Home ரூபிக் பேபி: ஆறு வயதில் மூன்று உலக சாதனைகள்!
வெள்ளி, 27 மே 2022
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அறியாமை தேயும் அறியாமை தேயும் பாட நூல்க ளோடு - நீயும் படிப்பாய் பலவகை  ஏடு!கிடைக்கும் இன்பம் அறிவு - அதில் கிட்டும் சிந்தனைச் செறிவு!நூலகம் சென்று படிப்பாய் - நல்ல நூல்... மேலும்
அசத்தும் அறிவியல்! அசத்தும் அறிவியல்! இத்தனை புரூஸ்லீக்கள் வந்தது எப்படி? வியப்பூட்டும் பன்முகப் பிரதிபலிப்புகள் முடி திருத்தும் நிலையத்தில் உள்ள கண்ணாடிகள் எப்போதும் நம்மைக்... மேலும்
உலக நாடுகள் : ஸ்பெயின்(SPAIN) உலக நாடுகள் : ஸ்பெயின்(SPAIN) கருந்துளை (Black Hole) அதிக ஈர்ப்பு விசை கொண்டது. இதனைக் கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதைக்கூட தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் ... மேலும்
ரூபிக் பேபி: ஆறு வயதில் மூன்று உலக சாதனைகள்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி கோதை வாஹ்ருணி, சின்ன வயது முதலே பெற்றோரிடம் கதைகள் கேட்பது, புதிர் போடுவதை விடுவிப்பது, கணிதம் உள்ளிட்டவற்றை மிக ஆர்வமாகத் தனது பெற்றோரிடமிருந்து கற்று வந்தார். அப்படி அவர்கள் கொடுத்த ரூபிக் கன சதுரப் புதிர் விளையாட்டை விளையாடிய படியே, அதுசார்ந்த மேலும் பல தகவல்களை யூடியூபில் தேடிக் கற்றும் தேர்ந்தார்.

தான் கற்றுக்கொண்ட திறமையை வெளிக்-காட்டும் விதமாக “மாஸ்டர் மார்பிக்ஸ்” எனப்படும் மிகக் கடினமான ரூபிக் கனசதுரப் புதிர் விளையாட்டை ஹூலா ஹூபிங் (இடுப்பில் வளையத்தை சுற்றுவது) செய்துகொண்டே 1 நிமிடம் 59 நொடிக்குள்ளும், “மெகாமின்க்ஸ்” எனப்படும் 8 பக்கம் கொண்ட கன சதுரத்தை 3.3 நிமிடத்திற்குள்ளும் செய்து முடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இரண்டு உலகச் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். இந்தச் சாதனையைப் பற்றி கோதை கூறுகையில், “முதல்லே அப்பா, அம்மா வாங்கித் தந்ததை வச்சு முயற்சி பண்ணினேன். அப்புறம் நானே யூடியூபில் வரும் காட்சிகளைப் பார்த்தும் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்” என்கிறார் சாதனைச் சிறுமி கோதை.

மேலும், இச்சாதனையின் தொடர்ச்சியாக சாகச வளையத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டே “டெட்ராஹெட்ரான்” எனப்படும் முக்கோண வடிவ ரூபிக்கை 6.88 நொடிக்குள் நிகழ்த்திக் காட்டி உலகச் சாதனை படைத்திருக்கிறார். இதில் அனைவரையும் வியக்க வைத்தது இந்தக் கடினமான சாதனையை இதற்கு முன் 18 வயது இளைஞர் 13.86 நொடியில் நிகழ்த்தியிருந்தார். ஆனால், கோதை அதைவிட மிகக் குறைந்த நேரத்தில் செய்திருப்பது அசாதாரண திறமையின் வெளிப்பாடு, இவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு கியூப் சங்கம் பதக்கமும், சான்றிதழும் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பச் சாதனங்களை தன்னுடைய அறிவின் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தும் கோதையை நாமும் பின்பற்றுவோம் பிஞ்சுகளே...

Share
 

முந்தைய மாத இதழ்

வாசித்தலே பேரின்பம் ! வாசித்தலே பேரின்பம் ! வெவ்வே றான மொழிகளிலே வெள்ளைத் தாளில் அச்சேறும்ஒவ்வோர் நூலும் உண்மையிலே உன்றன் அறிவை உயர்வாக்கும்!எண்ணும் எழுத்தும் பிறந்ததன்பின் எல்லோர் அ... மேலும்
பாடல் தரும் படிப்பினை பாடல் தரும் படிப்பினை பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே, பள்ளிக்கூடம் எல்லாம் திறந்து, கொரோனா கொடுந்தொற்றுக்கு முன் இருந்தது போல வகுப்பறை நிரம்ப, ஆசிரியர்களிடம் ... மேலும்
சிறார் கதை: காக்கா வீடு சிறார் கதை: காக்கா வீடு கோவை.லெனின் மகிழன் கைகளில் இருந்த தின்பண்டத்தை மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்றான்.மாலை நேரத்தில், பக்கத்து வீட்டு மாடியில் அவனது நண்பன் வ... மேலும்
இசைப்போம் வாரீர்! துன்பம் நேர்கையில் இசைப்போம் வாரீர்! துன்பம் நேர்கையில் Scale : Dபாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்இசை: ஆர்.சுதர்சனம்படம்: ஓர் இரவு (இந்தப் பாடலின் இசைக்குறிப்பு மிக நுணுக்கமானது என்பதால், குழந்தைக... மேலும்