Home காரணமின்றி ஏற்காதீர்கள் - கொரோனா எப்போது ஒழியும்? கடவுளுக்குத்தான் தெரியுமா?
சனி, 19 செப்டம்பர் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] - 16 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] - 16 கே.பாண்டுரங்கன் பெரியார் பிஞ்சுகளே! அருமை நெஞ்சங்களே! மீண்டும் நம் நினைவுக்கு .... Coordinating Conjunctions = ஒத்துழைப்பு இணைப்புச... மேலும்
தைக்காத சட்டை! தைக்காத சட்டை! நெய்யும் எந்தத் துணியும் இல்லா நேர்த்தி யான சட்டை! மெய்யில் ஒன்றிப் பிறவி அன்றே மிளிர்வ தான சட்டை!   பொய்யும் இல்லை புழுதி மண்ணும் ப... மேலும்
”எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா” ”எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா” பெரியார் பிஞ்சுகளே... அடுத்த மாதம் நம் பெரியார் தாத்தா பிறந்தநாள் வருகிறது அல்லவா? அந்த இதழில் இடம்பெறும் வகையில், “எனக்குப் பிடித்த பெர... மேலும்
மெய் சொல்லல் மெய் சொல்லல் மெய் சொல்லல் நல்லதப்பா தம்பி! மெய் சொல்லல் நல்லதப்பா! கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் - நீ உண்டதைச் சொல்லென்று சொன்னாலும், மண்டை யுடைத்... மேலும்
கோமாளி மாமா-8 : மாற்றம் வருமா? கோமாளி மாமா-8 : மாற்றம் வருமா? விடுமுறை நாள் மாலை நேரம் பூங்காவில் கதை சொல்ல கோமாளி மாமா வந்தார். வழக்கமாகக் குழந்தைகள் வரும் மரத்தடியில் ஒருவரையும் காணோம். சரி குழந்தைக... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் - கொரோனா எப்போது ஒழியும்? கடவுளுக்குத்தான் தெரியுமா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சிகரம்

கடவுள் நம்பிக்கை என்பது பகுத்தறிந்து பார்க்காமல் ஏன்? எப்படி? என்று வினா எழுப்பி விடை காணாமல், அப்படியே ஏற்றுக் கொள்வதால் வருவதாகும்.

இப்படி ஒரு கொரோனா வைரஸ் உலகை முடக்கி, லட்சக்கணக்கில் உயிர்களை இழக்கச் செய்யும்போது கடவுள் உண்டு என்று நம்புவது நகைப்பிற்குரியது ஆகும்.

எல்லாம் கடவுள் செயல் என்றால்

கொரோனாவும் கடவுள் செயல் என்று தானே பொருள்?

இப்படி ஒரு கொடிய நோயைக் கொடுப்பது கடவுள் ஆகுமா?  கொரோனா இயற்கை என்றால், உலகில் நடப்பது எல்லாம் கடவுள் செயல் என்பது தப்பு என்று ஆகிறது; கடவுள் இல்லை என்றும் ஆகிறது அல்லவா?

கொரோனாவுக்கு பயந்து கோயில்களே அடைக்கப்பட்டு, கடவுள் சிலைக்கே முகக் கவசம் போடப்படுகிறது என்றால், கடவுள் இல்லை என்பது உறுதியாகிறது அல்லவா?

கடவுள் எல்லா சக்தியும் உடையவர் என்றால் கொரானாவை ஒழித்து,  கோயில்களைத்  திறக்கச் செய்யாதது ஏன்?

எல்லா மத வழிபாட்டுத்தளங்களும் மூடப்பட்டன. திருவிழாக்கள், பண்டிகைகளுக்குக் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அர்ச்சகர்கள், குருமார்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், மிகத்தெளிவாகத் தெரிந்தது தான். கடவுளால் காப்பாற்ற முடியாது என்பது அனைவருக்கும் புரிகிறது.

எனவே, கடவுள் என்பதும், அது எல்லா சக்தியும் உடையது என்பதும், அது நம்மைக் காப்பாற்றும் என்பதும் தப்பு என்று இதன் மூலம் உறுதியாகிறது.

உலகத்தில் எல்லா நோய்களும் இயற்கையாகவோ, செயற்கையாகவோ தான்  வருகின்றன. மனிதன் முயற்சி செய்து, மருந்து கண்டுபிடித்து நோயை ஒழிக்கிறான். அப்படி இருக்க கடவுள் நோய் தீர்க்கும் என்று கடவுளை வேண்டிக் கொள்வது முட்டாள் தனம், அறியாமை, மடமை அல்லவா?

கடவுள் நோய் தீர்க்கும் என்றால் மருத்துவர்-களிடம் செல்லாமல், மருந்து சாப்பிடாமல், சிகிச்சை செய்யாமல் நோய் குணமாகுமா? நோய் வந்தபின் கடவுளை வேண்டிக் கொண்டு வீட்டிலேயே இருந்தால் நோய் குணமாகுமா? இறந்து தானே போவான்.

அப்படி இருக்க, நோய் வந்தால், கடவுளை வேண்டிக் கொள்வதும், காப்பாற்றுவது கடவுள் கையில் தான் உள்ளது என்பதும் தப்பல்லவா?

கொரோனா ஒழிய வேண்டும் என்று கடவுளுக்கு பூசை நடத்தி, யாகம் செய்தார்களே கொரோனா ஒழிந்ததா? இல்லையே! மாறாக கொரோனா  கோரமாக அல்லவா அதிகரித்து உயிர்களைக் கொள்ளை கொள்கிறது.

ஆக, கொரோனாவுக்குப் பயந்து கோயில்களே சாத்தப்பட்டு மூடிக் கிடப்பது கடவுள் இல்லை என்பதைத் தானே அறிவிக்கிறது. கடவுளே இல்லை எனும் போது, ‘கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்’ என்பது தப்பு அல்லவா? முதல்வரே சொன்னாலும் அது தப்புதானே?

கொரோனா ஒழிய வேண்டுமென்றால் நாம் பாதுகாப்பாக, தூய்மையாக இருக்க வேண்டும். முகமூடி அணிதல், சானிடைசர் அல்லது சோப்புப் போட்டுக் கை கழுவுதல் போன்றவற்றை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உலகெங்கும் நடக்கும் மருத்துவ ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்கப்-போகும் தடுப்பூசிகளை, மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம்தான் தொற்றை ஒழிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.<

Share
 

முந்தைய மாத இதழ்

ஜூலை - 15 - கல்வி வளர்ச்சி நாள் ஜூலை - 15 - கல்வி வளர்ச்சி நாள் ஜூலை - 15 - கல்வி வளர்ச்சி நாள் சிரிப்புடன் முகத்தினில் சிறிதேனும் அறிவொளி சேர்ந்திடார்க் கிருப்பவை சீழுடைப் புண்கள்!   விருப்புடன் ... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: உண்மையே மேன்மை! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: உண்மையே மேன்மை! பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே, உங்களில் சிலரை பெரியார் பிஞ்சுகளுக்கான பரிசளிப்பு விழாவிலும், மாணவர்களுக்கான பழகு முகாம் நிகழ்விலும், கா... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) - 15 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) - 15 கே.பாண்டுரங்கன் Correlative Conjunctions என்றால் என்ன? பெயரிலேயே தெரிகிறதே... Co(r)‘relative’ Conjuntions CO என்றால் “உடன்’’ Relative என்... மேலும்
இளம் வயதில் தென் அமெரிக்கச் சிகரத்தைத் தொட்ட இந்திய மாணவி! இளம் வயதில் தென் அமெரிக்கச் சிகரத்தைத் தொட்ட இந்திய மாணவி! மும்பையைச் சேர்ந்த மாணவி காம்யா கார்த்திகேயன் என்பவர் மும்பை கொலாபாவில் உள்ள இந்திய கப்பற்படை பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவி தென்... மேலும்
கோமாளி மாமா-7 : முடியும் கோமாளி மாமா-7 : முடியும் ஓவியம், கதை:மு.கலைவாணன் கோமாளி மாமா பூங்காவுக்குள் நுழையும் போதே கதை சொல்லும் மரத்தடியில் மாணிக்கம் மல்லிகா, செல்வம் மூன்று பேரும் இருப்ப... மேலும்