Home வீர வரலாறு : நிறவெறியை வென்ற அய்ந்து வயது
புதன், 12 மே 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அறிவு இயக்கம் காட்டிடு அறிவு இயக்கம் காட்டிடு தேர்தல் இங்கே தேடி வந்தது தேதி காட்டுது - அதில் தேர்வு பெற்ற கட்சிக் காரர் சேதி காட்டுது. பாடு பட்டோர் பாடம் கற்றுப் பார்த்துத் தேர்ந... மேலும்
இசைப்போம் வாரீர்! - மக்கள் நலத்துக்கு மதமா இசைப்போம் வாரீர்! - மக்கள் நலத்துக்கு மதமா பாடல்:  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இசைத் தொகுப்பு: பாரதிதாசன் பாட்டருவி குரல்:  நித்யஸ்ரீ மகாதேவன் Scale: c minor. sign: 6/8 இராகம் : ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா? காரணமின்றி ஏற்காதீர்கள்: செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா? சிகரம் அறிவியலின் வளர்ச்சி கட்டாயத் தேவை என்பதை எவரும் ம-றுக்க முடியாது. அதே நேரத்தில் அதன் பக்க விளைவாகக் கேடுகள், அழிவுகள் நிகழ்வதையும்... மேலும்
வீர வரலாறு : நிறவெறியை வென்ற அய்ந்து வயது
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

‘ரூபி பிரிட்ஜஸ்’ குழந்தைகளுக்கான ஒரு திரைப்படம். அது ஒரு சிறுமியின் கதை. அந்தச்சிறுமி கருப்பு இனத்தவர். இங்கே எப்படி தாழ்த்தப்பட்டோரை, உயர்ஜாதியினர் ஜாதிவெறியோடு நடத்துகிறார்களோ அது போல் அமெரிக்காவில் கருப்பு இனத்தவர்களை நடத்துவார்கள்.

அச்சிறுமிக்கு படிக்க ஆசை. அச்சிறுமி கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதால் அமெரிக்கப் பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இனக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. இங்கு எப்படி ஜாதி வெறியோ அது போல் அங்கே இனவெறி அன்று அதிகம் இருந்தது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளும் சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும் லூசியானா மாநிலத்தில் வெள்ளையர் பயின்ற பள்ளிகளில் கருப்பினத்தவர் பயில அனுமதிக்கப்படவில்லை.

நீதிமன்ற உத்தரவை அரசுப் பள்ளிகள் கடைப்பிடிக்கும்படி கடுமையாக வலியுறுத்தப்பட்டது. எனவே, கருப்பின மாணவர்கள் பள்ளியில் சேர்வதைத் தடை செய்ய பள்ளிகள் ஓர் உத்தியைக் கையாண்டன. அதுதான் நுழைவுத் தேர்வு எனும் தடைக்கல். நுழைவுத் தேர்வில் கருப்பினக் குழந்தைகள் தேர்ச்சி பெற இயலாது என நினைத்தனர். ஆனால், தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் அக்குழந்தைகள் பள்ளியில் சேரப் பயந்தார்கள். ஆனால், அதில் ஒரு சிறுமி  மட்டுமே பள்ளியில் சேர்ந்தாள். அச்சிறுமியின் தாய், தன் மகள் படித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 1960இல் நவம்பர் 14 அன்று பள்ளிக்கு நான்கு காவல்துறையினரின் உதவியோடு, நிமிர்ந்த தலையோடு வகுப்புக்குச் சென்றாள் அச்சிறுமி. அவள் பள்ளிக்குச் சென்ற முதல்நாளே நூற்றுக்கணக்கான வெள்ளையர்கள் பள்ளியின் வாசலில் அச்சிறுமிக்கு எதிராக முழக்கமிட்டு எதிர்த்தனர்.  அச்சிறுமியோ, அது குறித்து அச்சமோ கவலையோ கொள்ளாமல் தன் தாயின் வாக்கின்படி நிமிர்ந்த தலையோடு பள்ளிக்குச் சென்றாள். ஓர் ஆசிரியர் தவிர மற்ற அனைத்து ஆசிரியர்களும் அச்சிறுமிக்குப் பாடம் எடுக்க மறுத்தனர். எதிர்ப்பைக் காட்டும் வகையில் வெள்ளையர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினார்கள். அச்சிறுமி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்தாள். ஆனால், சில நாள்களிலேயே வேறு வழியின்றி பிற பெற்றோரும் ஒவ்வொருவராக தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்தனர்.

மிரட்டல்களுக்குப் பயப்படாமல் அய்ந்தே வயதான அச்சிறுமி தினமும் பள்ளிக்குச் சென்று வந்தாள். இதன் காரணமாக சிறுமியின் தந்தை அவர் பணி செய்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர்கள் குடும்பத்தினருக்கான பொருள்கள் தருவது கூட கடைகளால் நிறுத்தப்பட்டது. பள்ளிச் சீருடை வாங்கக் கூட அவளுக்கு வசதியில்லை. ஆனாலும், கல்விதான் தன்னை விடுவிக்கும் என்கிற சிந்தனையை அச்சிறுமியின் மனதில் ஆழமாகப் பதியவைத்தார் அவரது தாய். ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் கல்வி கற்றே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் அச்சிறுமி. அப்படி உறுதியுடன் இருந்து கல்வி பயின்றதுதான் அவளின் சாதனை. எந்தப் பள்ளி அவரை வேண்டாம் என்று ஒதுக்கியதோ, அந்தப் பள்ளியிலேயே அவருக்குச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அச்சிறுமியின் பெயர்தான்  ரூபி பிரிட்ஜஸ்.

அவள் இப்போது ஓர் இனத்தின் அடையாளம். “எவ்வளவு மோசமான சூழலிலும் ரூபி அழுது நாங்கள் பார்த்ததில்லை. எங்களுக்கு நடுவே, சிறிய ராணுவ வீராங்கனையைப் போல் அழகாக அவள் நடந்து வருவாள்’’ என்கிறார்  அவளை அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரி சார்லஸ் பர்க்ஸ்.

வரலாற்றைப் படைப்பவர்கள் அப்படித்தானே இருப்பார்கள்! எந்த நாடாக இருந்தாலும்,ஊராக இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்த _ கைதூக்கி விட கல்வியால் மட்டுமே முடியும்.  ஆகையால் நமக்குக் கல்வி முக்கியம். எக்காரணத்தைக் கொண்டும் யார் என்ன கூறினாலும் கல்வியைக் கைவிடாதீர்கள்!

Share
 

முந்தைய மாத இதழ்

சிட்டாய் பறந்துவா! சிட்டாய் பறந்துவா! சின்னச் சின்னச் சிட்டே வா, சிறக டித்துக் கிட்டே வா! அன்ன நடை போட்டே வா, அச்சந் தன்னை விட்டே வா!   சின்ன அலகால் கொத்தி வா, சிறிய காலா... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அறிவியலுக்கே இறுதி வெற்றி பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அறிவியலுக்கே இறுதி வெற்றி பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, நலமா? எப்படி இருக்கீங்க? கொரோனா-_கோவிட் 19 போய்விட்டது என்று நினைத்து விடாதீர்கள்! இன்னமும் அதன் வீச்சு... மேலும்
கதை கேளு.. கதை கேளு..: பொறந்த நாளு கதை கேளு.. கதை கேளு..: பொறந்த நாளு விழியன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து விடியற்காலை நான்கு முப்பதுக்கு வந்தடைந்தது. செந்தில்நாதனும் அவன் மகன் புகழேந்தியும் இறங்க... மேலும்
188 years challenge- ஆமைத் தாத்தா 188 years challenge- ஆமைத் தாத்தா   வாருங்கள்-! ஹலோ சொல்லுவோம் உலகின் அதிக வயதான ஜொநாதானுக்கு. பல உயிரினங்கள் மனிதர்களின் வாழ்நாளைவிட அதிகமான ஆண்டுகள் வாழ்வதைப் பற்றிக் க... மேலும்
கின்னசில் கின்னசில் 189 வயதை நிறைவு செய்து, ஏற்கனவே கின்னசில் இடம் பெற்றுள்ள கேப்டன் ஜேம்ஸ்குக்கின் ‘டுஸ் மலிலா’ (1777 _ 16.05.1966) என்ற டோங்காநாட்டு பெண் ஆ... மேலும்
இசைப்போம் வாரீர்! - தந்தையைக் காத்த தாயொருத்தி இசைப்போம் வாரீர்! - தந்தையைக் காத்த தாயொருத்தி E minor, Sign,  2/4 பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து இசை: தாஜ்நூர் பல்லவி தந்தையைக் காத்த தாயொருத்தி / சாசச / சாசச / சாசச ச....../ அவர்த... மேலும்