Home திரைப்படம் - ஜோ ஜோ ரேபிட்
வெள்ளி, 04 டிசம்பர் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
இசைப்போம் வாரீர்! - ஜாதி ஜாதி ஜாதி என்று இசைப்போம் வாரீர்! - ஜாதி ஜாதி ஜாதி என்று இசைக் குறிப்பு: விஜய் பிரபு Scale F minor 6/8 ஜாதி ஜாதி ஜாதி என்று தாழ்ந்து போனவன் /சாச சாச  சாரி  காம/  பாத   பாம க... / தமிழன் என்று... மேலும்
மாமழை போற்றுவோம்! மாமழை போற்றுவோம்! நிலவுலகின் நீரெல்லாம் நீராவியாய் எழும்பியே நீலவானப் பரப்பினையே மேகமாகி மூடுமே! உலவுகின்ற காற்றுமாங்கே உரசுகையில் கரைந்துமே உதிருகின்ற ந... மேலும்
வீர வரலாறு : நிறவெறியை வென்ற அய்ந்து வயது வீர வரலாறு : நிறவெறியை வென்ற அய்ந்து வயது ‘ரூபி பிரிட்ஜஸ்’ குழந்தைகளுக்கான ஒரு திரைப்படம். அது ஒரு சிறுமியின் கதை. அந்தச்சிறுமி கருப்பு இனத்தவர். இங்கே எப்படி தாழ்த்தப்பட்டோரை, உயர... மேலும்
கோமாளி மாமா-11 : அன்பைக் கொடு! கோமாளி மாமா-11 : அன்பைக் கொடு! ஓவியம், கதை:மு.கலைவாணன் மாணிக்கமும், கோமாளி மாமாவும் தோட்டத்திற்குள் ஒன்றாக வந்தனர். கதை சொல்லும் மரத்தடியில் மல்லிகா மட்டும் வருத்தத்துட... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: அர்ஜுனா என்றால் இடி தலையில் விழாதா? காரணமின்றி ஏற்காதீர்கள்: அர்ஜுனா என்றால் இடி தலையில் விழாதா? சிகரம் மின்னல் மின்னி இடி இடிக்கும்போது “அர்ஜூனா, அர்ஜூனா” என்று சொன்னால் இடி தாக்காது என்று மக்கள் நம்பி, அவ்வாறே சொல்கின்றனர். பிள்ளைகள... மேலும்
திரைப்படம் - ஜோ ஜோ ரேபிட்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

இரண்டாம் உலகப் போருக்கு முக்கியக் காரணமாக இருந்த ஜெர்மனியில் நடைபெற்ற கொடுமையான நிகழ்வுகளை, கொஞ்சம் கிண்டலான நாடகம் போல, நகைச்சுவையாகப் புரிய வைத்திருக்கிறது இந்தத் திரைப்படம்.

ஜோஜோ பெட்ஸ்லர் (Jojo Betzler) என்ற ஜெர்மன் சிறுவனின் வாழ்க்கையை மய்யமாகக் கொண்டு நகர்கிறது. ஜோஜோ, நாஜிப் படையில் முக்கியப் பங்கு பெறுவதை தனது இலட்சியமாகவும், ஜெர்மானிய சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரை நிஜவாழ்க்கையில் நல்லவராகவும், நட்புள்ளம் படைத்தவராகவும் கற்பனை செய்து கொள்கிறான். அடோல்ப் ஹிட்லர், ஜோஜோவின் கற்பனை நண்பராகவே படம் முழுவதிலும் வருகின்றார். சிறு வயது என்பதால் ஹீரோயிசம் அவனுக்குப் பிடித்திருக்கிறது. 10-14 வயதுச் சிறுவர்களுக்கான ஹிட்லரின் இளைஞர் படையில் (Deutsches Jungvolk in der Hitler Jugend - German Youngsters in the Hitler Youth) சேருகிறான். அவர்கள் தரும் குட்டிக் குட்டி வேலைகளை ஒரு போர்வீரனின் மனநிலையோடு செய்கிறான்.

ஜோஜோவின் தாய் (ரோஸி) அவனுக்கு மாறாக போரினை வெறுப்பவராகவும், அமைதியை விரும்புபவராகவும் உள்ளார். தன் மகன் ஜோஜோவுக்கே தெரியாமல், எல்சா என்ற ஒரு யூத இளம் பெண்ணை தனது வீட்டில் மறைத்து வைக்கிறார். ஜோஜோவின் மறைந்த அக்காவின் வகுப்புத் தோழி தான் எல்சா. அவள் ஒரு யூதப் பெண் என்று அறிந்ததும், நாஜிப் படையில் சேரும் ஆசையினால் அப்பெண்ணிடமிருந்து யூதர்களை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள நினைக்கிறான் ஜோஜோ. அதை யிமீஷ் ஷிமீநீக்ஷீமீts என்ற பெயரில் படங்களுடன் கூடிய ஒரு புத்தகம் போல உருவாக்குகிறான். அப்படி அவளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டிருக்கும்பொழுது. அவளைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் வருங்காலக் கணவரைப் பற்றி தெரிந்து கொள்கின்றான். எல்சாவின் மீது இரக்கம் கொண்டு, அவளது காதலன் எழுதியதைப் போன்ற போலித் தந்திகளை உருவாக்கி யூதப்பெண்ணிடம் படிப்பதை வழக்கமாக கொள்கிறான். தொடக்கத்தில் ஹிட்லர் இளைஞர் படையில் சொல்லித் தரப்பட்டதன் அடிப்படையில், யூதர்கள் என்றால் மனிதர்களுக்கு மாறானவர்கள், வில்லன்கள், கொடூரமானவர்கள் என்றே கருதி, எல்சாவைக் காட்டிக் கொடுக்கப் போவதாக மிரட்டுகிறான். பிறகு அவள் மீது அன்பு கொள்ளத் தொடங்குகிறான்.

ஒரு நாள் ஜோஜோ, தன் தாய் ரோஸி நாஜிகளுக்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகிப்பதைப் பார்க்கிறான். அவளுக்கு தேசப் பற்று இல்லையெனக் கூறி அவளிடம் கோபம் கொள்கிறான். பிறகொரு நாள் ரோஸி, ஜோஜோவுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் போது, இயக்குநர் தாய் ரோசியின் காலணியைப் பார்வையாளர்களுக்கு பதிவு செய்கின்றார். இது எதற்காக என்று குழம்பிய பார்வையாளர்களுக்கு, அடுத்த காட்சியில் ஜோஜோ நகரத்தை சுற்றி வரும்போது, அக்காலணி அணிந்த பெண் பொது தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளதை காண்கின்றான் என்பதாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படம் பார்த்துக்கொண்டு இருப்பவர்களின் மனதைப் பதற வைத்த காட்சி அது. அவனது தாயார் நாஜிப் படைக்கு எதிராகத் துண்டுச் சீட்டுகளை விநியோகம் செய்ததால் நாஜிப்படையினரால் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டுவிட்டார்.

சோகத்திலும் கோபத்திலும் இருக்கும் ஜோஜோ வீடு திரும்பிய பின் எல்சாவைக் கொலை செய்ய முற்படுகிறான். அதை செய்ய முடியாமல் அவள் முன் கதறி அழுகிறான். விரைவில் ரஷ்யப் படைகள் நகருக்குள் நுழைய, தன் நண்பன் மூலம் அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிகின்றான்.

போர் முடிந்த தருவாயில், வீடு திரும்பும் ஜோஜோ, எல்சாவின் வருங்கால கணவர் எழுதிய போலிக் கடிதத்தைப் படிக்கத் துவங்குகிறான். அப்போது எல்சா, தான் பொய் கூறியதாகவும் தன் வருங்காலக் கணவர் என்று சொன்ன நேதன் காசநோயால் முன்பே இறந்துவிட்டதாகவும் கூறுகிறாள். பின்னர் இருவரும் ஜெர்மனியை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முடிவெடுக்கின்றனர்.

யூதப் பெண்ணுக்கும் ஜோஜோவிற்கும் வயது வித்தியாசம் பெரிதாக இல்லாமையால் அவர்களுடைய உரையாடல்கள் சிறுவர்களின் வெகுளித்தனமான குணங்களை வெளிப்-படுத்துகின்றன. மிகக் குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, படம் நகர்வதால் பார்ப்பவர்களுக்கு எளிமையாகவும், குழப்பம் இல்லாமலும் கதையை உணரமுடிகிறது. யூதப் பெண்ணுக்கு உதவுவதால் தன் கற்பனை ஹிட்லரிடம் ஜோஜோ வாதாடும் காட்சி, எல்சா மாட்டிக் கொள்வாளோ என்ற படபடப்பு ஜோஜோவைப் போல நம்மையும் தொற்றிக் கொள்ளும் காட்சி, கடைசியில் ஜோஜோவை யூதன் என்று சொல்லி நேச நாட்டுப் படைகளிடமிருந்து தப்புவிக்கும் காட்சி போன்றவை சுவாரசியமான காட்சிகளாகும்.

நாம் பாடங்களில் படிக்கும் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் நடந்தது என்ன என்பதை புரிந்து கொள்வதற்கு உதவும்.

Share
 

முந்தைய மாத இதழ்

நல்லுணவு நல்லுணவு கேழ்வரகு கம்பு சோளம் கேடற்ற வரகு சாமை கூழ்குடித்தல் எல்லாம் பண்டைக் குலத்தமிழர் சீர்ஆ காரம்;   காலையிலே நீரா காரம் கடும்கோடைக் கேற்ற... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல! அன்பார்ந்த பேத்தி, பேரன்களே, எல்லாரும் எப்படி இருக்கிங்க? “கொரோனா காரணமாக எவ்வளவு நாள் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே இருப்பது. ‘போர்’ ... மேலும்
துடுக்குத் தம்பி! துடுக்குத் தம்பி! “என்னடா தம்பி, எப்டி இருக்க? என்ன படிக்கிற? நல்லாப் படிக்கிறியா? எவ்ளோ மார்க் வாங்குற?” “ஏன் அங்கிள், நாங்க என்னைக்-காச்சும் பெரியவங்களைப... மேலும்
கதை கேளு.. கதை கேளு..: வானவில்லின் வண்ண மகள் கதை கேளு.. கதை கேளு..: வானவில்லின் வண்ண மகள் விழியன் அன்பாவுக்கு ஏழு வயது. அவள் வீட்டில் எல்லா வசதியும் இருந்தது. எது கேட்டாலும் கிடைக்கும் வசதி இருந்தது. ஆனால் அவள் எதையுமே கேட்டதில... மேலும்
பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு எதுக்குக் குளிக்கணும் எதுக்குக் குளிக்கணும்? குளிச்சாத்தான் அழுக்குப் போகும். எதுக்கு அழுக்குப் போகணும் எதுக்கு அழுக்குப் போகணும் அழுக்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: விழிக்கும் முகராசிக்கு  ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா? காரணமின்றி ஏற்காதீர்கள்: விழிக்கும் முகராசிக்கு ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா? சிகரம் இரவு உறக்கத்திற்குப் பின் விடிந்து விழிக்கும் போது யார் முகத்தில் முதலில் விழிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அன்றைக்கு நல்லதும் கெட்டத... மேலும்