Home அதிசயம்! ஆனால் உண்மையா?:அந்தரத்தில் உட்கர முடியுமா?
வெள்ளி, 23 ஏப்ரல் 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! ‘கீரீச் கிரீச் கிரீச்’செனக் கீதங்கள் பாடிக் ‘கரிச்சான்’ குருவிகள் கருக்கலில் எழுப்பும்!   ‘கூ கூ கூ’வெனக் ‘குயில்கள்’ பாடி வாகாக வி... மேலும்
படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படம்: கி.சொ எழுத்து: லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் மேலும்
அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? சரவணா இராஜேந்திரன் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து உழைப்பால் உலகில் முதல் பணக்காரர் ஆனவர் எலான் மஸ்க். இவர் பெயரைச் சொன்னதும் உலகின் முதல... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகள் இடமிருந்து வலம் 1.            பிப்ரவரி 3 ____ அண்ணா நினைவு தினம் (5) 3.            “ ____ நடுங்கிடு தம்பி -_ கெட்ட கோயிலென்ற... மேலும்
அதிசயம்! ஆனால் உண்மையா?:அந்தரத்தில் உட்கர முடியுமா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

எது அனைவராலும் செய்ய இயலாததோ, அதைச் செய்து காட்டி அசத்துவது சாதனை. அந்தச் சாதனைக்குப் பின்னால் பொறுமை,  தாங்கு சக்தி, பயிற்சி, தொடர் முயற்சி எல்லாம் இருக்கும். அதில் வெளிப்படைத் தன்மையும், உண்மையும் இருக்கும். மறைக்கவோ, ஏமாற்றவோ அவசியம் இருக்காது.

ஆனால், எது மனிதரின் இயல்பில்லையோ, இயற்கைகயை மீறியதோ அது “எங்களால் முடியும், அதற்கு தியானம் முக்கியம்; மந்திர சக்தி அவசியம்; உங்கள் கண்களால் நம்ப முடியாததாகவுமிருக்கும்” என்றெல்லாம் சொல்லப்பட்டால் உடனே நாம் எச்சரிக்கையாகிவிட வேண்டும். அவர்களின் செயல்களில் கொஞ்சம் மறைப்பு வேலைகள் கண்ணுக்குத் தெரிந்தாலும் சரி, அவை நிச்சயம் ஏமாற்று வித்தைகளாகத் தான் இருக்கும்.

மனிதனின் நெடுங்காலமாக நிறைவேறாத கனவுகளை, ஆசைகளை அடைவதற்குத் தான் எப்போதும் இந்தச் சாமியார்களும், யோகிகளும் முயற்சி செய்ததாகவும், தவமிருந்ததாகவும் கதைகள் இருக்கின்றன.

*             சாகாமல் இருப்பது (சாகா வரம்),

*
ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்புக்கு உயிரை மட்டும் அனுப்பி, வேறொருவரின் உருவத்தில் அலைவது (கூடுவிட்டுக் கூடு பாய்வது),

*
மற்றவர் கண்ணுக்குத் தெரியாமல் உலவுவது (Invisible man),

*
அந்தரத்தில் மிதப்பது (Levitation),

*
ஆகாயத்தில் பறப்பது (Flying)

*
இரும்பையோ, மரத்தையோ, தண்ணீரையோ தங்கமாக மாற்றுவது (ரசவாதம்)

இவையெல்லாம் நீண்ட காலமாக மனிதனின் ஆசைகள். ஆனால், நடக்க முடியாதவை. அதனால் கதைகளில் இவற்றை எழுதி தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டான். இப்போதும் கூட பல திரைப்படங்கள் இப்படிப்பட்ட கதைகளோடு வருவதை நாம் பார்க்கிறோம் இல்லையா?

அப்படிக் கதையெழுதி, படம் பார்த்து, பேசிச் சிரித்துவிட்டால் சரி, அல்லது ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையை விமானம் கண்டுபிடித்தும், பாராசூட்டில் மிதந்தும், நிறைவேற்றிக் கொண்டது போல அறிவுப்பூர்வமாக நிறைவேற்றி கொண்டாலும் சரி.

அதைவிட்டுவிட்டு, மந்திர சக்தியால் இப்படி மாறுவேன், மந்திர சக்தியால் அந்தரத்தில் மிதப்பேன் என்றெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வது? இது மேஜிக் என்னும் தந்திரக் கலைதான் என்று சொல்லாமல், மந்திர சக்தி என்று கதைவிட்டால், அதை நாம் தானே உடைத்துக் காட்ட வேண்டும், இல்லையா பிஞ்சுகளே...

முந்தைய காலத்தில் மட்டுமல்ல... இன்றும் கூட இப்படி ஏமாற்றுகிறார்கள். இங்கு மட்டுமல்ல... பிற நாடுகளிலும் கூட! சாமியார்கள் கையில் வைத்திருப்பதாகச் சொல்லப்படும் ஒரு குச்சியில் கையை மட்டும் ஊன்றிக் கொண்டு, (படத்தில் இருப்பது போல) தவம் செய்யும் பாணியில் அந்தரத்தில் அமர்ந்திருப்பார்கள். கீழே இருக்கையோ, மேலே இருந்து தொங்குவதற்கான தடயமோ இருக்காது. பார்க்கவே மிரட்சியாக இருக்கும். உண்மையிலேயே இவர்கள் அந்தரத்தில் மிதக்கிறார்களா என்னும் வியப்பு நிச்சயம் எழும்.

அடுத்து, நமக்கு சில கேள்விகள் தோன்ற வேண்டும்.

அந்தரத்தில் அமர்ந்திருக்கிறார் சரி. இவர் தரையிலிருந்து அந்தரத்தில் மிதக்க மேலே ஏறியதைப் பார்த்தோமா?

அந்தரத்தில் அமர்ந்த நிலையிலிருந்து மீண்டும் இறங்குவதைப் பார்க்க முடியுமா?

ஹெலிகாப்டரைப் போலே தரையிலிருந்து அப்படியே மேலே ஏறினாரா?

அல்லது நின்றுகொண்டிருந்தவர் அப்படியே காலை மட்டும் தூக்கி அந்தரத்தில் உட்கார்ந்துவிட்டாரா?

வழக்கமாக சாமியார்கள் வைத்திருக்கும் தண்டத்தின் (கைத்தடி) அளவை விட இது மட்டும் இவ்வளவு உயரமாக இருப்பது ஏன்?

சாமியாரே அந்தரத்தில் மிதக்கும்போது, அவரது தண்டம் மட்டும் அந்தரத்தில் மிதக்க முடியாதா?

அதென்ன தரையில் ஏதோ விரிப்புப் போல இருக்கிறது?

இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டு முடித்தால், கிட்டத்தட்ட உங்களுக்கு விடை கிடைத்துவிடும். அந்த தண்டத்தில் தான் இருக்கிறது சூட்சுமம்.

உண்மையில் அது தண்டமல்ல... ஒற்றைக் காலில் நிற்கும் ஓர் இருக்கை. தரையில் திடமாகப் பதிக்கப்பட்டு நிலை தவறிவிடாமல்(Balance) செய்யப்பட்ட அந்த ஒற்றைக் காலில், நடுவில் ஓர் இருக்கை இணைக்கப்பட்டிருக்கும், அதில் வசதியாக அமர்ந்துகொள்ள வேண்டியது தான். பிறகென்ன நீங்கள் கண்ணை மூடியிருந்தாலும் திறந்திருந்தாலும் கையை ஹாயாக கைத்தடியில் வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கலாம்.

என்னப்பா இது இவ்வளவு ஈஸியான டெக்னிக்காக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? இப்படித்தான் எல்லா ஏமாற்றுவித்தையும்! அவற்றுக்குப் பின்னால் உள்ள சூட்சுமங்கள் மிக மிக எளிமையானவை

இந்தியில் வெளிவந்த ‘பிகே’ படத்தில் கூட ஒரு காட்சியில் இந்த ஏமாற்று வித்தை எளிமையாக விளக்கப்பட்டிருக்கும். இதை வைத்துக் கொண்டு ஒரு காலத்தில் சாமியார்கள் எவ்வளவு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் தெரியுமா? நீங்கள் படத்தில் பார்க்கும் பெரு நாட்டைச் சேர்ந்த தந்திரவித்தைக் கலைஞர் பிரின்சஸ் இன்கா என்பவர் 2009-இல் இதே போல செய்துகாட்டினார். ஆனால் என்ன? ஏறும்போதும், இறங்கும்போதும் மட்டும் அவருடைய ஆட்கள் எல்லாவற்றையும் மறைத்துவிடுவார்களாம்.

இனியும் இத்தகைய ஏமாற்று வித்தைகளுக்கு நாம் பலியாகலாமா? அல்லது நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பலியாகலாமா?<

Share
 

முந்தைய மாத இதழ்

பறக்கும் தாவரம் கிளியக்கா! பறக்கும் தாவரம் கிளியக்கா! பச்சை பச்சைக் கிளியக்கா பவள மூக்குக் கிளியக்கா! இச்சை மொழியாம் தமிழாலே இனிக்கப் பேசும் கிளியக்கா!   பழங்கள் தொங்கும் கிளைகளிலே பக்கு... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, எனது வற்றாத அன்பும் வாழ்த்துகளும். “வாழ்த்து எதற்காக தாத்தா?” என்று கேட்கிறீர்களா? 2020 என்ற இந்த கொடு... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் விழியன் தன் அத்தையின் வரவுக்காகக் காத்திருந்தான் மகேந்திரன். அத்தை வந்ததும் தன் பள்ளியில் நாளை நடக்க இருக்கும் ஓவியப்போட்டி பற்றி சொல்லவே... மேலும்
விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! சீனா என்னும் பெயர் வரக்காரணமே, சின் ஷி ஹுவாங் (Qin Shi Huang) என்கிற மன்னர்தான். தனது ஆற்றலால் மத்திய தெற்கு சீனாவில் சிறிய நிலப்பகுதியாக ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? அமாவாசை அன்று படைத்த உணவை காக்காய்க்கு வைப்பார்கள். ஏன் என்று கேட்டால் தங்கள் வீட்டில் இறந்து போனவர்கள் காக்காயாக வந்து சாப்பிடுவார்கள் என... மேலும்
இயற்கை : வளரும் எவரெஸ்ட் இயற்கை : வளரும் எவரெஸ்ட் “எவரெஸ்ட் வளர்ந்துடுச்சா? சும்மா சொல்லாதீங்க, 2018ஆம் ஆண்டுதான் உயரம் குறையுதுன்னு சொன்னாங்க. இப்போ என்ன, வளர்ந்துடுச்சுன்னு சொல்லுறீங்க’’... மேலும்