Home தேடல்: வேற்றுக்கிரக உயிரினங்கள்?
வெள்ளி, 27 மே 2022
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அறியாமை தேயும் அறியாமை தேயும் பாட நூல்க ளோடு - நீயும் படிப்பாய் பலவகை  ஏடு!கிடைக்கும் இன்பம் அறிவு - அதில் கிட்டும் சிந்தனைச் செறிவு!நூலகம் சென்று படிப்பாய் - நல்ல நூல்... மேலும்
அசத்தும் அறிவியல்! அசத்தும் அறிவியல்! இத்தனை புரூஸ்லீக்கள் வந்தது எப்படி? வியப்பூட்டும் பன்முகப் பிரதிபலிப்புகள் முடி திருத்தும் நிலையத்தில் உள்ள கண்ணாடிகள் எப்போதும் நம்மைக்... மேலும்
உலக நாடுகள் : ஸ்பெயின்(SPAIN) உலக நாடுகள் : ஸ்பெயின்(SPAIN) கருந்துளை (Black Hole) அதிக ஈர்ப்பு விசை கொண்டது. இதனைக் கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதைக்கூட தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் ... மேலும்
தேடல்: வேற்றுக்கிரக உயிரினங்கள்?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கேள்விகள் தொடர்கின்றன!

அபி


கோடை வெயிலில் சூடாகியிருந்த மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றி சூட்டைத் தணித்து வைத்திருந்தார் கயல்விழியின் அப்பா. ஒவ்வொரு முழு நிலவு நாள் அன்றும் கயல்விழி வீட்டில் மொட்டை மாடியில் நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டு தூங்குவது வழக்கம். அப்படி இந்த மாதமும் சாப்பிட்டு முடித்து தூங்கத் தயாரானார்கள். அப்பாவின் அறிவியல் கதைகள் கேட்டு வளர்ந்த கயல்விழிக்கு அறிவியல் மீது கொள்ளை ஆர்வம். உறக்கம் வராமல் நிலாவைப் பார்த்தபடி இருந்த கயல்விழிக்கு  விண்வெளியில், வேறு கோள்களில் யாராவது இருப்பாங்களா என்ற கேள்வியும், அதற்கு அவள் பதிலைத் தேடியதும் நினைவுக்கு வந்தது. இந்தக் கேள்விக்கு இவ்வளவு நாள்களாக வேகமாக இடதும் வலதுமாகத் தலையை ஆட்டியவளுக்கு, ஏன் கூடாது என்ற சிந்தனை காலையிலிருந்து தோன்றிய வண்ணம் இருந்தது. இந்த சிந்தனை வரக் காரணம், அன்று அவள் படித்த கட்டுரை. பூமி உருவாகிய விதத்தைப் பற்றிப் படித்தபோது, இதே போல் ஏன் மற்ற கோள்கள் உயிர்கள் வாழத் தகுந்தவையாக இருக்கக் கூடாது? அங்கு ஏன் உயிர்கள் வாழக் கூடாது? என்று தோன்றியது. அதற்கான பதிலை அறிந்து கொள்ள நூலகம் போனாள்.

இவ்வளவு நாள்களாக வேற்றுக் கிரகவாசிகள் என்றால் தலையில் ரெண்டு ஆண்டெனாக்களோடும் முட்டைக் கண்களோடும் ஆங்கிலப் படங்களில் வருவது போல் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த கயல்விழிக்கு, ஒரு சிறிய நுண்ணுயிர் வேறு கோள்களில் இருந்தால் அதுவும் வேற்றுக் கிரக உயிர்தான் என்று அறிந்த போது கண்கள் விரிந்தன. அதோடு ஆர்வமும் அதிகமானது. எங்காவது இதுவரை வேற்றுக் கிரகவாசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்களா எனத் தேடத் துவங்கிய கயல்விழிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில், இதுவரை எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை.

கயல்விழியின் அருகில் இருந்த புத்தகத்தையும் அவளது சுருங்கிய முகத்தையும் பார்த்துக்கொண்டே வந்த நூலகர், அவளுக்கு வேற்றுக் கிரக உயிரினம் பற்றிய வேறு ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.  வேற்றுக் கிரக உயிர் வளரத் தகுந்த இடம் அண்டத்தில் இருக்கிறதா என்ற தேடல் குறித்து அந்தப் புத்தகத்தில் கயல்விழி தேட, சில செய்திகளைத் தெரிந்து கொண்டாள்.

அந்தச் செய்திகள் உங்களுக்கும் தெரியணுமா? சரி, சொல்கிறேன். வேற்றுக் கிரக உயிரினம் வளரத் தகுந்த இடங்களாக இதுவரை, செவ்வாய், வியாழனின் நிலவான யுரோபா, சனிக்கோளின் நிலவான டைட்டன், சூரியனைப் போன்று வேறு ஒரு விண்மீனைச் சுற்றிவரும் என்செலாடஸ் எனும் கோள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், என்செலாடஸ்தான் பூமிக்கு அடுத்து உயிர்கள் வாழச் சிறந்த கோளாக இருக்கிறது. பல ஆண்டுகளாக வேற்றுக் கிரகவாசிகளைத் தேடும் ஆய்வு நடந்த வண்ணம் இருக்கிறது. தொலைநோக்கிகள், விண்கலங்கள் இந்த ஆய்வை நடத்துவதில் உதவி செய்கின்றன. ஆனால், வேற்றுக் கிரகவாசிகளைத் தேடும் ஆர்வத்தில், விண்வெளியில் அதிகப்படியான குப்பைகளையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது மனிதகுலம். இதையெல்லாம் கயல்விழி யோசித்துக் கொண்டிருந்தபோது, அவளது அம்மா அவளைக் கவனித்து, “கயல்விழி, காலையில பீச் போகணும்ல, சீக்கிரம் தூங்கு” எனச் சொல்லவும், கயல்விழி கொட்டாவி விடவும் சரியாக இருந்தது.

மறுநாள், சூரியன் சோம்பல் முறிப்பது போல், மெதுவாகக் கிளம்பி வருவதை கடற்கரையில் ரசித்துக் கொண்டே நடந்தனர் கயல்விழியும் அவளது குடும்பமும். அப்போது, அங்கிருந்த தேநீர்க் கடையில், ஆளுக்கொரு கருப்பட்டி காபி குடித்துவிட்டு நகர்ந்தபோது, அங்கிருந்த சிறுவர்கள், வானைப் பார்த்து, கையசைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாள் கயல்விழி. மேலே விமானம் போய்க் கொண்டிருந்தது. விமானத்தைப் பார்த்ததும், அவளுக்குப் பறக்கும் தட்டுகள் நினைவுக்கு வந்தன. வீட்டுக்கு வந்ததும், என்ன செய்தாள் கயல்விழி? பறக்கும் தட்டுகள் பற்றி படிக்கப் போனாள்! ஆனால், இந்த முறை, கூகுள் பக்கம் திரும்பியது அவள் எண்ணம்.

அதைப்பற்றித் தேடும்போது, அவளுக்கு தலை வலிக்காத குறை வந்துவிட்டது. ஏனெனில், பறக்கும் தட்டுகளை நேரில் கண்டதாகப் பலர் கூறியிருக்கிறார்கள். ஒருபடி மேலே போய், அமெரிக்கா, 1940களில் பறக்கும் தட்டுகள் குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுவை ஏற்படுத்தி, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதில், அப்படி உலகில் நடந்த பல நிகழ்வுகள் பெரும்பாலும், அந்நிய நாட்டை உளவு பார்ப்பதற்காக ராணுவங்கள் செய்த செயல்கள், வானியல் மாற்றம், கானல் நீர் போல ஏற்படும் பொய்த்தோற்றம் போன்றவையே காரணங்களாக இருந்தன. ஆனால், பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாகச் சொல்லப்படும் சில நிகழ்வுகள் இன்னமும் அவிழ்க்க முடியாத முடிச்சாகவே இருக்கின்றன. இவற்றைப் படிக்கும்போது, கயல்விழிக்கு, பறக்கும் தட்டுகள் இருக்கின்றனவா இல்லையா என மூளை குழம்பியது.

அடுத்த விஷயத்தைப் பார்த்ததும், கயல்விழிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. பறக்கும் தட்டு உண்மையா பொய்யா என்று ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஆனால், உலகில் பல இடங்களில், அதை வைத்து சுற்றுலா நடக்கிறது. அதில், சிலவற்றைப் பற்றிப் படித்தாள் கயல்விழி. சிலியில்(Chile) உள்ள சான் க்ளெமென்டே (San Clemente) என்ற கிராமத்தில் அடிக்கடி பறக்கும் தட்டுகள் வருவதாக மக்கள் நம்புகின்றனர். அதனால், அந்தக் கிராமத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதுபோல, மெக்சிகோவில் இருக்கும் ரொஸ்வெல்லில், பறக்கும் தட்டுத் திருவிழா (UFO festival) என்று மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இதுபோல் உலகில் பல இடங்களில் சுற்றுலா நடைபெறுகிறது. பறக்கும் தட்டுகளை வைத்து சுற்றுலா நடக்கிறது என்றபோது, கண்கள் அவளுக்கு மட்டுமா விரிந்தன? உங்களுக்கும்தானே? இதையெல்லாம் படித்து முடித்துவிட்டு அவள் அறையைவிட்டு வெளியே வரும்போது, அவளுடைய அண்ணன், தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். கயல்விழி சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு வரும்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர், “ஒமுவாமுவா... ஒமுவாமுவா... அட இது மந்திரம் இல்லைங்க! வேறு என்ன?  அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கலாம். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது.......” என்று பேசிக்கொண்டிருந்தார்.  சரி, வேறு என்னவாக இருக்கும்??? யோசித்துக்கொண்டே இருங்க... ஒமுவாமுவா... ஒமுவாமுவா...

Share
 

முந்தைய மாத இதழ்

வாசித்தலே பேரின்பம் ! வாசித்தலே பேரின்பம் ! வெவ்வே றான மொழிகளிலே வெள்ளைத் தாளில் அச்சேறும்ஒவ்வோர் நூலும் உண்மையிலே உன்றன் அறிவை உயர்வாக்கும்!எண்ணும் எழுத்தும் பிறந்ததன்பின் எல்லோர் அ... மேலும்
பாடல் தரும் படிப்பினை பாடல் தரும் படிப்பினை பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, பள்ளிக்கூடம் எல்லாம் திறந்து, கொரோனா கொடுந்தொற்றுக்கு முன் இருந்தது போல வகுப்பறை நிரம்ப, ஆசிரியர்களிடம் ... மேலும்
சிறார் கதை: காக்கா வீடு சிறார் கதை: காக்கா வீடு கோவை.லெனின் மகிழன் கைகளில் இருந்த தின்பண்டத்தை மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்றான்.மாலை நேரத்தில், பக்கத்து வீட்டு மாடியில் அவனது நண்பன் வ... மேலும்
இசைப்போம் வாரீர்! துன்பம் நேர்கையில் இசைப்போம் வாரீர்! துன்பம் நேர்கையில் Scale : Dபாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்இசை: ஆர்.சுதர்சனம்படம்: ஓர் இரவு (இந்தப் பாடலின் இசைக்குறிப்பு மிக நுணுக்கமானது என்பதால், குழந்தைக... மேலும்