Home தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 24
வியாழன், 23 செப்டம்பர் 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 26 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 26 கே.பாண்டுரங்கன் இதுவரை உரையாடல் சொற்றொடரில்... இடப்புறம் பேசுபவர் பகுதியைப் பார்த்தோம். இனி... வலப் புறம் மட்டும் பார்ப்போம் அதுதான் பேச... மேலும்
மாண்டிசோரி (Montessori) முறை என்றால் என்ன? மாண்டிசோரி (Montessori) முறை என்றால் என்ன? மருத்துவ டாக்டர் மேரியா மாண்டிசோரி என்னும் இத்தாலிய அம்மையாரால் உருவாக்கப்பட்ட முறை. மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும்போ... மேலும்
மரங்களை வளர்ப்போம்! மரங்களை வளர்ப்போம்! மரங்களை வளர்த்து விட்டால் மழைமிகப் பொழியும் தம்பி! மழைமிகப் பொழிந்து விட்டால் மண்பயிர் செழிக்கும் தம்பி! மண்பயிர் செழித்து விட்டால் ம... மேலும்
அனுபவக்கதை : மாவீரன் நெப்போலியனும் எலியும் அனுபவக்கதை : மாவீரன் நெப்போலியனும் எலியும் அகிலத்தையே ஒரு குடையின் கீழ்க் கொண்டு வந்து தானே ஆள வேண்டுமென்று பேராசை கொண்டவர்தான் பிரான்ஸ் நாட்டின் மாவீரன் நெப்போலியன். தனது கடைசிக் க... மேலும்
கணிதப் புதிர் சுடோகு கணிதப் புதிர் சுடோகு கடந்த இதழ் சுடோகு விடை: மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி இடமிருந்து வலம் 1. _________ பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செப். 17 1879ஆம் ஆண்டு பிறந்தார் (8) 5. வாய்ஸ் _ தமிழில் (3) 6.   _____... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 24
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கே.பாண்டுரங்கன்

அடித்தளத்தை ஆழமாகப் பதித்தால்தான் கட்டடம் பலமாக இருக்கும் _ அல்லவா?

அதே போல் நேர்க்கூற்று _ அயற்கூற்று புரிய வேண்டுமானால் சில அடிப்படைகள் தெரிய வேண்டும்தானே?

நினைவிருக்கிறதா?

Noun என்றால் என்ன?

Pronoun என்றால் என்ன?

ஏற்கெனவே தெரிந்துகொண்டிருந்தாலும் இங்கே மீண்டும் நினைவுக்கு...

Noun = பெயர்ச் சொல்

Pronoun = பிரதிப் பெயர்ச் சொல் அல்லது நகல் பெயர்ச் சொல்.

எடுத்துக்காட்டாக...

மருதன் [Maruthan] என்ற Nounக்கு உரிய Pronoun - “அவன்” - அதாவது ஆங்கிலத்தில் “He” என்பதாகும்.

அதேபோல் கயல் என்ற Nounக்கு Pronoun = “அவள்’’ ... அதாவது ஆங்கிலத்தில் “She” என்பதாகும்.

அதேபோல் புத்தகம் என்ற Nounக்கு Pronoun - “அது” -  அதாவது ஆங்கிலத்தில் “It” என்பதாகும்.

இதைப் பற்றி கடந்த இந்தத் தொடரின் 3ஆவது பகுதியில் படித்தோம் அல்லவா?

Pronoun Table (பிரதிப் பெயர்ச் சொல் அட்டவணை):

மேற்கண்ட Pronoun Table (பிரதிப் பெயர்ச்சொல் அட்டவணை) நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கோ, அல்லது அயற்கூற்றிலிருந்து நேர்க்கூற்றுக்கோ மாற்றும்போது மிகவும் தேவைப்படும்.

மீண்டும் உரையாடல் சொற்றொடருக்கு வருவோம்!

நான்கு விதமான உரையாடல் சொற்-றொடர்களிலும் முக்கியமான இரண்டு பகுதிகள் உள்ளன. அல்லவா?

1.            பேசுபவர் பகுதி அல்லது உரையாடுபவர் பகுதி (Reporting Clause),

2.            பேசுகின்ற பகுதி அல்லது உரையாடல் பகுதி (Reported Clause).

கடந்த இதழில் பேசுபவர் பகுதியை (Reported Clause) மேலோட்டமாகப் பார்த்தோம். இப்போது விரிவாக... விளக்கமாகப் பார்ப்போம்.

பேசுபவர் பகுதி (Reporting Clause)

A, B, C என்ற மூன்று பேர்களை எடுத்துக் கொள்வோம்...

A = 1st person (தன்மை)

B = 2nd person (முன்னிலை)

C = 3rd person (படர்க்கை)

1

[A = 1st person (தன்மை), B = 2nd person (முன்னிலை) என்பதை நினைவில் கொள்ளுங்கள்]

இப்போது...

A என்ற ஒருவர் B என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.

அல்லது

B என்ற ஒருவர் A என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.

பொது எ-.கா.:

[கீழே எடுத்துக்காட்டுகள் கொடுத்துள்ளேன். பயிற்சிக்காக... Pronoun Table (பிரதிப் பெயர்ச்சொல் அட்டவணை) யைப் பயன்படுத்தி தமிழ்ப் படுத்திப் பாருங்கள்!]

தற்போது பேசுபவர் பகுதி என்பதைப் பற்றி மட்டும் பார்ப்பதால்..

பேசுகின்ற [Reported] பகுதியைத் தற்காலிகமாக ஒதுக்கி வைப்போம்.

எடுத்துக்காட்டுகள்:

I said to You, “I am right” (சாதாரண சொற்றொடர்)

I said to You, “what is right?” (கேள்விச் சொற்றொடர்)

I said to You, “Be a right person” (கட்டளைச் சொற்றொடர்)

I said to You, “oh, no! of course, you are right!” (உணர்ச்சிச் சொற்றொடர்)

அல்லது

You said to me, “ I am right” (சாதாரண சொற்றொடர்)

இதே போல் சாதாரண, கேள்வி, கட்டளை, உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் அமையலாம்

2

[ B = 2nd person (முன்னிலை), C = 3rd person (படர்க்கை) என்பதை நினைவில் கொள்ளுங்கள்]

இப்போது...

B என்ற ஒருவர் C என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.

(அல்லது)

C என்ற ஒருவர் B என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.

பொது எடுத்துக்காட்டு.:

எ.கா.:

you said to him/her, “I am right” (சாதாரண சொற்றொடர்)

இதே போல் சாதாரண, கேள்வி, கட்டளை, உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் அமையலாம்

அல்லது

He/She said to You, “I am right” (சாதாரண சொற்றொடர்)

இதே போல் சாதாரண, கேள்வி, கட்டளை, உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் அமையலாம்

3

[ C = 3rd person (படர்க்கை), A = 1st person (தன்மை) என்பதை நினைவில் கொள்ளுங்கள்]

இப்போது...

C என்ற ஒருவர் A என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.

அல்லது

A என்ற ஒருவர் C என்ற மற்றொருவரிடம் பேசுவதாக வைத்துக் கொள்வோம்.

பொது எடுத்துக்காட்டு :

எடுத்துக்காட்டுகள்:

He/She said to me, “I am rightt (சாதாரண சொற்றொடர்)

இதே போல் சாதாரண, கேள்வி, கட்டளை, உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் அமையலாம்

அல்லது

I said to him/her, “I am right” (சாதாரண சொற்றொடர்)

இதே போல் சாதாரண, கேள்வி, கட்டளை, உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் அமையலாம்

தற்போது பேசுபவர் பகுதி (Reporting clause)யில் 1st person (தன்மை), 2nd person (முன்னிலை), 3rd person (படர்க்கை) ஆகிய மூன்று Pronounகளும் எப்படிப் பயன்படுகின்றன என்று பார்த்தோம். வரும் இதழ்களில் மூன்று Pronounகளும் பேசுகின்ற பகுதி (Reported Clause)யில் சரியான பொருள்களில் எப்படி மாற்றமடைகின்றன என்பதையும் பார்ப்போம்!

- தொடரு(வோ)ம்

Share
 

முந்தைய மாத இதழ்

கடவுளும் கரோனாவும்! கடவுளும் கரோனாவும்! ‘கடவுளே மனிதனைப் படைத்தான்’ எனயினும் கருதிடும் மடமையும் இருக்கிறது - அந்தக் ‘கடவுளை மனிதனே படைத்தான்’ எனும்புதுக் கருத்தினை மனம்கொள மறு... மேலும்
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - களைகள் அகற்ற கலைகள் பயில்க! பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - களைகள் அகற்ற கலைகள் பயில்க! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே! என்ன, எல்லாரும் எப்படி இருக்கீங்க? கொரோனா கொடுந்தொற்று இரண்டாவது அலையினால் உங்களை மாதிரி சின்னஞ் சிறுசுக... மேலும்
கதை கேளு.. கதை கேளு.: பாப்பி என்னும் பாப்பி கதை கேளு.. கதை கேளு.: பாப்பி என்னும் பாப்பி விழியன் இன்று எனக்கும் நரேனுக்கும் ஓட்டப் பந்தயம். என் பெயர் பாப்பி. இதோ இந்தப் பெயர் வைத்ததால்தான் இந்த ஓட்டப் பந்தயமே. நான், நரேன், மகி... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: மதங்கள் மனிதநேயத்தை வளர்க்கின்றனவா? காரணமின்றி ஏற்காதீர்கள்: மதங்கள் மனிதநேயத்தை வளர்க்கின்றனவா? சிகரம் மதம் என்பது கடவுள் நம்பிக்கை அடிப்படையில் கருத்துகள் கூறுவது. கடவுள் உருவமற்றது, கருணையே வடிவமானது, அது உலகைப் படைத்து இயக்குகிறத... மேலும்
வரலாறு - பல்லாயிரம் ஆண்டுத் தொடர்பு: கீழடியும் பெட்ராவும் வரலாறு - பல்லாயிரம் ஆண்டுத் தொடர்பு: கீழடியும் பெட்ராவும் சரா நமக்குத் தெரியாமல் நமது காலடியில் கீழடி  நான்காயிரம் ஆண்டுகளாகப் புதைந்து கிடந்தது, புதைந்து கிடந்த நமது தாயகமாம் கீழடியைத் தோண்டத் த... மேலும்