Home சிறார் கதை: கெடுப்பது ஒழி!
சனி, 16 அக்டோபர் 2021

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் கதை: கெடுப்பது ஒழி! சிறார் கதை: கெடுப்பது ஒழி! கே.பி. பத்மநாபன் ‘கொழுக் மொழுக்’கென்று இருக்கும் அந்த அழகான வெள்ளை முயலைப் பார்க்கிறபோதெல்லாம் நரியாருக்கு அதன் இறைச்சியைத் தின்ன வேண்டும... மேலும்
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! விடைகள்: 1. காகத்தின் வாய், 2. கரடியின் கால் சட்டை, 3. மரக்கிளை, 4. காகம், 5. முயல் கையில் உள்ள சாக்பீஸ், 6. நரியின் வால், 7. வண்... மேலும்
மழை! மழை! மழை! மழை! குயிலக்கா பாடல் கேட்டுக் கோலஎழில் தோகை கொண்டு மயில்மாமா மகிழ்வாய் ஆட மழைமேகம் கருக்கு தம்மா!   தவளையண்ணா சத்த மிட்டே தாளமுடன் குரலெ ... மேலும்
அய்ந்து வயதுச் சிறுமியின் வாசிப்புச் சாதனை! அய்ந்து வயதுச் சிறுமியின் வாசிப்புச் சாதனை! அமெரிக்காவில் வாழும் சென்னையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த இந்திய - அமெரிக்க சிறுமியான அய்ந்து வயது கியாரா கவுர், அரபு அமீரகத்தில் படித... மேலும்
அசத்தும் அறிவியல் : தாவரங்கள் எப்படி வேர்கள் மற்றும் தண்டு மூலம் தண்ணீரை உறிஞ்சுகின்றன? அசத்தும் அறிவியல் : தாவரங்கள் எப்படி வேர்கள் மற்றும் தண்டு மூலம் தண்ணீரை உறிஞ்சுகின்றன? எப்படி பரிசோதனை செய்வது? ஒவ்வொரு கண்ணாடிக் கோப்பையிலும் குழாயிலிருந்து பிடித்த புதிய நீரை நிரப்பவும். 2--5 சொட்டு உணவு வண்ணத்தை (Food col... மேலும்
சிறார் கதை: கெடுப்பது ஒழி!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கே.பி. பத்மநாபன்


‘கொழுக் மொழுக்’கென்று இருக்கும் அந்த அழகான வெள்ளை முயலைப் பார்க்கிறபோதெல்லாம் நரியாருக்கு அதன் இறைச்சியைத் தின்ன வேண்டுமென்ற தீராத ஆசையிருந்தது. ஆனால், அந்த முயல் எப்போதும் அவரிடமிருந்து தப்பித்தவாறேயிருந்தது. என்றும் சிங்கராஜா வேட்டையாடி சாப்பிட்ட பிறகு மிச்சமான எச்சிலையே சாப்பிட்டுவந்த நரியாருக்கு, இந்த முயலிறைச்சியைத் தின்ன ஒரு தந்திரம் தோன்றியது.

சில நாள்களாகவே சற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேட்டையாடச் செல்லாமல் பலவீனமாகவே இருந்த சிங்கராஜாவிடம் சென்று, நரியார், “மகாராஜா, தங்களது உடல் பலமடைய, முயலிறைச்சி தின்றால் போதுமென்று நமது கரடி மருத்துவர் கூறுகிறார்’’ என்று கூற, சிங்கராஜா, “இப்போது என்னால் ஓடிச்சென்று வேட்டையாட இயலாத நிலையில், நான் எப்படி முயலை வேட்டையாடிப் பிடிக்க முடியும்?’’ என்று கேட்டார்.

“அதற்கு நானொரு உபாயம் கூறுகிறேன். நாளை நடக்கவிருக்கிற வனநாள் விழாவில் முயலுக்கும் ஆமைக்குமான ஓட்டப்பந்தயம் வைப்போம். தோற்கிறவருக்கு மரணதண்டனை என்று அறிவிப்போம். பண்டைய வரலாறு போலவே, திமிர் பிடித்த முயல் பாதி வழியினில் தூங்கிவிட...  ஆமை ஜெயிக்கும். தோற்ற முயலைத் தாங்கள் உண்டு நலமடையலாம்’’ என்றார் நரியார். சிங்கராஜாவும் ‘சரி’ என்று தலையாட்ட, நரியார் உற்சாகமாகப் பந்தயத்தைப் பற்றி அறிவிப்பதற்காகக் குகையை விட்டு வெளியே சென்றார். எதேச்சையாக அவ்வழியாக வந்த முயல்  மறைவிலிருந்து இதைக் கேட்டதும், நரியாரின் தந்திரத்தைப் புரிந்து கொண்டது. சற்று நேர யோசனைக்குப்பின், சிங்கராஜாவிடம் சென்று , “மகாராஜா, நரியார் கூறிய பந்தயத்தைத் தயவு செய்து வைக்க வேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டது.

“ஏன்?’’ என்று கேட்டார் சிங்கராஜா.

“மகாராஜா, நரியாருக்கு என்னுடைய இறைச்சியைத் தின்ன வேண்டுமென்ற ஆசை. அவரால் என்னைப் பிடிக்க முடியாததால், வேண்டுமென்றே கரடி மருத்துவர் கூறியதாகக் கூறி, உங்களிடம் இந்த மாதிரியான பொய்யான யோசனையைத் தந்துள்ளார். என்னுடைய மூதாதையரான முயல் தாத்தா அன்றைய நாள் ஓட்டப்பந்தயத்தில் ஏதோ அசட்டுத்தனமாக உறங்கிவிட்டதால் தோற்றுப் போய்விட்டார். என்னதான் ஆனாலும், ஆமையார் என்னளவு வேகமாக ஓடவே முடியாதென்பதும், நான் நிச்சயமாக வென்றுவிடுவேன் என்பதும் உறுதி. நான் ஜெயித்துவிட்டால் நீங்களோ நரியாரோ என்னுடைய இறைச்சியை உண்ண முடியாது. ஆனால் பாவம், ஒன்றுமறியாத ஆமையார் தோற்றுவிட்டால், செய்யாத தவறுக்காக அவர் மரணதண்டனை பெற நேரிடும். ஒரு பந்தயம் என்பது, ஏறக்குறைய சம அளவு வலிமையுடையவர்களுக்கிடையே மட்டும்தான் இருக்க வேண்டுமேயன்றி, ஒரு வேகமானவனுக்கும் ஒரு மெதுவானவனுக்குமிடையே இருப்பது நியாயமில்லை, அல்லவா?’’ என்று கேட்டது முயல்.

சிங்கராஜா சிந்தித்தார். முயல் கூறியதில் முழுமையான நியாயம் இருப்பதையும், கெடுதல் செய்வதற்காகத் தன்னை நரியார் ஒரு கருவியாகப் பயன்படுத்தும் தந்திரத்தையும் எண்ணி அவருக்கு கோபம் வந்தது. முயலிடமே கேட்டார்: “இப்போ நான் என்ன செய்யலாம்?’’

நீங்களாக யோசிக்கவே மாட்டீர்களா “மகாராஜா! சரி போகட்டும். நானே ஒரு யோசனை சொல்கிறேன். முள்ளை முள்ளால்தான் எடுக்க-வேண்டும். நரியார் உபயோகித்த அதே மாதிரியான தந்திரத்தையே தாங்களும் பயன்-படுத்துங்கள். தாங்கள் கரடி மருத்துவரை இதுபற்றிக் கேட்டதாகவும், அதற்கு அவர், முதலில் உங்கள் உடலின் தற்போதைய பலத்தின் அளவை அறிய ஒரு மல்யுத்தம் செய்து பார்க்க வேண்டுமெனக் கூறியதாகவும், ஓட்டப் பந்தயத்திற்கு முன்னர் நரியுடன் நீங்கள் மல்யுத்தம் செய்யப் போவதாகவும் கூறுங்கள். தங்களை விடப் பலம் மிகவும் குறைந்த நரியாரிடமிருந்து நிச்சயமாக உண்மை வெளிப்படும்’’ என்றது முயல்.

வெளியே சென்ற நரியார், ஏனோ மறுபடியும் திரும்பி வந்ததால் இதையெல்லாம் மறைந்தபடியே கேட்டதும், பயத்தால் மிகவும் நடுங்கி, உள்ளே ஓடிவந்து, “மகாராஜா, என்னை மன்னிக்க வேண்டும். முயல் கூறியது உண்மைதான். நான்தான் கெட்ட எண்ணத்துடன் இதையெல்லாம் திட்டமிட்டேன்’’ என்று அழுது கதறியபடி சிங்கராஜாவிடம் விழுந்து கதறியது.

“மூட நரியாரே, ‘கெடுப்பது ஒழி’ என்ற அவ்வை மொழியை நீ கேட்டதில்லையா? மற்றவர்களைக் கெடுத்து, தான் மட்டும் வாழ நினைக்கும் தீக்குணம் விலங்குகளின் குணமல்ல என்று உனக்குத் தெரியாதா?’’ என்று நரியாரைக் கண்டபடி திட்டிய சிங்கராஜா, முயலின் அன்பான வேண்டு-கோளுக்கிணங்கி மன்னித்துவிட, நரியாரும் முயலும் சிங்கராஜாவின் முன்பாகக் கைகுலுக்கிக் கொண்டனர்.

Share
 

முந்தைய மாத இதழ்

பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - வேண்டும் விளையாட்டுப் பண்பும், போட்டி அறமும்! பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - வேண்டும் விளையாட்டுப் பண்பும், போட்டி அறமும்! பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, எப்படி இருக்கீங்க? கொரோனாவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உரிய பாதுகாப்புடன் மீண்டும் பள்ளிகள் திற... மேலும்
ஏய்த்த கதை முடித்தார்! ஏய்த்த கதை முடித்தார்! பெரியார் தாத்தா பிறந்தநாள் - செப்டம்பர் 17 தாத்தாவை அறிவாய் தம்பி! தமிழருக்கு விடிவான் வெள்ளி! சூத்திரனாய் இழித்தார் தம்மைச் சூரியனாய்... மேலும்
சிறுவர் கதை : காட்டிக்குள்ளே ஒரு நாள் சிறுவர் கதை : காட்டிக்குள்ளே ஒரு நாள் உமா குமார் பூபூவும் தீபுவும் உற்ற நண்பர்கள். அவங்களுக்கு காட்டுக்குள்ள போகணும்னு ரொம்ப நாளா ஆசை. காட்டுக்குள்ளதான் நிறைய நிறைய விலங்குகள்... மேலும்
முதல்வரை நெகிழ்வித்த வம்சிக்! முதல்வரை நெகிழ்வித்த வம்சிக்! இந்த இதழின் நடுப்பக்கத்தை அலங்கரிக்கும் தந்தை பெரியார் ஓவியம், பதினொன்றாம் வகுப்பு பயிலும் வம்சிக் சிவா வரைந்தது. குழந்தைகளுக்கான முதல் வ... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழுடன் வித்தியாசமான கோணங்களில்... மேலும்