நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 32
‘படர்க்கை படர்க்கையுடன் பேசும் உரையாடல்’ இந்த அலைபேசி உரையாடலைப் பாருங்கள்: “என் சகோதரனும் உன் சகோதரியும் புத்தகக் காட்சிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்’’ _ கவுதமன் கலைச் செல்வனிடம் சொல்கிறான்.
நேர்க்கூற்று: Gouthaman said to Kalai selvan, “my brother and Your sister are going to Book Exhibition”
அயற்கூற்று:
Gouthaman told Kalai selvan that His brother and his sister were going to Book Exhibition.
இதுதான் ‘படர்க்கை படர்க்கையுடன்’ பேசும் (எ.கா.) உரையாடல்’ ஆகும்.
Pronoun--கள் மாற்றத்திற்கான அட்டவணைகள் நிறைய பார்த்து விட்டோம். இறுதியாக படர்க்கை படர்க்கையுடன் பேசும் உரையாடல் அட்டவணையைக் (கீழே) பார்ப்போம்!
அதற்கு முன் வழிமுறை(Formula) கவனியுங்கள்!

____________________________________________
‘அவன்’ ‘அவனிடம்’ பேசும்போது, உரையாடல் பகுதியில் உள்ள ‘நீ’ ‘அவனாக’ மாறுவான்! (you > he) ‘நான்’ ‘அவனாக’ மாறுவான்! (I > he) ஆனால் ‘அவன்’ ‘அவனாக’வே இருப்பான்! (he > he) ‘அவள்’ ‘அவளாக’வே இருப்பாள்! (she > she) ‘அது’ ‘அதுவாக’வே இருக்கும்! (it > it) ‘அவர்கள்’ ‘அவர்களாகவே இருப்பார்கள்! (they > they)
_________________________________________
பெட்டியில் கொடுக்கப்பட்ட வழிமுறை (Formula) உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். ஏனேனில் நீங்களோ நானோ அல்லாத ஒருவர் வேறொருவரிடம் பேசுகிறார். எனவே இதில் நமக்குத் தொடர்பில்லை அல்லவா?
She said to her/him என்றவாறு படர்க்கை படர்க்கையுடன் (3rd Person to 3rd Person) பேசும் உரையாடலில்... (பேசுகின்ற) உரையாடல் பகுதியில் Pronoun (தமிழில்: பிரதிப் பெயர்ச்சொல்) வந்தாலும் I (நான்) அல்லது You (நீ) அல்லது பிமீ, He, She, It (அவன், அவள், அது) எது வந்தாலும்...
அந்த Pronoun படர்க்கையாக (3rd Person ஆக) மட்டுமே மாறும். (ஒருமை Pronoun ஒருமையாகவும் அதே நேரம் பன்மை Pronoun பன்மையாகவும் வரக்கூடும் _ அட்டவணையில் அது உங்களுக்குப் புரியும்!)

|