பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! | ||||
|
‘கீரீச் கிரீச் கிரீச்’செனக் கீதங்கள் பாடிக் ‘கரிச்சான்’ குருவிகள் கருக்கலில் எழுப்பும்!
‘கூ கூ கூ’வெனக் ‘குயில்கள்’ பாடி வாகாக விடியலும் வருமுனம் எழுப்பும்!
‘கா கா கா’வெனக் கரைந்திசை பாடிக் ‘காகங்கள்’ இரவிருள் கலையுமுன் எழுப்பும்!
‘கொக்கரக் கோ’வெனக் கூவியே பாடி அக்கரைச் ‘சேவல்கள்’ அன்றாடம் எழுப்பும்!
பறவைகள் இப்படிப் ‘பள்ளி எழுச்சி’யைப் பொறுமையாய்ப் பாடிப் புவியினை எழுப்பும்! - தளவை இளங்குமரன், தென்காசி
|