Home கோமாளி மாமா-26
புதன், 29 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
கோமாளி மாமா-26
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

மதிப்புக்குரியவங்க !

மு.கலைவாணன்

மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் கதை கேட்கத் தோட்டத்திற்கு வந்துவிட்டனர். கோமாளி மாமா வராததால் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

“எங்க வீட்ல தாத்தா தொல்லை தாங்க முடியல...’’ என குறைபட்டுக் கொண்டான் செல்வம்.

“ஏன்? எப்பப் பாத்தாலும் ‘படி படி’ன்னு சொல்றாரா,,,’’ என்றாள் மல்லிகா.

“அப்படி சொன்னாக்கூட பரவால்லே... அந்தக் காலத்துல... நாங்க படிக்க பல மைல் தூரம் நடந்து போனோம்னு... அவரு பள்ளிக்கூடம் போன கதையச் சொல்ல ஆரம்பிச்சுடுறாரு...’’ என்றான் செல்வம்.

“ஆமாடா... எங்க வீட்ல கூட எங்க பாட்டி அந்தக் காலத்துல ரூபாய்க்கு பத்துப் படி அரிசி கிடைக்கும்னு பழைய கதையத்தாண்டா சொல்றாங்க’’ என்று தன் வீட்டில் நடப்பதைச் சொன்னான் மாணிக்கம்.


அந்த நேரத்தில் அங்கு வந்த கோமாளி... “என்ன... ஏதோ பழைய கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கீங்களா...?’’ என்றார்.

“இல்லே மாமா! பழைய காலக் கதையைப் பேசி எங்களை பாடா படுத்துற தாத்தா, பாட்டிங்களைப் பத்தி பேசிக்கிட்டிருக்கோம் மாமா’’ என்றாள் மல்லிகா.
“பழைய காலக் கதையைச் சொல்ற தாத்தா, பாட்டி உங்களுக்குச் சிரமமா... தெரியுறாங்களா? அப்படி நினைக்கிறதே ரொம்ப ரொம்ப தப்பு.

இளமையா இருக்கிற உங்களுக்கும் முதுமை கட்டாயம் வரும். முதுமைங்கிறது அனுபவங்களின் தொகுப்பு. அவங்க சொல்றதைக் கேட்டதால இப்ப நாம எவ்வளவு முன்னேறி இருக்கோம்னு தெரியும். அவங்க சொல்றதைக் காது குடுத்துக் கேட்டாலே போதும். அவங்க மனசு மகிழ்ச்சி அடையும்.

பெரியவங்களாலே சில செயல்களைச் செய்ய முடியாமப் போகலாம். பெரியவங்க சொன்னாங்க என்று அறிவுக்குப் பொருந்தாததையும் ஏற்கவும் கூடாது. அதுக்காக அவங்களைப் புறக்கணிக்கக் கூடாது. சரி... சரி... வாங்க நான் உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்...’’ என்றபடி வழக்கமாக அமரும் மரத்தடியில் உட்கார்ந்தார். மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் அவரைச் சுற்றி உட்கார்ந்தனர்.

“மாமா, தாத்தா, பாட்டி கதைதானே சொல்லப் போறீங்க?” என்றான் மாணிக்கம்.

“மாமா சொல்லுவாரு... கொஞ்சம் பொறு’’ என்றாள் மல்லிகா.

“என் நண்பர் எனக்குச் சொன்ன கதை இது. நான் சொல்லி முடிச்சதும் உங்களுக்கே புரியும்” என்றபடி கதையைத் தொடங்கினார்.

“ஒரு பாரசீக மன்னன்...
இறந்து போன தன் தாத்தாவின் நூறாவது நாள் சடங்கு செய்யறதுக்காக, தான் இருக்கிற இஸ்தான்பூர்லயிருந்து கப்பர்நாகூம் பட்டினத்துலே புதைக்கப்பட்டிருக்கிற தன் தாத்தாவின் சமாதிக்குப் புறப்பட்டான்.

மொத்தம் ஏழு நாள்கள் பாலைவனத்துல பயணப்பட்டுத்தான் அங்கே போய்ச் சேர முடியும். அதனால இளைஞர்கள் மட்டுமே அந்தப் பயணத்துல பங்கெடுத்துக்கணும். வயசானவங்க யாரும் பயணத்துல வரக்கூடாதுன்னு அறிவிச்-சுட்டாரு பாரசீக மன்னர்.

மன்னர் தன்னோட பரிவாரங்களையும், இளைஞர்களையும் அழைச்சிக்கிட்டு ஒட்டகங்-களிலே பாலைவனத்துப் பயணத்தைத் தொடங்கிட்டாரு.
ஒரு நாள் பயணம் முடியிறதுக்குள்ளேயே பாலைவனத்துல புயல் பயங்கரமா வீச ஆரம்பிச்சிடுச்சு.

கடுமையான புயல் வீசுனதுனாலே ஒட்டகங்கள் எல்லாம் திக்குத் தெரியாம திசை மாறிப் போயிடுச்சு.

மன்னரும், அவரு கூட சிலரும் வழி மாறிப் போயிட்டாங்க. யார் யாரு எங்க இருக்காங்கன்னு தெரியல. தண்ணி தாகம். சில பேரு இறந்தும் போயிட்டாங்க.
மன்னனுக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல. தாகத்துக்குத் தண்ணி இல்லாததாலே தாக்குப் புடிக்க முடியல.

அந்த நேரத்துல மன்னரோட இருந்த ஒரு இளைஞன், “மன்னா, தண்ணீர் இருக்கிற இடத்தை நான் சொல்றேன். இங்கே இருந்து தென்கிழக்கு திசையிலே ரெண்டு கல் தொலைவுல தண்ணி கிடைக்கும்”னு சொன்னான்.

தாகத்திலே தவிச்சுக்கிடந்த எல்லாரும் அவன் சொன்ன பக்கமாப் போனாங்க. கொஞ்ச தூரத்திலே அவன் சொன்னபடியே அங்கே தண்ணி இருந்தது. எல்லாரும் தண்ணீரைக் குடிச்சு தாகத்தைப் போக்கிக் கிட்டாங்க.

மன்னனுக்கு மிகுந்த வியப்பா இருந்தது. உடனே அந்த இளைஞனைக் கூப்பிட்ட மன்னன், “உனக்கு மட்டும் எப்படித் தெரியும்? இந்தப் பாலைவனக் காட்டுல இந்த இடத்தில தண்ணி இருக்கும்னு...” தன் சந்தேகத்தைக் கேட்டார்.

“மன்னா...! என்னை மன்னிச்சுடுங்க. நான் ஒரு தப்பு செய்துட்டேன் மன்னா...” என்று மண்டியிட்டார் இளைஞன்.

“தாகத்துக்குத் தண்ணி இருக்கிற இடத்தைக் காட்டி, எங்க உயிரைக் காப்பாத்துன நீ எந்தத் தப்பும் செய்திருக்க மாட்டே... உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன் சொல்லு” என்றார் மன்னர்.

இளைஞன் தயங்கியபடியே, “அது வந்து மன்னா... என் அப்பா... உங்க தாத்தாவோட சேவகனா இருந்தவரு. அவரோட நூறாவது நாள் சடங்குல கலந்துக்க வருவேன்னு அடம்புடிச்சாரு மன்னா! நீங்களோ வயசானவங்க இந்தப் பயணத்துக்கு வரக்கூடாதுன்னு உறுதியாச் சொல்லிட்டீங்க. அதனால, நான் மறுத்துட்டேன்.

அவரு கேக்கல. ரொம்ப அடம் புடிச்சாரு. அவரை ஒரு சாக்குப் பையிலே போட்டுக் கட்டி என் ஒட்டகத்து மேலே சாப்பாட்டு மூட்டைகளோட சேர்த்து வச்சுட்டேன். தண்ணிக்காக சிரமப்பட்ட நான் அவர்கிட்டே சொன்னேன். அவரு சாக்குப் பையில ஒரு ஓட்டை போடுன்னு சொன்னாரு. ஓட்டை போட்டேன்.

அந்த ஓட்டை வழியாப் பாத்துட்டுதான் தண்ணி இருக்கிற இடத்தைச் சொன்னார். அதை எப்படிக் கண்டுபுடிச்சிங்கன்னு கேட்டேன். மாலை நேரத்துல சிச்சிலிப் பறவைகள் தண்ணி குடிச்சுட்டுத்தான் தூங்கும். நான் சாக்குத் துவாரத்து வழியா பார்த்தபோது தென்கிழக்கு திசையிலிருந்து அந்தப் பறவைகள் பறந்து வந்தது தெரிஞ்சுது. அதனால தான் அந்தப் பக்கம் தண்ணி இருக்கும்னு சொன்னதா சொன்னாரு” அப்படின்னு விளக்கினான்.

மன்னன் உடனே அந்தப் பெரியவரை சாக்குப் பையில இருந்து வெளியே கூட்டிக்கிட்டு வரச் சொன்னாரு.

பெரியவங்களின் அனுபவம் அடுத்த தலை-முறைக்கு வழிகாட்டியா அமையக் கூடியதுங்கிறதை புரிஞ்சிட்டேன்னு சொல்லி அந்தப் பெரியவருக்குப் பரிசு கொடுத்து பாராட்டுனாரு பாரசீக மன்னரு.

இப்ப சொல்லுங்க... பெரியவங்க...” என கோமாளி மாமா சொன்னதற்கு, “எப்பவும் எங்களுடைய மதிப்புக்கு உரியவங்க”
உடனே பதில் சொன்னார்கள் மூவரும்.

- மீண்டும் வருவார் கோமாளி


Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்