நேர்க்கூற்றுக்கும்(Direct Speech) அயற்கூற்றுக்கும்(Indirect Speech | ||||
|
நேர்க்கூற்றுக்கும்(Direct Speech) அயற்கூற்றுக்கும்(Indirect Speech/Reported Speech) 4 வகை உரையாடல் சொற்றொடர்கள் (Sentences)தேவை. அதற்கு முன் இந்த நான்கு சொற்றொடர்கள் ஏன்? தெரிந்து கொள்வோமா? நாம் அன்றாடம் நம்முடைய உரையாடல்களில் பயன்படுத்துவன எல்லாம் இந்த நான்கு வகைகளுக்குள் அடங்கும். இரண்டு பேர் (A, B என்று வைத்துக்கொள்வோம்) தங்களுக்கு இடையே பேசிக்கொள்ளும் உரையாடலில்... இரண்டு பகுதிகள் உள்ளன: t பேசுபவர் பகுதி (யார் சொல்கிறார்கள் -_ என்பது) (Reporting Clause) t பேசுகின்ற பகுதி (சொல்லும் செய்தி) (Reported Clause) 1. சாதாரண சொற்றொடர் (Simple Sentence) அந்த உரையாடலில் “நடக்கின்ற’’ அல்லது ‘நடந்த’ ஒரு செய்தியை இயல்பாகச் சொல்லுவோம். (எ.கா: “நான் பூங்காவில் தினமும் நடக்கிறேன்’’, “நீ மிகவும் மகிழ்வாக இருந்தாய்’’, “நான் ஒரு புத்தகத்தை வாங்கினேன்’’). இந்தச் சொற்றொடர் சாதாரண சொற்றொடர். (ஆங்கிலத்தில் சொல்வதென்றால்... Subject + Verb + Object என்ற வரிசையில் அமைகின்ற இயல்பான சொற்றொடர்கள்) எ.கா: வான்மதி தென்னவனிடம் சொன்னாள், (Reporting Clause / பேசுபவர் பகுதி) Vanmathi said to Thennavan, “நான் ஒரு புத்தகத்தை வாங்கினேன்’’ (Reported Clause / பேசுகின்ற பகுதி) “I bought a book” 2. கேள்விச் சொற்றொடர்(Interrogative Sentence) அந்த உரையாடலில் கேள்வி ஏதேனும் கேட்டால்...? (எ.கா: நீ விளையாடினாயா? உன்னுடைய தெளிவான குறிக்கோள் என்ன? உன் வயது என்ன?) இப்படி கேள்விகளுடன் அமைந்தால் அது கேள்விச் சொற்றொடர். எ.கா: கபிலன் முகிலனிடம் சொன்னான், “உன்னுடைய வயது என்ன?’’ Kabilan said to Mugilan, “How old are you?” 3. கட்டளைச் சொற்றொடர் (Imperative Sentence) அந்த உரையாடலில் ஏதாவது வேண்டுகோள் வைத்தால், கட்டளையிட்டால், அறிவுரை சொன்னால், அல்லது மன்னிப்புக் கேட்டால் அது கட்டளைச் சொற்றொடர். எ.கா: ஓவியன் இனியனிடம் சொன்னான், “காவல் துறைக்கு ஒரு விண்ணப்பம் எழுது’’ Ovian said to Iniyan, “Write a petition to Police department” 4. உணர்ச்சிச் சொற்றொடர் (Exclamatory Sentence) அந்த உரையாடலில், மகிழ்ச்சியை வெளிப்படுத்த, துயரத்தை வெளிப்படுத்த, வெறுப்பை வெளிப்படுத்த சாதாரண சொற்றொடரோடு சில வியப்புச் சொற்களை, சில வியப்புக் குறியீடுகளைப் (எ.கா:”!”) பயன்படுத்தி உணர்ச்சிப் பூர்வமாகக் கூறினால் உணர்ச்சிச் சொற்றொடர். எ.கா: முஸ்தபா ரகீமிடம் சொன்னான், “அருமை! தாஜ்மகால் ஒரு வியப்பான நினைவுச் சின்னம்!’’ Mustafa said to Rahim, “wow! Taj mahal is a wonderful monument!” கீழேயுள்ள அட்டவணையில் நான்கு சொற்றொடர் ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம். இவற்றைத் தெரிந்து கொண்டால் நேர்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாற்றும் முறை பற்றி ஓரளவு தெரிந்து கொள்ளலாம். என்னென்ன மாற்றம் நடக்கிறது என்பதைப் பாருங்கள். பிறகு விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.
|