Home கோமாளி மாமா-19 : மறக்கக் கூடாது!
வியாழன், 23 செப்டம்பர் 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 26 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 26 கே.பாண்டுரங்கன் இதுவரை உரையாடல் சொற்றொடரில்... இடப்புறம் பேசுபவர் பகுதியைப் பார்த்தோம். இனி... வலப் புறம் மட்டும் பார்ப்போம் அதுதான் பேச... மேலும்
மாண்டிசோரி (Montessori) முறை என்றால் என்ன? மாண்டிசோரி (Montessori) முறை என்றால் என்ன? மருத்துவ டாக்டர் மேரியா மாண்டிசோரி என்னும் இத்தாலிய அம்மையாரால் உருவாக்கப்பட்ட முறை. மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும்போ... மேலும்
மரங்களை வளர்ப்போம்! மரங்களை வளர்ப்போம்! மரங்களை வளர்த்து விட்டால் மழைமிகப் பொழியும் தம்பி! மழைமிகப் பொழிந்து விட்டால் மண்பயிர் செழிக்கும் தம்பி! மண்பயிர் செழித்து விட்டால் ம... மேலும்
அனுபவக்கதை : மாவீரன் நெப்போலியனும் எலியும் அனுபவக்கதை : மாவீரன் நெப்போலியனும் எலியும் அகிலத்தையே ஒரு குடையின் கீழ்க் கொண்டு வந்து தானே ஆள வேண்டுமென்று பேராசை கொண்டவர்தான் பிரான்ஸ் நாட்டின் மாவீரன் நெப்போலியன். தனது கடைசிக் க... மேலும்
கணிதப் புதிர் சுடோகு கணிதப் புதிர் சுடோகு கடந்த இதழ் சுடோகு விடை: மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி இடமிருந்து வலம் 1. _________ பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செப். 17 1879ஆம் ஆண்டு பிறந்தார் (8) 5. வாய்ஸ் _ தமிழில் (3) 6.   _____... மேலும்
கோமாளி மாமா-19 : மறக்கக் கூடாது!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

ஓவியம், கதை: மு.கலைவாணன்

மாணிக்கம், மல்லிகா, செல்வம் உரிய நேரத்தில் கதை கேட்கத் தோட்டத்திற்கு வந்துவிட்டனர். கோமாளி மாமாவும் கதை சொல்ல சரியான நேரத்திற்கு வந்துவிட்டார்.

“மாமா! நாம எல்லாருமே சரியான நேரத்துக்கு ஒன்னு சேர்ந்துட்டோம். இன்னைக்கு என்ன கதை சொல்லப் போறீங்க?” என ஆவலுடன் கேட்டாள் மல்லிகா.

“இந்த மாதம் செப்டம்பர் மாதம். இந்த மாதத்துக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது என்னன்னு தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டார் கோமாளி.

“அட! இது கூடவா தெரியாம இருப்போம்... பகுத்தறிவுப் பகலவன் நம்ம பெரியார் தாத்தா அவர்கள் பிறந்த மாதம்...” என்று உடனே விடை சொன்னான் செல்வம்.

“அது மட்டுமில்லே... நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் அய்யா தந்தை பெரியார்னு சொன்ன அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்ததும் இந்த மாதம்தான்” என்று விரைந்து சொன்னான் மாணிக்கம்.

“இந்த மாதம் 5ஆம் தேதிதான் தேசிய ஆசிரியர் நாள்னு கொண்டாடுவாங்க என்றாள் மல்லிகா.

“இன்னும் நிறைய சிறப்பு இருக்கு. செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய் நாள். இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகத்தினால் (Asian and Pacific Coconut Community-APCC) ஏற்படுத்தப்பட்டது தான் உலக தேங்காய் நாள். செப்டம்பர் மாதத்தின் முதலாவது சனிக்கிழமை உலக தாடி நாள்.

செப்டம்பர் 8ஆம் தேதி பன்னாட்டு கல்வி நாள். இந்த நாள் 1967ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவால் அனுசரிக்கப்படுது.

செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு ரூ£ள். இதை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவிச்சிருக்கு.

அறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15 பன்னாட்டு ஜனநாயக நாள். 2007ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகள் பொதுச்சபை இதை கொண்டாட முடிவு செய்திருக்கு.

அதே 15ஆம் தேதி பொறியாளர்கள் நாள். அய்தராபாத் நகரத்துக்காக வடிவமைக்கப்பட்ட வெள்ளப் பாதுகாப்பு அமைப்பின் தலைமைப் பொறியாளராக இருந்த மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள். பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுது.

செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை பன்னாட்டு சிவப்புப் பனிக்கரடி நாள். சிவப்புப் பனிக்கரடியின் எண்ணிக்கை குறைஞ்சு வர்றதைக் குறிக்கிற விதமா சிவப்புப் பனிக்கரடி அமைப்பினாலே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி வங்கியில் மாணவர்களிடம் நிதி சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி சஞ்சாயிகா நாள். 1970ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பண சேமிப்பு திட்டம் இது.

செப்டம்பர் 16 _ ஓசோன் அடுக்குப் பாதுகாப்புக்கான உலக ஓசோன் நாள். அய்க்கிய நாடுகள் பொதுச் சபையால் 1994லே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது.

செப்டம்பர் 18 முதல் 24 வரை பன்னாட்டு காது கேளாதோருக்கான வாரம். செப்டம்பர் 20 பல்கலைக்கழக விளையாட்டுகளுக்கான பன்னாட்டு நாள்.

செப்டம்பர் 21 பன்னாட்டு அமைதி நாள். செப்டம்பர் 22 உலக காண்டாமிருக நாள். அதே செப்டம்பர் 22 உலக ரோஜா நாள். செப்டம்பர் 23 சைகை மொழிகளுக்கான பன்னாட்டு நாள். காது கேட்காதவங்களோட சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துறதே இதோட நோக்கம். செப்டம்பர் 26 பன்னாட்டு ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பு நாள்.

அதே செப்டம்பர் 26 உலக கருத்தரிப்பு நாள். அனைத்து விதமான கருத்தரிப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துறதுதான் இந்த நாளின் நோக்கம்.

செப்டம்பர் 27 உலக சுற்றுலா நாள். செப்டம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை உலக கடல்சார் நாள். பாதுகாப்பான கடல் பயணம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல் சார் சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டுறதுதான் இதன் நோக்கம். செப்டம்பர் 28 அனைத்துவித தகவலையும் பெறுவதற்கான பன்னாட்டு நாள்.

அதே செப்டம்பர் 28 பன்னாட்டு வெறிநாய்க்கடி ரூ£ள். வெறிநாய்க்கடி நோயைத் தடுப்பது குறித்தும், இந்தக் கொடிய நோயைக் குணப்படுத்தும் செயல்பாடுகளைச் சுட்டிக் காட்டவும் இந்த நாள் அனுசரிக்கப்படுது. மேலும், வேதியியல் அறிஞர் _ விஞ்ஞானி லூயி பாஸ்டரின் இறந்த நாளைக் குறிக்குது.

இந்த செப்டம்பர் 28 - துப்பாக்கி சுடுபவர்கள் நாளாகவும் அனுசரிக்கப்படுது.

செப்டம்பர் 29 _ உலக இதய நாள். இதய நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுது.

செப்டம்பர் 30 _ பன்னாட்டு மொழி பெயர்ப்பாளர்கள் நாள்.

செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை உலக முதலுதவி நாள். நெருக்கடி காலத்தில் முதலுதவி செய்வது எப்படி ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த நாள்.

செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலகின் நீர் வழிகளைப் பெருமைப்படுத்துவதற்காக உலக நதிகள் நாள் கொண்டாடப்படுது.

இப்படி செப்டம்பர் மாதத்தின் எல்லா நாள்களுமே சிறப்பு மிக்க நாள்களாக இருந்தாலும், முக்கியமான ஒரு நாளை பல பேர் மறந்தே போயிட்டாங்க.”

“அது எந்த நாளுங்க மாமா...” என வேகமாகக் கேட்டாள் மல்லிகா.

“கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையாக அழைக்கப்படும் வ.உ.சி. அவர்கள் பிறந்த செப்டம்பர் 5ஆம் தேதிதான் அந்த நாள். 1876ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவர் வ.உ.சி! வள்ளியப்பன் உலகநாத சிதம்பரம் என்பதின் சுருக்கம்தான் வ.உ.சி. இந்த நாட்டு விடுதலைக்காக உண்மையாகப் பாடுபட்டவரு. அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவரு. வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர். அவரோட அரசியல் வாழ்க்கை நல்ல ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைஞ்சது.

பிரிட்டானிய கப்பல்களுக்குப் போட்டியா முதல் உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். அவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை நடத்துச்சு.

பிரிட்டானிய அரசால் தேசத் துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டாரு.

சிறையிலே அவர் அனுபவிச்ச கொடுமைக்கு அளவே இல்லே. தலையை மொட்டை அடிச்சு கை கால்களில் விலங்கு மாட்டி கடுமையான வேலைகளைச் செய்ய வைச்சாங்க. கல்லும் மண்ணும் இருக்கும் கூழைக் குடித்துவிட்டு நூல் நூற்றார். கல் உடைத்தார். மாடுகள் இழுக்க வேண்டிய செக்கை அவர் இழுத்தார்.

அவர் சிறையிலிருந்தபோது சுதேசி கப்பல் நிறுவனத்தை நடத்த முடியாமல் அவரது கப்பலை ஆங்கிலக் கப்பல் நிறுவனத்துக்கே விற்றுவிட்டனர்.

1908 முதல் 1912 வரை சிறையில் இருந்தார். பின்னர் கோவையிலும், சென்னையிலும், சிரமங்களுக்கு இடையே வாழ்ந்து 1932இல் தூத்துக்குடிக்கு வந்தார்.

கடைசிக் காலத்தில் மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை என நான்கு நூல்களும், திருக்குறளுக்கு உரையும், பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

போராட்ட வாழ்க்கை வாழ்ந்த வ.உ.சி. 1936 நவம்பர் 18ஆம் நாள் இறந்தார். நாட்டு நலனுக்காகத் தன் வாழ்க்கையையே இழந்த வ.உ.சி. நம்ம பகுத்தறிவுத் தாத்தா பெரியாருக்கு நல்ல நண்பர். யார் மறந்தாலும்... இப்படிப்பட்ட உண்மையான மனிதர்களை நாம மறக்கலாமா?” என்றார் கோமாளி மாமா.

“நாங்க மறக்கவே மாட்டோம் மாமா...” என்றான் மாணிக்கம்.

“இத்தனை சிறப்பு இந்த செப்டம்பர் மாதத்துக்கு இருக்குன்னு இப்பதான் தெரிஞ்சுது...” என்றாள் மல்லிகா.

“சிறந்த மனிதராம் வ.உ.சி.யின் சிறப்பும் இப்பதான் புரிஞ்சுது...” என்றான் செல்வம்.

மாதத்தின் கதையையும், அந்த மாதத்தில் பிறந்த மகத்தான மனிதரின் கதையையும் ஒரு சேரக் கேட்ட நிறைவில் புறப்பட்டனர் மூவரும்.

- மீண்டும் வருவார் கோமாளி


Share
 

முந்தைய மாத இதழ்

கடவுளும் கரோனாவும்! கடவுளும் கரோனாவும்! ‘கடவுளே மனிதனைப் படைத்தான்’ எனயினும் கருதிடும் மடமையும் இருக்கிறது - அந்தக் ‘கடவுளை மனிதனே படைத்தான்’ எனும்புதுக் கருத்தினை மனம்கொள மறு... மேலும்
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - களைகள் அகற்ற கலைகள் பயில்க! பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - களைகள் அகற்ற கலைகள் பயில்க! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே! என்ன, எல்லாரும் எப்படி இருக்கீங்க? கொரோனா கொடுந்தொற்று இரண்டாவது அலையினால் உங்களை மாதிரி சின்னஞ் சிறுசுக... மேலும்
கதை கேளு.. கதை கேளு.: பாப்பி என்னும் பாப்பி கதை கேளு.. கதை கேளு.: பாப்பி என்னும் பாப்பி விழியன் இன்று எனக்கும் நரேனுக்கும் ஓட்டப் பந்தயம். என் பெயர் பாப்பி. இதோ இந்தப் பெயர் வைத்ததால்தான் இந்த ஓட்டப் பந்தயமே. நான், நரேன், மகி... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்: மதங்கள் மனிதநேயத்தை வளர்க்கின்றனவா? காரணமின்றி ஏற்காதீர்கள்: மதங்கள் மனிதநேயத்தை வளர்க்கின்றனவா? சிகரம் மதம் என்பது கடவுள் நம்பிக்கை அடிப்படையில் கருத்துகள் கூறுவது. கடவுள் உருவமற்றது, கருணையே வடிவமானது, அது உலகைப் படைத்து இயக்குகிறத... மேலும்
வரலாறு - பல்லாயிரம் ஆண்டுத் தொடர்பு: கீழடியும் பெட்ராவும் வரலாறு - பல்லாயிரம் ஆண்டுத் தொடர்பு: கீழடியும் பெட்ராவும் சரா நமக்குத் தெரியாமல் நமது காலடியில் கீழடி  நான்காயிரம் ஆண்டுகளாகப் புதைந்து கிடந்தது, புதைந்து கிடந்த நமது தாயகமாம் கீழடியைத் தோண்டத் த... மேலும்