இசைப்போம் வாரீர்! - ஜாதி ஜாதி ஜாதி என்று | ||||
|
இசைக் குறிப்பு: விஜய் பிரபு Scale F minor 6/8 ஜாதி ஜாதி ஜாதி என்று தாழ்ந்து போனவன் /சாச சாச சாரி காம/ பாத பாம க... / தமிழன் என்று சொல்வதற்கு மறந்து போனவன் / காக மாப / ரீரி காம / நீநி நீச சா........./ (2) சரணம் 1 பாடுபட்டு பலனை மட்டும் காணோமே... /சசச நீப / சசச நீப / மாம ப../ பண்பு கெட்ட ஜாதி தந்த பாடமே /மாத தாத / மாத நீச / தாப ..ப / சூடுபட்ட மாடு போலத் திரிகிறான் /சசச நீப /சசச நீப /மாம ப../ சொரணை யற்ற தமிழனாக வாழ்கிறான் /மாத தாத /மாத நீச / தாப ..ப / கூடி வாழும் உணர்வையே மறந்து விட்டவன் /பாப பாப / பசச சாச /பாம தாபக.../ கூறு கெட்ட ஜாதியாலே வேறுபட்டவன் /காக மாப / ரீரி காம / நீநி நிச சா./ _2 (ஜாதி ஜாதி ஜாதி) சரணம் 2 தேர்தல் வந்து வாக்களிக்கும் தேதியே /சசச நீப / சசச நீப /மாம ப../ ஜெயிக்கிறதும் தோற்கிறதும் ஜாதியே /மாத தாத / மாத நீச / தாப ..ப / பேர் விளங்க வாழ்ந்த ஆதியே /சசச நீப / சசச நீப / மாம ப../ பெருமை எல்லாம் இழந்ததின்று வீதியே /மாத தாத / மாத நீச / தாப ..ப / ஆரியரின் ஜாதி சூதில் விழுந்து விட்டவன் /பாப பாப / பசச சாச / பாம தாபக.../ அணிதிரிந்து மொழி மறந்து வாழ்ந்து கெட்டவன் /காக மாப / ரீரி காம / நீநி நிச சா.../ - (ஜாதி ஜாதி ஜாதி) சரணம் 3 உரிமையற்ற அடிமையாகக் கிடக்கிறான் / சசச நீப / சசச நீப / மாம ப../ ஒன்று பட்டு குரல் கொடுக்க மறுக்கிறான் /மாத தாத / மாத நீச / தாப ..ப / பிரிவுபட்டு எங்கள் தேசம் போனதே / சசச நீப / சசச நீப /மாம ப../
பிழைக்க வந்தக் கூட்டம் ஆட்சி காணுதே /மாத தாத /மாத நீச / தாப ..ப / ஊதி ஊதி சங்குதான் ஓய்ந்து போனதே /சாச சாச / சாரி காம/ பாத பாம க... / உணர்வில்லாத செவிடர் கூட்டத் தமிழர் நாடிது / காக மாப / ரீரி காம / நீநி நீச சா.../
ஜாதி ஜாதி ஜாதி என்று தாழ்ந்து போனவன் /சாச சாச சாரி காம / பாத பாம க... / தமிழன் என்று சொல்வதற்கு மறந்து போனவன் /காக மாப / ரீரி காம / நீநி நீச சா....../ தமிழன் என்று சொல்வதற்கு மறந்து போனவன் /காக மாப / ரீரி காம / நீநி நீச சா./ தமிழன் என்று சொல்வதற்கு மறந்து போனவன் /காக மாப / ரீரி காம / நீநி நீச சா...../ குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.
|