Home அறிவோம்: தடுப்புசி-360
புதன், 12 மே 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அறிவு இயக்கம் காட்டிடு அறிவு இயக்கம் காட்டிடு தேர்தல் இங்கே தேடி வந்தது தேதி காட்டுது - அதில் தேர்வு பெற்ற கட்சிக் காரர் சேதி காட்டுது. பாடு பட்டோர் பாடம் கற்றுப் பார்த்துத் தேர்ந... மேலும்
இசைப்போம் வாரீர்! - மக்கள் நலத்துக்கு மதமா இசைப்போம் வாரீர்! - மக்கள் நலத்துக்கு மதமா பாடல்:  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இசைத் தொகுப்பு: பாரதிதாசன் பாட்டருவி குரல்:  நித்யஸ்ரீ மகாதேவன் Scale: c minor. sign: 6/8 இராகம் : ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா? காரணமின்றி ஏற்காதீர்கள்: செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா? சிகரம் அறிவியலின் வளர்ச்சி கட்டாயத் தேவை என்பதை எவரும் ம-றுக்க முடியாது. அதே நேரத்தில் அதன் பக்க விளைவாகக் கேடுகள், அழிவுகள் நிகழ்வதையும்... மேலும்
அறிவோம்: தடுப்புசி-360
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

ஹய்யா லீவ்! என்பது போய் அய்யய்யோ லீவ் என்ற நிலைக்கு வந்துட்டோம். எல்லாத்துக்கும் காரணம் கொரோனா. ஒவ்வொரு கொள்ளை நோய்க்கும் தடுப்பூசி இருக்கு. அப்போ, கொரோனாவுக்கு??? அதனால்தான் இந்த கோவிட் - 19 எனப்படும் கொரோனா நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பந்தயத்தில் உலக நாடுகள் வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. வாங்க கொஞ்சம் தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்வோம்.

தடுப்பூசின்னா வெறும் ஊசியில்லை. அதில் வைரஸ் இருக்கும். அட ஆமாப்பா. ஆனால் செயல் இழக்கச்செய்யப்பட்ட வைரஸ் அல்லது தீங்கு விளைவிக்காத வைரஸின் குணாதிசயங்களைக் கொண்ட ஸ்டார்ச் போன்றவை இருக்கும். நம்ம உடலில் நம்மைக் காக்க ஒரு தனி இராணுவமே இருக்கு. ஏதாச்சும் கெடுதல் விளைவிக்கும் கிருமி உடலில் புகுந்தால் இராணுவ வீரர்கள் அதான் வெள்ளை அணுக்கள் -சில ஆண்டிபாடிகளை வெளியிட்டு அந்த கிருமியை அழித்துவிடும். ஒவ்வொரு கிருமிக்கும் ஒவ்வொரு ஆன்டிபாடியை வெளியிடும். எந்த கிருமிக்கு எந்த ஆன்டிபாடியை வெளியிட்டோம் என்பதை நமது மூளை நினைவில் வைத்துக்கொள்ளும். மறுபடியும் அந்த கிருமி உடலுக்குள் புகுந்தால் முன்பு வெளியிட்ட ஆன்டிபாடியை நினைவில் வைத்துக் கொண்டு மீண்டும் வெளியிடும்.

தடுப்பூசிகளில் டாக்ஸாய்டு (ஜிஷீஜ்ஷீவீபீ) போன்று பல வகைகள் உண்டு.

கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்றால்

5 சோதனைகளை தாண்டவேண்டும். முதலில் ஆய்வகத்தில் மிருகங்களிடம் தடுப்பூசியை செலுத்தி சோதனை நடத்தப்படும். மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையில் மொத்த மூன்று கட்டங்கள். முதல் கட்டத்தில் ஒரு சிறிய குழுவிற்குத் தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இந்த தடுப்பூசி அனைவருக்கும் உகந்ததா என்று பரிசோதிக்கப்படுகிறது. இந்த

4 சோதனைகளின் முடிவுகளை மருந்துவக்குழு ஒன்று ஆராய்ந்து அந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் தரும்.

கோவிட் - 19 நோய்க்கு இதுவரை 165 தடுப்பூசிகளுக்கும் மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 27 தடுப்பூசிகள் 2,3 ஆம் கட்ட ஆய்வில் இருக்கின்றன. அமெரிக்காவின் மாடர்னா (Moderna) எனப்படும் கோவிட் - 19க்கான தடுப்பூசிதான் முதன்முதலில் 2 ஆம் கட்ட சோதனைக்குட்பட்டது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கோவிட் - 19க்கு AZO1222 எனும் தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி கொரோனாவிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக உயர்த்துகிறது. உலகளவில் இந்தத் தடுப்பூசியை மனிதர்களின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இந்தியாவிலும் கோவிட் - 19 நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 3 ஆம் கட்ட ஆய்வில் உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு கோவாக்சின் (Covaxin) என்று பெயரிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.

ரஷ்யா வெற்றிகரமாக ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துவிட்டார். இருந்தாலும் அதை இன்னும் சோதிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்து, பரிசோதனைகளைத் தாண்டி. மக்களின் பயன்பாட்டுக்கு வர சுமார் 2-4 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்த கோவிட் - 19க்கு அடுத்த ஆண்டுக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், அதுவே அதிவிரைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி என்ற பெயரைப் பெறும்.

தடுப்பூசி நிச்சயம் கண்டுபிடிக்கப்படும். ஆனால், அதுவரை? வெளியே செல்லாமல் இருப்போம். கட்டாயமாக செல்ல வேண்டும் என்ற நிலை வந்தால், முகக்கவசம் அணிவது அவசியம். தனி மனித இடைவெளியைக் கடைபிடித்துக் கொண்டு அடிக்கடிக் கையை சோப் போட்டுக் கழுவுவோம். வீட்டிலிருப்போம்.  விலகியிருப்போம். கொரோனாவை வெல்வோம்.

Share
 

முந்தைய மாத இதழ்

சிட்டாய் பறந்துவா! சிட்டாய் பறந்துவா! சின்னச் சின்னச் சிட்டே வா, சிறக டித்துக் கிட்டே வா! அன்ன நடை போட்டே வா, அச்சந் தன்னை விட்டே வா!   சின்ன அலகால் கொத்தி வா, சிறிய காலா... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அறிவியலுக்கே இறுதி வெற்றி பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அறிவியலுக்கே இறுதி வெற்றி பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, நலமா? எப்படி இருக்கீங்க? கொரோனா-_கோவிட் 19 போய்விட்டது என்று நினைத்து விடாதீர்கள்! இன்னமும் அதன் வீச்சு... மேலும்
கதை கேளு.. கதை கேளு..: பொறந்த நாளு கதை கேளு.. கதை கேளு..: பொறந்த நாளு விழியன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து விடியற்காலை நான்கு முப்பதுக்கு வந்தடைந்தது. செந்தில்நாதனும் அவன் மகன் புகழேந்தியும் இறங்க... மேலும்
188 years challenge- ஆமைத் தாத்தா 188 years challenge- ஆமைத் தாத்தா   வாருங்கள்-! ஹலோ சொல்லுவோம் உலகின் அதிக வயதான ஜொநாதானுக்கு. பல உயிரினங்கள் மனிதர்களின் வாழ்நாளைவிட அதிகமான ஆண்டுகள் வாழ்வதைப் பற்றிக் க... மேலும்
கின்னசில் கின்னசில் 189 வயதை நிறைவு செய்து, ஏற்கனவே கின்னசில் இடம் பெற்றுள்ள கேப்டன் ஜேம்ஸ்குக்கின் ‘டுஸ் மலிலா’ (1777 _ 16.05.1966) என்ற டோங்காநாட்டு பெண் ஆ... மேலும்
இசைப்போம் வாரீர்! - தந்தையைக் காத்த தாயொருத்தி இசைப்போம் வாரீர்! - தந்தையைக் காத்த தாயொருத்தி E minor, Sign,  2/4 பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து இசை: தாஜ்நூர் பல்லவி தந்தையைக் காத்த தாயொருத்தி / சாசச / சாசச / சாசச ச....../ அவர்த... மேலும்