மெய் சொல்லல்
| Print |
User Rating: / 0
PoorBest 

மெய் சொல்லல் நல்லதப்பா தம்பி!

மெய் சொல்லல் நல்லதப்பா!

கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் - நீ

உண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,

மண்டை யுடைத்திட வந்தாலும் - பொருள்

கொண்டுவந் துன்னிடம் தந்தாலும்.

மெய் சொல்லல் நல்லதப்பா!...

பின்னவன் கெஞ்சியும் நின்றாலும், அன்றி

முன்னவன் அஞ்சிட நின்றாலும், அன்றி

மன்னவரே எதிர் நின்றாலும் - புலி

தின்னவரே னென்று சொன்னாலும் - நீ

மெய் சொல்லல் நல்லதப்பா!...

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

Share