Home ஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்!
செவ்வாய், 27 அக்டோபர் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
ஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்! ஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்! தெருவினில் கிடக்கும் கழிவுகள் தப்பித் தெரியாமல் நடக்கும் கால்களில் பட்டுப் பரவிடும் ‘கரோனா’ தடுத்துக் ‘காலணி’ பலருயிர் காத்திடும் பாதக்... மேலும்
கோமாளி மாமா-10 : தலைவன் கோமாளி மாமா-10 : தலைவன் ஓவியம், கதை: மு.கலைவாணன் மாணிக்கம் கதை கேட்க தோட்டத்திற்குள் நுழையும் போதே செல்வமும், மல்லிகாவும் அங்கே இருந்தனர். வேகவேகமாக வந்த மாணிக்க... மேலும்
இசைப்போம் வாரீர்! - சின்னச் சின்னப் பாப்பா இசைப்போம் வாரீர்! - சின்னச் சின்னப் பாப்பா இசைக் குறிப்பு: விஜய் பிரபு Scale: scale F, 4/4 பல்லவி சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க / பசரிக   / ரீச........./ பசரிக சாரீ...... மேலும்
PERIYAR 142 - Why I like PERIYAR THATHA? PERIYAR 142 - Why I like PERIYAR THATHA? INIYA EZHILVADIVAN Hello friends!! My name is Iniya and I like superheroes a lot. They save the world from bad people doing wrong things;... மேலும்
ஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

தெருவினில் கிடக்கும் கழிவுகள் தப்பித்

தெரியாமல் நடக்கும் கால்களில் பட்டுப்

பரவிடும் ‘கரோனா’ தடுத்துக் ‘காலணி’

பலருயிர் காத்திடும் பாதக் கவசம்!

 

ஒருவரின் அருகில் ஒருவரும் நெருங்கி

உட்கார்ந்து தொட்டுப் பேசிடும் பொழுதில்

இருவரின் உடலையும் கிருமியின் தாக்கம்

எட்டாது காத்திடும் இருகைக் கவசம்!

 

விரலது தவறி விழியிலும் படாமல்

வியாதியும் நுழைய வழியையும் விடாமல்

அரணெனக் கண்ணாடி அதும்விழிக் கிடையாய்

அமைந்ததைக் காத்திடும் அரும்விழிக்கவசம்!

 

இருமலில் தும்மலில் எழும்0நீர்த் துளிபோய்

எதிரினில் உள்ளவர் களின்மேல் விழாமல்

சரிவர மூக்குடன் சளிவாய் மூடியே

சமூகத்தைக் காத்திடும் சகமுகக் கவசம்!

அரசினர் போட்டிடும் ஊரடங் காணையை

அறியாது மதியாது ஆங்காங்கு மோதியே

இருசிறு சக்கர வாகன ஓட்டிகள்

இறவாது காத்திடும் இடும்தலைக் கவசம்!

மருத்துவர், காவலர், செவிலியர் யாவரும்

மரணத்தைத் துச்சமாய் மதித்துயிர் நேசமாய்ப்

பொறுப்புடன் பொதுப்பணி புரிந்திட உதவியே

புவனத்தைக் காத்திடும் புகழ்உடற் கவசம்!

- தளவை இளங்குமரன், இலஞ்சி

Share
 

முந்தைய மாத இதழ்

விடுதலையைத் திராவிடர்க்கு நெய்தார்! விடுதலையைத் திராவிடர்க்கு நெய்தார்! தங்கையரே! தம்பியரே! வாருங்கள்! - தலைவர் தந்தை பெரியார் வாழ்வைக் கேளுங்கள்! எங்கெங்கும் அவர்கொள்கை பரப்புங்கள்! - தமிழர் இனமானம் குன்றாத... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: குழந்தைகளைக் கொண்டாடிய தாத்தா வாழ்க! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: குழந்தைகளைக் கொண்டாடிய தாத்தா வாழ்க! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே! எல்லோருக்கும் பெரியார் தாத்தா 142ஆம் பிறந்தநாள் வாழ்த்துகள். நமக்கு எப்போதும் செப்டம்பர் 17ஆம் தேதி என்ற... மேலும்
கதை கேளு.. கதை கேளு..: யானைக்கு விருந்து கதை கேளு.. கதை கேளு..: யானைக்கு விருந்து விழியன் வயதான அந்த யானை ஆடி அசைந்து நடந்து வந்தது. வழக்கமாகச் செல்லும் பாதையில் தான் நடந்து வந்தது. திடீரென ‘கீச் கீச்’ என சத்தம். சுற்றி... மேலும்
உலகச் சாதனை புரிந்த சிறுமி! உலகச் சாதனை புரிந்த சிறுமி! உலகப் பொதுமறையான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி உலகெங்கும் பல்வேறு நாடுகளில், பல்வேறு அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வி... மேலும்
துணிச்சல் : விமானத்தில் ஒரு வீராங்களை துணிச்சல் : விமானத்தில் ஒரு வீராங்களை இந்தியாவில் ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்படும்நாள் செப்டம்பர் 5 என்பது நமக்குத் தெரியும். அதே நாளில் ஓர் இளம் வீரப் பெண்மணியின் நினைவுகளு... மேலும்