Home கதை கேளு.. கதை கேளு.. : லியாவின் முதல் கடிதம்
புதன், 12 மே 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அறிவு இயக்கம் காட்டிடு அறிவு இயக்கம் காட்டிடு தேர்தல் இங்கே தேடி வந்தது தேதி காட்டுது - அதில் தேர்வு பெற்ற கட்சிக் காரர் சேதி காட்டுது. பாடு பட்டோர் பாடம் கற்றுப் பார்த்துத் தேர்ந... மேலும்
இசைப்போம் வாரீர்! - மக்கள் நலத்துக்கு மதமா இசைப்போம் வாரீர்! - மக்கள் நலத்துக்கு மதமா பாடல்:  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இசைத் தொகுப்பு: பாரதிதாசன் பாட்டருவி குரல்:  நித்யஸ்ரீ மகாதேவன் Scale: c minor. sign: 6/8 இராகம் : ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா? காரணமின்றி ஏற்காதீர்கள்: செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா? சிகரம் அறிவியலின் வளர்ச்சி கட்டாயத் தேவை என்பதை எவரும் ம-றுக்க முடியாது. அதே நேரத்தில் அதன் பக்க விளைவாகக் கேடுகள், அழிவுகள் நிகழ்வதையும்... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. : லியாவின் முதல் கடிதம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

லியாவின் ஊரில் தற்சமயம் பனிமழை பெய்துகொண்டு இருக்கின்றது. இதனால் ஊர் முழுக்க பனிப் பொழிவுதான். லியா வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை. லியாவின் வீட்டு வாசலில் ஓர் அஞ்சல் பெட்டி இருக்கின்றது. அது லியாவின் உயரத்தை விட பெரியதாக இருக்கும். லியாவிற்கு அது ஒரு மனிதன் போலத் தோன்றும். அதன் தலை கருப்பு நிறத்திலும் உடல் சிவப்பு நிறத்திலும் இருக்கும் மனிதன் என்பாள். காலையில் ஒரு வேளையும் மாலையில் ஒரு வேளையும் சாலையில் உள்ள பனிப்பொழிவினை அகற்ற ஒரு வாகனம் வரும். மாலையில் அந்த வாகனம் வந்து சென்ற சில நிமிடங்களில் அஞ்சல்கார மாமா வருவார்.

லியாவின் சன்னலில் இருந்து இப்போதுதான் இந்தக் காட்சிகள் எல்லாம் தெரிகின்றன. சொல்லப்போனால், இப்போதுதான் அந்த அளவிற்கு வளர்ந்து இருக்கின்றாள். அவள் ஓர் இருக்கையில் அமர்ந்துதான் சன்னல் வழியே எட்டிப் பார்ப்பாள். சாலையில் மனித நடமாட்டமே இருப்பதில்லை. அவள் தினமும் பார்க்கும் ஒருவர் அந்த அஞ்சல்கார மாமாதான். அவர் அஞ்சல் பெட்டிக்கு அருகே வந்து செய்யும் செய்கைகள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிப்பாள் லியா. முதலில் முதுகில் மாட்டி இருக்கும் பையை இறக்கி கீழே வைப்பார். பின்னர் அஞ்சல் பெட்டியின் தலையில் இருக்கும் பனிப்பொழிவுகளை அகற்றுவார். அப்போதுதான் அதன் நிறம் கருப்பு என்றே தெரியும். அதன் பிறகு பையில் இருந்து சாவியினை எடுத்து பூட்டினைத் திறப்பார்.  உள்ளே அஞ்சல்கள் இருக்கும் இடத்தில் நிறைய பனிக்கட்டிகள் இருக்கும். கத்தி போன்ற ஒரு கருவியை உள்ளே விட்டு மொத்தப் பனியையும் வெளியே எடுப்பார். அதற்குள் ஏதாவது கடிதம் சிக்கி இருக்கின்றதா என்றும் பார்ப்பார். எவ்வளவுதான் பெட்டியை மூடி வைத்து இருந்தாலும் பனி பெட்டிக்குள் வந்துவிடுகின்றது. கடிதத்தைப் பெட்டிக்குள் போடும் சந்து வழியே பனி உள்ளே நுழைந்துவிடும் போலும். பின்னர் பெட்டியைப் பூட்டிவிட்டு கிளம்பிடுவார்.

சில நாள்கள் கழித்தே லியாவைக் கவனிக்க ஆரம்பித்தார். லியா அவருக்கு தினமும் கையசைப்பாள். அவர் சாலையில் வரும்போது லியாவின் நாய்க்குட்டி சத்தம் எழுப்பும். லியாவும் தயாராகிவிடுவாள். ஒவ்வொரு நாளும் அஞ்சல்கார மாமாவின் முகத்தில் வாட்டம் கூடுவதைக் கவனித்தே வந்தாள் லியா. அஞ்சல்காரர் மொத்தமாக இதே போல பத்து பெட்டிகளின் கடிதங்களை எடுக்க வேண்டும். ஆனால், பனிபொழிய ஆரம்பித்ததில் இருந்து மொத்தமே இருபது கடிதங்கள் கூட எடுக்கவில்லை. லியாவின் வீட்டு வாசலில் இருக்கும் அஞ்சல் பெட்டியில் ஒரு கடிதத்தைகூட எடுக்கவில்லை. அது நான்கு வீதிகளுக்கான பெட்டி. கடிதம் எழுதுவதில் இருக்கும் சுவையை இந்தக் காலத்தினர் புரிந்துகொள்ளவில்லை என்று தனக்குள் நினைத்துக்கொள்வார் அஞ்சல்காரர்.

லியாவின் நாய்க்குட்டி இன்னொருவர் வரும்போதும் சத்தம் எழுப்பும் அவர், லியாவின் வீட்டிற்கு வரும் ஓர் ஆசிரியர். லியாவின் வீட்டிற்கே வந்து லியாவிற்கு எழுதப்படிக்க கற்றுத்தர ஆரம்பித்துள்ளார் சாசா அத்தை. மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக எழுத ஆரம்பித்தாள். லியாவால் நடக்க இயலாது. அவள் எப்போதும் ஒரு (வீல் சேரில்) சக்கர நாற்காலியில் அமர்ந்துதான் நகர்வாள். அதனால்தான் பள்ளிக்கும் போகவில்லை. ஆனால், விரைவில் ஒரு பள்ளியில் சேர்ப்பதாக சாசா அத்தை தெரிவித்துள்ளார். ஒரு நாள் திடீரென தன் அம்மாவிடம் நம் உறவினர்கள் எங்கெங்கு இருக்கின்றார்கள், அவர்களின் விலாசம் தாருங்கள் என்றாள் லியா. ஒரு கடிதம் எழுதுவது என முடிவெடுத்துவிட்டாள். சாசா அத்தையின் உதவியுடன் கடிதமும் எழுதிவிட்டாள். முகவரியை எப்படி எழுத வேண்டும் எனக் கேட்டு அதன்படி செய்தாள்.

“கொடு லியா, நான் கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போட்டு விடுகின்றேன்’’ என்றார் சாசா அத்தை.

“இல்லை அத்தை, நானே போடவேண்டும். என்னை பெட்டியிடம் அழைத்துச் செல்லுங்கள்’’.

வாசலில் இருந்த பனிப்பொழிவினை அகற்றி வீல் சேர் செல்லும்படி இடம் ஏற்பாடு செய்தார் சாசா அத்தை. லியா பெட்டிக்கு அருகே சென்றாள். பெட்டியைத் தொட்டுப்பார்த்தாள். சில்லென்று இருந்தது. இத்தனைக்கும் கையுறை போட்டிருந்தாள். தன் கோட் பாக்கெட்டில் வைத்திருந்த கடிதத்தினை எடுத்தாள். கடிதங்களைப் போடும் சந்து எட்டவில்லை. கொஞ்சம் முயன்று அதனைத் தொட்டுவிட்டாள். கடிதத்தை எடுத்து அதன் ஒரு பக்கம் முத்தமிட்டு சந்தில் போட்டுவிட்டாள் லியா. அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. சாசா அத்தை திரும்பவும் அவளை வீட்டிற்குள் விட்டுவிட்டு, கிளம்பிவிட்டார்.

லியா அஞ்சல்காரருக்காகக் காத்திருந்தாள். நாய்க்குட்டி குரைத்தது. அவர் வந்தார். லியாவைத் தேடினார். லியா கையசைத்துச் சிரித்தாள். வழக்கமான வேலைகளைச் செய்தார். ஆனால், கடிதத்தைக் காணவில்லை. லியா கவனித்துக் கொண்டே இருந்தாள். தன் வேலைகளை முடித்துவிட்டு பெட்டியைப் பூட்ட முற்பட்டார். திடீரென எழுந்து அஞ்சல் பெட்டியை ஓங்கித் தட்டினார். மேலே ஒரு கம்பியில் மாட்டிக்கொண்டிருந்த லியாவின் கடிதம் பொத்தென கீழே விழுந்தது. கடிதம் ஒன்றினைப் பார்த்ததும் தபால்காரருக்கும் மகிழ்ச்சி. மலர்ந்த முகத்துடன் எடுத்து தன் பையில் வைத்துக்கொண்டார். சைகையால் ஒரு கடிதம் வந்துவிட்டது என்று லியாவிற்கு சைகை செய்தார்.

அஞ்சல்காரர் எல்லாப் பெட்டிகளையும் பார்த்துவிட்டு அஞ்சல் நிலையம் அடைந்தார். ஒரே ஒரு கடிதம் தான். லியா அனுப்பிய அந்தக் கடிதம் மட்டுமே. கடிதங்களை முதலில் ஊர் வாரியாக, மாவட்ட வாரியாக, மாநில வாரியாகப் பிரிக்க வேண்டும். அடுத்து எல்லாக் கடிதங்களையும் மாவட்டத் தலைநகருக்கு அனுப்ப வேண்டும். அங்கிருந்துதான் அடுத்த அஞ்சல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். எந்த ஊருக்கு இந்தக் கடிதம் என பார்த்தார் அஞ்சல்காரர். அட அதே ஊர்தான். பின்னர் தான் அவருக்கு இன்னும் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

பெறுநர் பகுதியில்,

“அஞ்சல்கார மாமா, அஞ்சல் நிலையம், வென்பனியூர்’’ என்று இருந்தது. அட, கடிதமே அவருக்குத்தான்!

காலையில் இருந்து வேலை செய்ததில் ஏற்பட்ட களைப்பு பறந்துபோனது. கடிதத்தை மெல்லப் பிரித்தார். ஒரு பூவைத் தொடுவது போன்ற உணர்வினை அது கொடுத்தது. ஓர் அழகிய பட்டாம்பூச்சி ஓவியம், ஒரு பெரிய மர ஓவியம், ஒரு கடிகார ஓவியம் அந்தக் காகிதத்தில் இருந்தது. கடிதத்தில் மொத்தமே நான்கு வரிகள்தான்.

“அன்புள்ள அஞ்சல் மாமா,

நான் நலம். நீங்க நலமா?

சாப்பிட்டீர்களா?

உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

--_ பாசமுடன், லியா

அவ்வளவுதான். அஞ்சல்கார மாமாவிற்கு அழுகையே வந்துவிட்டது. கடிதத்தை பத்து முறை வாசித்துவிட்டார். பதினொன்றாவது முறை வாசிக்கும்போது அவரது கன்னத்தில் யாரோ முத்தமிட்டது போல இருந்து. அது, லியா கடிதத்தை பெட்டியில் போடும் முன்னர் கொடுத்த அதே முத்தம்தான்!

Share
 

முந்தைய மாத இதழ்

சிட்டாய் பறந்துவா! சிட்டாய் பறந்துவா! சின்னச் சின்னச் சிட்டே வா, சிறக டித்துக் கிட்டே வா! அன்ன நடை போட்டே வா, அச்சந் தன்னை விட்டே வா!   சின்ன அலகால் கொத்தி வா, சிறிய காலா... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அறிவியலுக்கே இறுதி வெற்றி பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அறிவியலுக்கே இறுதி வெற்றி பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, நலமா? எப்படி இருக்கீங்க? கொரோனா-_கோவிட் 19 போய்விட்டது என்று நினைத்து விடாதீர்கள்! இன்னமும் அதன் வீச்சு... மேலும்
கதை கேளு.. கதை கேளு..: பொறந்த நாளு கதை கேளு.. கதை கேளு..: பொறந்த நாளு விழியன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து விடியற்காலை நான்கு முப்பதுக்கு வந்தடைந்தது. செந்தில்நாதனும் அவன் மகன் புகழேந்தியும் இறங்க... மேலும்
188 years challenge- ஆமைத் தாத்தா 188 years challenge- ஆமைத் தாத்தா   வாருங்கள்-! ஹலோ சொல்லுவோம் உலகின் அதிக வயதான ஜொநாதானுக்கு. பல உயிரினங்கள் மனிதர்களின் வாழ்நாளைவிட அதிகமான ஆண்டுகள் வாழ்வதைப் பற்றிக் க... மேலும்
கின்னசில் கின்னசில் 189 வயதை நிறைவு செய்து, ஏற்கனவே கின்னசில் இடம் பெற்றுள்ள கேப்டன் ஜேம்ஸ்குக்கின் ‘டுஸ் மலிலா’ (1777 _ 16.05.1966) என்ற டோங்காநாட்டு பெண் ஆ... மேலும்
இசைப்போம் வாரீர்! - தந்தையைக் காத்த தாயொருத்தி இசைப்போம் வாரீர்! - தந்தையைக் காத்த தாயொருத்தி E minor, Sign,  2/4 பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து இசை: தாஜ்நூர் பல்லவி தந்தையைக் காத்த தாயொருத்தி / சாசச / சாசச / சாசச ச....../ அவர்த... மேலும்