிவண்டி இருந்தாலும் அதனைத் தள்ளிக்கொண்டு தான் வருவார், தள்ளிக்கொண்டு தான் போவார். ஓட்டமாட்டார். அன்றொரு நாள் மிக மிகப் பொறுமையாக ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியை நிறுத்திவிட்டுப் பூட்டலாம் என்று கிளம்பினார். வாசலில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். டிரவுசர் முட்டிக்கும் காலுக்கும் நடுவில் நின்று கொண்டிருந்தது. எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கலாம்.

“டாக்டர் இல்லையா?’’ என்றான் அவன். ருத்ரய்யா கோபப்படவில்லை. கண்களால் என்ன வேண்டும் என்றார். “டாக்டர் இல்லையா’’ என்றான் மீண்டும். அவர் தான் டாக்டர் என்று சொல்லியும் அவன் நம்பவில்லை. மூன்று பூனைகளும் ஒன்றன் பின் ஒன்றாகக் கதவின் இடுக்கில் இருந்து வெளியே வந்து எங்கோ ஓடின. “அய், சூப்பரா இருக்கு பூனைங்க. நீங்க வளர்க்கறீங்களா?’’ என்றான். அவன் கைகளையும் அவனுக்குப் பின்னால் ஏதேனும் பிராணி இருக்கா என்று பார்த்தார் ருத்ரய்யா. எதையும் காணவில்லை. சரி வேற எதற்கோ வந்திருக்கின்றான் என தன் பொருட்களைப் பையில் எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

“பூக்கோவுக்கு கால்ல அடிப்பட்டிருக்கு. கட்டுப் போட்டு விடுவீங்களா?’’ எங்கே என்று கைகளால் கேட்டார்

“கால்ல’’

“பூக்கோ எங்க?’’

“அது.. அது அந்த மூணாவது தெருவில இருக்கு. வாங்க கூட்டிகிட்டு போறேன்’’

மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருமே தங்கள் செல்லப் பிராணிக்கு எப்படியும் ஒரு செல்லப் பெயர் வைத்திருப்பார்கள் என்று ருத்ரய்யாவிற்கு தெரியும். தன் மருத்துவப் பெட்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனையைப் பூட்டினார். மிதிவண்டியினைத் தள்ளிக்கொண்டு ருத்ரய்யாவும் சிறுவனும் கிளம்பினார்கள்.

“ஆமாம் டாக்டர்னா அந்த வெள்ளை கோட் போட்டிருப்பாங்களே? நீங்க போட மாட்டீங்களா?’’ என்றான்.

பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்தார். அடிக்கடி தன் மூக்கு கண்ணாடியை சரி செய்துகொள்ளும் பழக்கம் ருத்ரய்யாவிற்கு இருந்தது. முதல் சாலையின் முனையில் திரும்பியதும் மிதிவண்டியினைத் தான் தள்ளி வருவதாக சிறுவன் வாங்கிக் கொண்டான்.

“டாக்டர் அங்கிள், நீங்க எல்லா அனிமல்ஸுக்கும் சிகிச்சை செய்வீங்களா?’’

“ம்ம்’’

“டயனோசருக்கு?’’

ஒரு நிமிடம் திக் என்று இருந்தது ருத்ரய்யாவிற்கு. “ஆமா... பூக்கோ என்ன விலங்கு?’’

“நாய்க்குட்டி’’

அந்தச் சிறுவனை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

“டாக்டர் அங்கிள், மிதிவண்டின்னா மிதிச்சிட்டு வரணும். இது தள்ளுவண்டி’’ விழித்தார் ருத்ரய்யா

“ஓ ஓட்டத் தெரியாதா?’’

இரண்டாவது தெரு கடக்கும்போது இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு சிறிய கல்லினைக் காலில் தட்டிக் கொண்டே வந்தான் சிறுவன். மூன்றாவது சாலை வந்ததும் மிதிவண்டியை நிறுத்தினான். “பிடித்துக்கொள்ளுங்கள் பூக்கோவை அழைத்து வருகின்றேன்’’ என்றான். ருத்ரய்யா மிதிவண்டியை நிறுத்தினார். அய்ந்து நிமிடமானது. சிறுவனைக் காணவில்லை. பின்னர் பத்தாவது நிமிடத்தில் வந்தான்.

“என்னப்பா எங்கே பூக்கோ’’

“தெரியல”

“தெரியலையா?’’

ருத்ரைய்யா அதிர்ந்தார்.

“தம்பி, என்னப்பா சொல்ற. பெயர் சொல்லி கூப்பிட்டுப் பார்’’

“கூப்பிட்டா வருமா?’’

“ஆமா..’’

“பூக்கோ பூக்கோ’’ என்று அழைத்தான். எங்கிருந்தும் எந்தச் சத்தமும், சலசலப்பும் இல்லை. சாலை அமைதியாக இருந்தது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மரங்கள் இருந்தன. ஞாயிறு என்பதால் எல்லோரும் வீட்டிற்குள் அடைந்து இருந்தார்கள். சில வீடுகளில் இருந்து சத்தமாக டிவியில் ஒலி மட்டும் கேட்டது.

“என்னப்பா பூக்கோ எங்கே? நீ கூப்பிட்டா வராதா?’’

“நான் கூப்பிட்டதே இல்லையே’’

இந்த பையன் சும்மா விளையாடுகின்றான் என நினைத்தார் ருத்ரைய்யா.

“அதை பூக்கோன்னு சொல்லித் தானே கூப்பிடுவ?’’

“இல்ல. அந்த பேரையே உங்க க்ளினிக் வரும்போது தான் வெச்சேன். நாய்ன்னு சொன்னா நல்லா இல்ல’’

‘சரி தான்’ என நினைத்துக்கொண்டார். தன் பையில் இருந்து ஒரு பிஸ்கட் துண்டு எடுத்து. “ச்சு. ச்சு ச்சு’’ என உச்சுக் கொட்டினார். மரத்தின் பின்னால் இருந்து நாய் வாலாட்டிக்கொண்டே, இல்லை... இல்லை... பூக்கோ வாலாட்டிக்கொண்டே வந்தது. முன்னங்காலில் அடிபட்டிருந்தது. பின்னங்காலில் சாக்கடையில் விட்டிருந்த சுவடு தெரிந்தது. பழுப்பு நிறத்திலும் ஆங்காங்கே வெள்ளை நிறத்திலும் இருந்தது பூக்கோ. அவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகே ஒரு குழாய் இருந்தது. அதில் நாயின் காய்களை கழுவி அழைத்து வரச்சொன்னார் ருத்ரைய்யா. சிறுவன் பூக்கோவின் முதுகில் தடவி அதனை அழைத்துச் சென்று கழுவினான்.

அவன் அழைத்து வருவதற்குள் நல்ல இடமாகப் பார்த்து சிறிய துண்டினை விரித்தார் ருத்ரய்யா. அவர் பையில் அதெல்லாம் இருந்தது. நாயினைச் சிறுவன் மடியில் அமர வைத்து முன்னங்காலுக்கு பொறுமையாகக் கட்டுப் போட்டார். “வலிக்காது பூக்கோ! டாக்டர் ரொம்ப நல்ல டாக்டர். சரியாப் போயிடும். ஊசி எல்லாம் போட மாட்டார். ஒழுங்கா மாத்திரை சாப்பிடணும் சரியா’’ என்று அதனைச் சமாதானம் செய்துகொண்டிருந்தான். வெள்ளை, கட்டு ஒன்று போட்டார்.

“சின்ன காயம் தான். சரியாகிடும்’’ என்றார் ருத்ரய்யா.

கட்டுப் போட்டதும் பூக்கோ தத்தித் தத்தி நடந்து சென்றது.

சிறுவன் ருத்ரய்யாவைப் பார்த்து புன்னகைத்தான். பைகளில் எல்லா பொருட்களையும் எடுத்து வைக்க உதவினான்.

“டாக்டருக்கு பீஸ் தரமாட்டியா தம்பி?’’ என்றார்.

“பீஸா?’’ என்றான்.

“ஆமாம்’’

சில நொடிகள் யோசித்தான். தன் சட்டைப் பையில் கைவிட்டு நான்கு கோலிக் குண்டுகளை எடுத்தான். அதில் பழையதாகி இருந்த கோலிக்குண்டினை மட்டும் எடுத்து திரும்ப பையில் போட்டுக்கொண்டு மூன்று கோலிக்குண்டுகளை ருத்ரய்யாவிடம் நீட்டினான். வாங்கிக்கொண்டார். பின்னர் திரும் அதை அவனுடைய சட்டை பாக்கெட்டில்லேயே போட்டுவிட்டு. “போய் சந்தோஷமா விளையாடு’’ என்றார்.

தன் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு ஒரு புறம் ருத்ரய்யா கிளம்ப மறுபுறம் சிறுவன் நடக்க ஆரம்பித்தான். சில அடிகள் நடந்தது ருத்ரய்யா திரும்பிப் பார்த்து.

“தம்பி, உன் பேரு என்ன?’’ என்றார்.

“பூக்கோ’’<

 

Share
 

முந்தைய மாத இதழ்

நம் கடமை! நம் கடமை! தொற்று  நோய்தான்   வந்திட்டால் தூர  ஒதுங்கி   இருந்திடுக: மற்ற  வர்க்குப்   பரவாமல் மாய்த்தே   அழித்தல்  நம்கடமை!   சுற்றுப்  புறத்து... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தா பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தா பகுத்தறிவாளரானது எப்படி? ஒப்பற்ற சுயசிந்தனையாளரான தந்தை பெரியார் ‘ஏட்டுக்கல்வி’ என்ற முறையில் தன்னை அடைத்துக் கொள்ளாத எங்கும் பறந்து, மரங... மேலும்
பெரியார் பிஞ்சு வாசகரின் கடிதம் - பரிசு பெற்றேன்; தொகையைக் கொடுத்தேன்! பெரியார் பிஞ்சு வாசகரின் கடிதம் - பரிசு பெற்றேன்; தொகையைக் கொடுத்தேன்! அன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு, உங்கள் பேத்தியின் வணக்கம். நலம். நலம் அறிய அவா. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோ... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. : பசிக்குமில்ல கதை கேளு.. கதை கேளு.. : பசிக்குமில்ல விழியன் ரொம்ப காலத்துக்கு முன்னாடி எல்லாம் இல்ல. இப்ப நடந்த கதை இது. ஊரே வீட்டில் அடங்கிடுச்சு. ஊர் மட்டுமில்ல உலகமே வீட்டில் அடங்கிடுச்ச... மேலும்
கணிதப் புதிர் சுடோகு கணிதப் புதிர் சுடோகு கடந்த இதழ் சுடோகு விடை மேலும்
இசைப்போம் வாரீர்! கொலைவாளினை எடடா! இசைப்போம் வாரீர்! கொலைவாளினை எடடா! இசைக் குறிப்பு: விஜய் பிரபு பாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் திரைப்படம்: மணிமகுடம் இசை: ஆர்.சுதர்சனம் இந்த இசைக் குறிப்புக்குரிய பா... மேலும்