Home காரணமின்றி ஏற்காதீர்கள்: செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா?
வெள்ளி, 23 ஏப்ரல் 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி! ‘கீரீச் கிரீச் கிரீச்’செனக் கீதங்கள் பாடிக் ‘கரிச்சான்’ குருவிகள் கருக்கலில் எழுப்பும்!   ‘கூ கூ கூ’வெனக் ‘குயில்கள்’ பாடி வாகாக வி... மேலும்
படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி? படம்: கி.சொ எழுத்து: லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் மேலும்
அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? அறிந்துகொள்வோம் - எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? சரவணா இராஜேந்திரன் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து உழைப்பால் உலகில் முதல் பணக்காரர் ஆனவர் எலான் மஸ்க். இவர் பெயரைச் சொன்னதும் உலகின் முதல... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகள் இடமிருந்து வலம் 1.            பிப்ரவரி 3 ____ அண்ணா நினைவு தினம் (5) 3.            “ ____ நடுங்கிடு தம்பி -_ கெட்ட கோயிலென்ற... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சிகரம்


அறிவியலின் வளர்ச்சி கட்டாயத் தேவை என்பதை எவரும் ம-றுக்க முடியாது. அதே நேரத்தில் அதன் பக்க விளைவாகக் கேடுகள், அழிவுகள் நிகழ்வதையும் அலட்சியப்படுத்த முடியாது. அறிவியலை ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அது அழிவைத் தரும் அளவிற்கு கொண்டு செல்லக் கூடாது.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் அரிய கண்டுபிடிப்பு - செல்பேசி. அது பேசுவதற்கு மட்டுமல்ல. அதில் அனைத்துமே உள்ளடக்கப்பட்டுவிட்டது. உள்ளங்கையில் உலகம் என்னும் அளவுக்கு அது பயன்படுத்தப்படுகிறது.

பேச, உரு காட்டி உரையாட, பல்துறை நூல்களை, அறிவைத் தேடிப் படிக்க, கருத்துகளைப் பரப்ப, செய்திகளை அனுப்ப, வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்ய, பொருள்களை வாங்க, விற்க, பயணங்களை மேற்கொள்ள, செல்லும் வழியைக் காட்ட, கணக்கிட, காலம் அறிய, பிழை திருத்த என்று பலவற்-றுக்கும் அது பயன்படுகிறது.

அதேபோல் பொழுது போக்குக்கான பலவும் அதில் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் வீடியோ கேம் என்பது. இதன் செயலிகள் இளைஞர்களை   ஈர்த்து தன்வயப்படுத்தக் கூடியவை.

இந்த வீடியோ கேம் சிறுவர்களின் அறிவுத் திறன் வளர்ச்சிக்குப் பயன்படும் என்று சிலர் கூறுகின்றனர். இல்லை இல்லை இது சிறுவர்களின் அறிவைப் பதட்ட நிலைக்குக் கொண்டு சென்று அவர்களை பாழாக்கி விடுகிறது என்று சிலர் கண்டிக்கின்றனர்.

எனவே, பிஞ்சுகள் இதில் தெளிவைப் பெற்று, தங்கள் வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். எனவே, இதுகுறித்து சில உண்மைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

போதைப் பொருளுக்கு அடிமையாகின்ற வர்களை ஆராய்ந்தால் முதலில் அவர்கள் வாசனைப் பாக்கு போடுவார்கள். அடுத்து பீடா போடுவார்கள் பின் போதை கலந்து சரிதா பீடா போடுவார்கள். அடுத்து புகை பிடிப்பார்கள், பிறகு பீர் குடிப்பார்கள், அதன்பின் பிராந்தி குடிப்பார்கள். நாளடைவில் மதுவுக்கு அடிமையாகி வாழ்வை அழித்துக் கொள்வார்கள். தொடக்கம் சிறிதாக இருந்தாலும், முடிவு பெரும் பாதிப்பில் அமைவது அனுபவ உண்மை.

அப்படித்தான் இந்த செல்பேசி விளையாட்டுகள். இவற்றை விளையாடுவதன் மூலம் அறிவு, ஆற்றல், மூளைத் திறன், முடிவெடுக்கும் பக்குவம் போன்றவை வளர்கிறது என்பது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும், இதில் ஈடுபடும் சிறுவர்கள் அந்த எல்லைக்குள் நிற்பதில்லை. அடுத்தடுத்த கட்டத்திற்கு ஆர்வத்துடன் செல்கிறார்கள். இறுதியில் நாள் முழுக்க அதிலேயே ஈடுபட்டு அதற்கு அடிமையாகிறார்கள். இது ஒரு வகையான போதையாக அவர்களுக்கு ஆகிவிடுகிறது.

இந்த செல்பேசி விளையாட்டுகள் இறுதியில் பப்ஜி (றிuதீ-நி) போன்ற  விளையாட்டுகளில் கொண்டு விடுகிறது.

பப்ஜி கேம்

சிறிய தீவுகளை உள்ளடக்கிய பெரிய தீவுக்கூட்டத்தில், 100 பேரை ஆயுதங்களுடன் களத்தில் இறக்கி விடுவர். தங்களைக் காத்துக் கொள்ள மற்றவர்களை அவர்கள் கொல்ல வேண்டும். இறுதியில் யார் உயிரோடு இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.

அனைவரையும் இந்த விளையாட்டு ஈர்ப்பதற்கு முக்கியக் காரணமே, இந்த விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட உயர்தர கிராபிக்ஸ் தொழில்நுட்பம். இதை விளையாடுபர்களுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ள புதிய யோசனைகள் வழங்கப்படுகின்றன. அதிகபடியான ஆயுதங்கள் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

பப்ஜி போன்ற விளையாட்டுகளால்

ஏற்படும் விளைவுகள்

இது ஒரு சாதாரண விளையாட்டுதானே.. நம்மை என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம். இதுபோலத்தான் ப்ளூவேலும் ஒரு சாதாரண விளையாட்டாக தொடங்கியது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இத்தகைய விளையாட்டு-களால் உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த விளையாட்டால் மற்றவர்களிடமிருந்து தனிமைபடுத்தி, இயற்கையான உலகத்திலிருந்து நம்மை பிரித்து செயற்கையான உலகில் வாழவைக்கிறது. எப்போதும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பதட்டநிலையை ஏற்படுத்துகிறது. இரவு முழுக்க பப்ஜி விளையாடுவதால் அதிக சோர்வு ஏற்பட்டு இயல்பான வேலைகளைச் செய்யாமல் தவிர்க்கும் பழக்கம் ஏற்படும்.

எப்போதும் ஒருவித பதட்டத்தில் நம்மை இருக்க வைக்கும் அளவுக்கு உளவியல் பாதிப்பை இந்த விளையாட்டு ஏற்படுத்துகிறது. இதை விளையாடுவதால், நமது தனித்தன்மையான சிந்தனை மழுங்கடிக்கப்படும். மற்றவர்கள் மேல் உள்ள வன்மம் அதிகரிக்கும். இந்த விளையாட்டை மருத்துவர்கள் டிஜிட்டல் போதைப் பொருள் என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுடும் போட்டியில் ஆர்வத்துடன் இறங்கும் சிறுவர்கள் மெல்ல மெல்ல அதில் ஒரு வெறித்தனத்துடன் ஈடுபடுகின்றனர். இப்போட்டியில் பல இடங்களிலிருந்தும் பலர் பங்கு பெறுவதால் அந்த வெறித்தனம் உச்சமாகிறது.

இதுபோன்ற விளையாட்டுகள், பதட்டம், படபடப்பு, விரைவு, வேகம், வெறி, தூக்கமின்மை, கொடிய மனம் போன்றவற்றை வளர்க்கின்றன. பரபரப்பும், படபடப்பும், பதட்டமும் கொண்ட ஒரு மனநிலையை இறுதியில் இளைஞர்களுக்கு அது உருவாக்குகிறது.

இதன் உச்சகட்டமாக உளைச்சல், உள இறுக்கம், வெறுப்பு, விரக்தி முடிவு தற்கொலை. இது மிகைப்படுத்திக் கூறப்படுவதல்ல. இதுதான் இன்றைக்கு நடைமுறை உண்மை! எனவே, செல்பேசி / வீடியோ விளையாட்டை ஆடவே கூடாது! <

Share
 

முந்தைய மாத இதழ்

பறக்கும் தாவரம் கிளியக்கா! பறக்கும் தாவரம் கிளியக்கா! பச்சை பச்சைக் கிளியக்கா பவள மூக்குக் கிளியக்கா! இச்சை மொழியாம் தமிழாலே இனிக்கப் பேசும் கிளியக்கா!   பழங்கள் தொங்கும் கிளைகளிலே பக்கு... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, எனது வற்றாத அன்பும் வாழ்த்துகளும். “வாழ்த்து எதற்காக தாத்தா?” என்று கேட்கிறீர்களா? 2020 என்ற இந்த கொடு... மேலும்
கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் கதை கேளு.. கதை கேளு.. : இணையா ரயில் தண்டவாளங்கள் விழியன் தன் அத்தையின் வரவுக்காகக் காத்திருந்தான் மகேந்திரன். அத்தை வந்ததும் தன் பள்ளியில் நாளை நடக்க இருக்கும் ஓவியப்போட்டி பற்றி சொல்லவே... மேலும்
விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! விபத்தாய் கிடைத்த வெடிமருந்து! சீனா என்னும் பெயர் வரக்காரணமே, சின் ஷி ஹுவாங் (Qin Shi Huang) என்கிற மன்னர்தான். தனது ஆற்றலால் மத்திய தெற்கு சீனாவில் சிறிய நிலப்பகுதியாக ... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா? அமாவாசை அன்று படைத்த உணவை காக்காய்க்கு வைப்பார்கள். ஏன் என்று கேட்டால் தங்கள் வீட்டில் இறந்து போனவர்கள் காக்காயாக வந்து சாப்பிடுவார்கள் என... மேலும்
இயற்கை : வளரும் எவரெஸ்ட் இயற்கை : வளரும் எவரெஸ்ட் “எவரெஸ்ட் வளர்ந்துடுச்சா? சும்மா சொல்லாதீங்க, 2018ஆம் ஆண்டுதான் உயரம் குறையுதுன்னு சொன்னாங்க. இப்போ என்ன, வளர்ந்துடுச்சுன்னு சொல்லுறீங்க’’... மேலும்