Home தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : DEGREES OF COMPARISON - 19 (ஓப்பீட்டு நிலைகள்)
சனி, 27 பிப்ரவரி 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! ‘கீரீச் கிரீச் கிரீச்’செனக் கீதங்கள் பாடிக் ‘கரிச்சான்’ குருவிகள் கருக்கலில் எழுப்பும்!   ‘கூ கூ கூ’வெனக் ‘குயில்கள்’ பாடி வாகாக வி... மேலும்
படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படம்: கி.சொ எழுத்து: லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் மேலும்
அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? சரவணா இராஜேந்திரன் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து உழைப்பால் உலகில் முதல் பணக்காரர் ஆனவர் எலான் மஸ்க். இவர் பெயரைச் சொன்னதும் உலகின் முதல... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகள் இடமிருந்து வலம் 1.            பிப்ரவரி 3 ____ அண்ணா நினைவு தினம் (5) 3.            “ ____ நடுங்கிடு தம்பி -_ கெட்ட கோயிலென்ற... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : DEGREES OF COMPARISON - 19 (ஓப்பீட்டு நிலைகள்)
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

இந்தக் கொடி மரம் என்ன சொல்கிறது?

-ஒரு பண்புச்சொல்லுக்கு மூன்று வெவ்வேறு நிலைகள் இருக்கின்றன என்பதைத்தான்.

நமக்குத் தெரியும் _ மனிதனுக்கு பண்புகள் தேவை என்பது. அதேபோல்- சொற்றொடரில் (sentenceஇல்) உள்ள பெயர்ச்சொல்லுக்கு (nounக்கு) பண்புச் சொற்கள் (Adjective) தேவை.

தீர்மானிக்கும் பண்புச்சொற்கள் (Determiners) என்பவை  முகமூடி அணிந்த மறைமுக  பண்புச்சொற்கள்.

வி(வ)ரிக்கும் பண்புச்சொற்கள் (Descriptive Adjectives) என்பவைதான் மிக முக்கியம். இவைதான் பொதுவாகவே Adjectives என்று அனைவராலும் கருதப்படுகின்றன.

கடந்தமுறை சொன்னதுபோல், பண்புச்சொல் (Adjective) அதிகம் பயன்படுத்தப்படும் இடமான ஒப்பீட்டு நிலைகளைப் (Degrees of Comparison)பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஒப்பீட்டு நிலைகள் (Degrees of Comparison) 3 வகை ஆகும். இதன் மூன்று நிலைகளைத் தெரிந்து சொற்றொடர்களைப் பயன்படுத்துவதற்கு முன்... சில அட்டவணைகளைப் பாருங்கள்!

அட்டவணையில் சில பண்புச்சொற்களும் (Adjectives) அவற்றுக்கான மூன்று ஒப்பீட்டு நிலைகளும் (Degrees of Comparison) கொடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்ல, ஏராளமான பண்புச்சொற்கள் (Adjectives) உள்ளன. நாம் பார்ப்பது எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

எதற்கு இந்த 6 அட்டவணைகள்?

தமிழில் அசைகள் இருப்பதைப்போல் ஆங்கிலத்திலும் Syllables  என்னும் சொற்பகுப்புகள் (word break up) உள்ளன.

அந்த வகையில் முதல் அட்டவணைப்படி ஓரசை பண்புச் சொற்கள் (one syllable word) மட்டும் வந்தால் Comparative--இல்  bolder என்று கடைசியில் “er” இட்டு எழுத வேண்டும். Superlative-இல் boldest  என்று கடைசியில் “est” இட்டு எழுத வேண்டும்.

2ஆவது  அட்டவணைப்படி ஓரசை பண்புச் சொற்கள் (one syllable word)  மட்டும் வந்து  “e”இல் முடிவதால் Comparative--இல்  கடைசியில் “r” மட்டும் சேர்க்க வேண்டும். Superlative-இல் “st” மட்டும் சேர்த்தால் போதுமானது.

3ஆவது அட்டவணைப்படி consonant + short vowel + consonant என்னும் அமைப்பில் ஓரசை பண்புச் சொற்கள் வந்திருப்பதால் bigger என்று ஒரு “g” இரண்டாக மாறும்.

4ஆவது அட்டவணைப்படி இரண்டு அசைகள் கொண்ட ஈரசைப் பண்புச் சொற்கள் மட்டும் வந்து “y”-இல் முடிந்தால் comparative--இல் y-அய் எடுத்துவிட்டு, “ier” சேர்க்க வேண்டும். Superlative--இல் “iest” சேர்க்க வேண்டும்.

5ஆவது அட்டவணைப்படி வருபவை ஆங்கிலத்தில் வழக்கமான பண்புச் சொற்களிலிருந்து விதிவிலக்கானவை. அவற்றின் comparative-வும், superlative-வும், வேறு வார்த்தைகளாக இருக்கும் (எ-கா: good (positive) - better (comparative) - best (Superlative)

6ஆவது அட்டவணைப்படி ஈரசைப் பண்புச்சொற்களும் அதற்கு மேற்பட்ட  நீளமான பண்புச்சொற்களும் வருகின்றன. Comparative--இல் பண்புச் சொல்லின் முன்புறம் more, Superlative-இல் முன்புறம் the most சேர்த்து எழுத வேண்டும்.

வரும் இதழில் எங்கு Positive, எங்கு Comparative, எங்கு Superlative பயன்படுத்தலாம் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

(தொடரும்)

Share
 

முந்தைய மாத இதழ்

பறக்கும் தாவரம் கிளியக்கா! பறக்கும் தாவரம் கிளியக்கா! பச்சை பச்சைக் கிளியக்கா பவள மூக்குக் கிளியக்கா! இச்சை மொழியாம் தமிழாலே இனிக்கப் பேசும் கிளியக்கா!   பழங்கள் தொங்கும் கிளைகளிலே பக்கு... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, எனது வற்றாத அன்பும் வாழ்த்துகளும். “வாழ்த்து எதற்காக தாத்தா?” என்று கேட்கிறீர்களா? 2020 என்ற இந்த கொடு... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் விழியன் தன் அத்தையின் வரவுக்காகக் காத்திருந்தான் மகேந்திரன். அத்தை வந்ததும் தன் பள்ளியில் நாளை நடக்க இருக்கும் ஓவியப்போட்டி பற்றி சொல்லவே... மேலும்
விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! சீனா என்னும் பெயர் வரக்காரணமே, சின் ஷி ஹுவாங் (Qin Shi Huang) என்கிற மன்னர்தான். தனது ஆற்றலால் மத்திய தெற்கு சீனாவில் சிறிய நிலப்பகுதியாக ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? அமாவாசை அன்று படைத்த உணவை காக்காய்க்கு வைப்பார்கள். ஏன் என்று கேட்டால் தங்கள் வீட்டில் இறந்து போனவர்கள் காக்காயாக வந்து சாப்பிடுவார்கள் என... மேலும்
இயற்கை : வளரும் எவரெஸ்ட் இயற்கை : வளரும் எவரெஸ்ட் “எவரெஸ்ட் வளர்ந்துடுச்சா? சும்மா சொல்லாதீங்க, 2018ஆம் ஆண்டுதான் உயரம் குறையுதுன்னு சொன்னாங்க. இப்போ என்ன, வளர்ந்துடுச்சுன்னு சொல்லுறீங்க’’... மேலும்