ஏய்த்த கதை முடித்தார்!
| Print |
User Rating: / 0
PoorBest 

பெரியார் தாத்தா பிறந்தநாள் - செப்டம்பர் 17

தாத்தாவை அறிவாய் தம்பி!

தமிழருக்கு விடிவான் வெள்ளி!

சூத்திரனாய் இழித்தார் தம்மைச்

சூரியனாய் எரித்தார் தம்பி!

காத்தார்நம் கல்வி தன்னை!

'கட்டைவிரல்' கொண்டோம் தம்பி!

சாத்திவைத்த கதவை எல்லாம்

தகர்த்தவர்தான் பெரியார் தம்பி!

 

சாய்த்தாரே சாதிக் கேட்டை!

தமிழரென இணைந்தோம் தம்பி!

ஏய்த்தாரை எதிர்த்தார் தம்பி!

எழுச்சியினைத் தமிழர் கொண்டோம்!

வாய்ப்பாக ஒதுக்கீட் டைத்தான்

வாங்கிடப்போர் தொடுத்தார் தம்பி!

மாய்த்தார்நம் அறியா மையை

மதிகொண்டே உயர்ந்தோம் தம்பி!

 

காய்ந்தபுல்லைக் கண்டே அஞ்சி

கைவாளை மறந்தோம் தம்பி!

பாய்ச்சலினை மறந்த வேங்கைப்

பல்லொடித்து வதைத்தார் தம்பி!

மேய்ச்சலுக்கு வந்தா ரேய்த்தே

மேதினியை யாண்டார் தம்பி!

ஏய்த்தகதை பெரியார் முடித்தார்

இன்றுநானும் ஆள்வேன் தம்பி!

- செல்வ. மீனாட்சி சுந்தரம்,

வேளச்சேரி, சென்னை

Share