Home பழகுமுகாம்
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அழகுதமிழ் நீதிநெறி அழகுதமிழ் நீதிநெறி   குரங்குக்கு மழைநேரம் கூறப்போன அறிவுரையால்வருந்திற்று கூடிழந்து வாட்டமுற்றுத் தூக்கணம்!வாய்திறந்து காக்கையினை வஞ்சகமாய்ப் பாடச்சொல்லிவ... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை! நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை! ‘இளமையில கல்’ ‘அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையில்’ என்பன போன்ற அனுபவ மொழிகள், குழந்தைப் பருவத்திலே ... மேலும்
பழகுமுகாம் பழகுமுகாம் பிடிச்சிருக்கு ..... பிடிச்சிருக்கு .....பிடிச்சிருக்கு ..... இயல்பிலேயே மாணவப் பருவம் என்பது துருதுருவென்று எதையாவது அறிந்துகொள்ள, புரிந... மேலும்
பரிசு வேண்டுமா? பரிசு வேண்டுமா? பெரியார் குமார் கேள்விகள்: இடமிருந்து வலம்:1.    ____ த் திணிப்பை என்றும் எதிர்ப்போம் (3)3.    அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்ட ஜப்பான... மேலும்
இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே Scale : C majorபாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்இசைத் தொகுப்பு : பாரதிதாசன் பாட்டருவிபாடியவர் : நித்யஸ்ரீ மகாதேவன் இசைக் குறிப்பு:விஜய் ப... மேலும்
பழகுமுகாம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பிடிச்சிருக்கு ..... பிடிச்சிருக்கு .....பிடிச்சிருக்கு .....

இயல்பிலேயே மாணவப் பருவம் என்பது துருதுருவென்று எதையாவது அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்ற இயல்புடையது. அதை ‘கரோனா’ காலம் முடக்கிப் போட்டுவிட்டது. என்னதான் காணொலி, இணையம் என்றிருந்தாலும் ஆண்டுக்கணக்கில் அப்பா, அம்மா, சகோதரர்கள், தொலைக்காட்சி, கைப்பேசி என்பன மட்டுமே அவர்களது இயல்புக்கு ஈடுகொடுக்கவில்லை. தங்களையொத்த மாணவர்களுடன் கலந்து பழகி, விளையாடிக் களிக்கும் அனுபவத்தை மேற் கூறியவை கொடுக்கவில்லை. அதுவும் ஓர் இயந்திரத்தனம் ஆகிப் போனது.

அந்த இயந்திரத்தனத்தை இயற்கை நிலைக்குக் கொண்டு வந்தது பழகு முகாம் _ 2022. இதற்காக ‘பெரியார் பிஞ்சு’, இதழுக்கும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பழகுமுகாமில் கலந்துகொண்ட மாணவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நன்றி சொல்வார்கள். அந்த நன்றியை அவரவர்களின் சொற்களில் கண்கள் விரிய, கைகள் அகல, முகம் மலர உற்சாகத்துடனும், துள்ளலுடனும் அவர்கள் நம்மிடம் வெளிப்படுத்திய பாங்கே தனிரகம்.

இப்படிப்பட்ட கூடல், களிப்பு, விளையாட்டு, கற்றல், அதன்படி நிற்றல் இவைதான் இந்தப் பருவத்திற்குத் தேவை. பழகுமுகாம்-_  மாணவர்களுக்கான மாதிரிப் பள்ளி (Model School) . முதல் நாளில் நுழைந்தபோது தடுமாற்றம் மாறி அய்ந்தாம் நாளில் பிரியப் போகிறோமே என்று ஏற்பட்ட பரிதவிப்பு சொல்லி விடுகிறது, பழகுமுகாம் தான் இளம் மாணவர்களின் கற்றல் தேர்வு என்பதை!

பழகுமுகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மாணவர்கள் தெரிவித்த கருத்துகள்:

1. ஆதவன் சித்தார்த் - மதுரை
பழகு முகாம் ரொம்பப் பிடிச்சிருக்கு. கலைவாணன் வகுப்பு மிகவும் பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் ஏழு நண்பர்கள் இருக்காங்க. முடிவதற்குள் இன்னும் பத்து பேரையாவது நண்பர்களாக்கிக்குவேன்.

2. மு. க. கதிரவன் - திருவாரூர்
முதல்முறையாக நீச்சல் குளத்தில் குளித்தேன். அடுத்த ஆண்டும் நிச்சயம் வருவேன். பூங்குன்றன் அய்யா வகுப்பு நன்றாக இருந்தது. இதுவரையிலும் மூன்று நண்பர்கள். 10 பேரையாவது நண்பர்களாக ஆக்கிக்கணும். எல்லோரும் ரொம்ப நல்லா பழகுறாங்க.

3. கோகுலகிருஷ்ணன் - கிருஷ்ணகிரி
ரொம்ப புடிச்சிருக்கு. 8 பேர் நண்பர்கள்.

4. ஆனந்த பிரபாகரன் - மதுரை
ரொம்... ப பிடிச்சிருக்கு. ஜாலியா இருக்கு. 6 நண்பர்கள்.

5. அறிவுக்கரசு - திண்டுக்கல்

அய்ன்ஸ்டீன் அரங்கில் நடந்த எல்லா வகுப்பும் புடிச்சிருக்கு. மிஸ்டர் ஜி. கே. நல்லா இருந்துச்சு. 3 நண்பர்கள்.

6. நிரல்யா - மதுரை
நிறைய்...ய புடிச்சிருக்கு. நீச்சல், விளையாட்டு, பெரியார் படம் பிடிச்சது. 5 நண்பர்கள் இருக்காங்க. அடுத்த முறை நிச்சயமா வருவேன்.


7. தண்மதி - ஈரோடு
இதோடு மூன்று முறை வந்துள்ளேன். அந்தளவுக்கு நல்லா இருக்கு. நடைப் பயிற்சி நல்லா இருக்கு. ஜாலியா பழகுறாங்க, பேசறாங்க. அப்புறம் நீச்சல் பிடிச்சது. விளையாட்டும் பிடிச்சது.

8. பறை - சென்னை

100% பிடிச்சிருக்கு. வீட்டில் இருந்தா வெளியில் போகமுடியாது. இங்க ஜாலியா இருக்கு. 5 நண்பர்கள் இருக்காங்க. அடுத்த ஆண்டும் வருவேன்.

9. ப்ரீத்தி - தர்மபுரி

ரொம்ப பிடிச்சிருக்கு. அய்ன்ஸ்டீன் அரங்கில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும் புடிச்சிருக்கு. எனக்கு ஆறு நண்பர்கள் இருக்காங்க.

10. அணுவந்தனா - திருவண்ணாமலை
ரொம்ப, ரொம்ப பிடிச்சது. நீச்சல் பிரமாதம். எனக்கு 11 நண்பர்கள் இருக்காங்க. உடுமலை, பிரின்சு இருவரையும் பிடிச்சது.

11. பகுத்தறிவு - தம்பியூர்
முதல் முறையா வந்திருக்கேன். (கைகளை அகலமாக விரித்து) ரொம்பப் புடிக்கும். ஓவியம், கலைவாணன் வகுப்பு அருமை. உணவும் அருமை. எனக்கு 17  நண்பர்கள்.

12. செம்மொழி பிரபா - மதுரை கப்பலூர்
முதல் தடவையா வர்றேன். ரொம்ப, ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த மாதிரி உணவு எங்கேயும் சாப்பிட்டதில்லை. வீட்டில் இருப்பதைவிட, இங்கேயே இருந்துவிடலாம் என்று தோன்றுகிறது. எனக்கு 33 நண்பர்கள் (வியந்து போன நாம், 33பேர் சொல்ல முடியுமா என்றதும், கடகடவென சில பெயர்களைச் சொன்னதும் நாம் பின்வாங்கிக் கொண்டோம்)

13. நபண்யா - பெங்களூரு
ஃபர்ஸ்ட் டைம் வர்றேன். நல்லா இருக்கு. ஜாலியா இருக்கு. 11 பேர் நண்பர்கள்.

14. அன்புச்செழியன் - செய்யாறு

இரண்டாவது முறை வருகிறேன். எனது அண்ணன் இளஞ்செழியன் (பழகு முகாமின் பழைய மாணவர்). உண்மையாகவே ரொம்ப பிடிச்சிருக்கு. முன்பைவிட நல்லா இருக்கு. எனக்கு எல்லோருமே நண்பர்கள்தான்.
அடுத்த ஆண்டும் வருவேன்.

15. அகிலன் - சென்னை
பர்ஸ்ட் டைம். அப்பா, அம்மாகிட்ட இருந்து வெளியில் வந்தது நன்றாக இருக்கு. எல்லாமே புடிச்சது. எனக்கு 9 நண்பர்கள்.

தொகுப்பு : உடுமலை

Share
 

முந்தைய மாத இதழ்

புழுக்கத்தைப் போக்கிய பழகு முகாம் புழுக்கத்தைப் போக்கிய பழகு முகாம் கடந்த மே மாதம் 22 முதல் 26 வரையிலான 5 நாட்கள் தஞ்சை, வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலை... மேலும்
கோமாளி மாமா-28: கண்மூடிப் பழக்கம் கோமாளி மாமா-28: கண்மூடிப் பழக்கம் மு.கலைவாணன் தோட்டத்தில் கதை சொல்வதற்காக சரியான நேரத்திற்கு கோமாளி மாமா வந்துவிட்டார். ஆனால், கதை கேட்க வரும் மாணிக்கம், மல்லிகா, செல்வம் ... மேலும்
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை பன்னாட்டு விண்வெளி நிலையம் யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
மிக நீளமான தந்தம் கொண்ட யோகஸ்வரா மிக நீளமான தந்தம் கொண்ட யோகஸ்வரா ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட போகேஸ்வரா என்னும் யானை  கருனாடகாவில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் வயது மூப்பின் காரணமாக அண்மையி... மேலும்
சிறார் கதை: ஒரு துளி ஒளி சிறார் கதை: ஒரு துளி ஒளி கோவி. லெனின் “ஓடி ஆடி விளையாடுவதுதான் உடலுக்கு நல்லது” என்று சொன்னார் தாத்தா.“வீடியோ கேம்ஸ் ஆடுறோமே, அது நல்லதில்லையா?” என்று கேட்டான் பே... மேலும்