Home அனுபவக்கதை : மாவீரன் நெப்போலியனும் எலியும்
செவ்வாய், 09 ஆகஸ்ட் 2022
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அழகுதமிழ் நீதிநெறி அழகுதமிழ் நீதிநெறி   குரங்குக்கு மழைநேரம் கூறப்போன அறிவுரையால்வருந்திற்று கூடிழந்து வாட்டமுற்றுத் தூக்கணம்!வாய்திறந்து காக்கையினை வஞ்சகமாய்ப் பாடச்சொல்லிவ... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை! நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை! ‘இளமையில கல்’ ‘அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையில்’ என்பன போன்ற அனுபவ மொழிகள், குழந்தைப் பருவத்திலே ... மேலும்
பழகுமுகாம் பழகுமுகாம் பிடிச்சிருக்கு ..... பிடிச்சிருக்கு .....பிடிச்சிருக்கு ..... இயல்பிலேயே மாணவப் பருவம் என்பது துருதுருவென்று எதையாவது அறிந்துகொள்ள, புரிந... மேலும்
பரிசு வேண்டுமா? பரிசு வேண்டுமா? பெரியார் குமார் கேள்விகள்: இடமிருந்து வலம்:1.    ____ த் திணிப்பை என்றும் எதிர்ப்போம் (3)3.    அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்ட ஜப்பான... மேலும்
இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே Scale : C majorபாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்இசைத் தொகுப்பு : பாரதிதாசன் பாட்டருவிபாடியவர் : நித்யஸ்ரீ மகாதேவன் இசைக் குறிப்பு:விஜய் ப... மேலும்
அனுபவக்கதை : மாவீரன் நெப்போலியனும் எலியும்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

அகிலத்தையே ஒரு குடையின் கீழ்க் கொண்டு வந்து தானே ஆள வேண்டுமென்று பேராசை கொண்டவர்தான் பிரான்ஸ் நாட்டின் மாவீரன் நெப்போலியன். தனது கடைசிக் காலத்தில் போர்க் களத்தில் பிரிட்டனிடம் தோல்வி கண்டார். தோல்வி அடைந்த நெப்போலியனைப் பிரிட்டிஷ் இராணுவம் சிறைப் பிடித்தது. தனிமைக் கொட்டடி வாழ்க்கை!

ஆப்பிரிக்காவின் தனிமைச் சிறையில்  அடைக்கப்பட்டார். கண்ணாடிக் குடுவை கைதவறி தரையில் விழுந்து நொறுங்கி சிதறுண்ட நிலையில் நெப்போலியன் சிறைக் கதவினை பார்த்தபடியே காணப்பட்டார். மன உளைச்சலின் உச்சத்திலிருந்தார். இதுதான் அவரின் இறுதிக் காலத்தின் நகர்வு.

தனிமையிலிருந்த நெப்போலியனைப் பார்க்க அவரது உற்ற நண்பர் ஒருவர் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்து, “இது உங்களின் தடைப்பட்டுள்ளச் சிந்தனையை செயல்பட வைக்கும், தனிமையைப் போக்கும்’’ என்று கூறி அவரிடம் கொடுத்தார். பலத்த காவலர்களின் கண்காணிப்போடு. வேறு ஒன்றும் பேசாமல் வெளியேற்றப்பட்டார் நண்பர்.

சிறைப்படுத்திவிட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படவில்லை சதுரங்க அட்டையைப் புரட்டிப் பார்க்கின்ற மனநிலைகூட வரவில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு மரணத்தைத் தழுவுகின்றார். பிற்காலத்தில் நெப்போலியனிடம் அவரது நண்பர் வழங்கிய சதுரங்க அட்டை பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்தபோது, அந்த அட்டையின் நடுப் பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை வரைபடத்துடன் சொல்லப்பட்டிருந்தது.

நெப்போலியனின் மன உளைச்சலும் பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து, தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.

எலிப்பொறி: அதைப் போல் உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் வலிமைமிகுந்த கூர்மையான பற்களாலும் நகத்தாலும் மெல்லக் குடைந்து ஒட்டை போடும் எலி, அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப் பொறியில் சிக்கிக் கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலால் தப்பிக்கும் வழியை விட்டுவிட்டு, அந்தப் பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னாலும் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக் கொண்டுவிடும்.

மன உளைச்சல்: மாவீரனுக்கும் சரி... சாதாரண எலிக்கும் சரி பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனைப் போக்கைச் செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்துவிடுகின்றன. தடயங்கள் இருந்தும் தப்பிக்க முடியவில்லை. மனிதர்களின் பல பிரச்சினைகளுக்குக் காரணம் மன உளைச்சல்தான். தமிழகத்தின் விடிவெள்ளி பேரறிஞர் அண்ணா சொல்கிறார், “கத்தியைத் தீட்டினாயே தவிர உன் புத்தியைத் தீட்டவில்லை. காரியத்தைச் சாதிக்கக் கத்தியைத் தீட்டிப் பயனில்லை. உன் புத்தியைத் தீட்டு,” “நாம் விடுபட வேண்டும் என்ற எண்ணம், நம் இதயத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்று!

வெற்றியின் இரகசியம்: நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது. வாழ்ந்து முடிந்த பின்பு நம்மை யாரும் மறக்கக் கூடாது. அதுதாம் நம் வாழ்வின் வெற்றி! இது ஆட்சியாளருக்கும் பொருந்தும்; மக்களுக்கும் பொருந்தும்!

Share
 

முந்தைய மாத இதழ்

புழுக்கத்தைப் போக்கிய பழகு முகாம் புழுக்கத்தைப் போக்கிய பழகு முகாம் கடந்த மே மாதம் 22 முதல் 26 வரையிலான 5 நாட்கள் தஞ்சை, வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலை... மேலும்
கோமாளி மாமா-28: கண்மூடிப் பழக்கம் கோமாளி மாமா-28: கண்மூடிப் பழக்கம் மு.கலைவாணன் தோட்டத்தில் கதை சொல்வதற்காக சரியான நேரத்திற்கு கோமாளி மாமா வந்துவிட்டார். ஆனால், கதை கேட்க வரும் மாணிக்கம், மல்லிகா, செல்வம் ... மேலும்
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை பன்னாட்டு விண்வெளி நிலையம் யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
மிக நீளமான தந்தம் கொண்ட யோகஸ்வரா மிக நீளமான தந்தம் கொண்ட யோகஸ்வரா ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட போகேஸ்வரா என்னும் யானை  கருனாடகாவில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் வயது மூப்பின் காரணமாக அண்மையி... மேலும்
சிறார் கதை: ஒரு துளி ஒளி சிறார் கதை: ஒரு துளி ஒளி கோவி. லெனின் “ஓடி ஆடி விளையாடுவதுதான் உடலுக்கு நல்லது” என்று சொன்னார் தாத்தா.“வீடியோ கேம்ஸ் ஆடுறோமே, அது நல்லதில்லையா?” என்று கேட்டான் பே... மேலும்