பொத்ட்டூர் புவியரசன்

எங்க தாத்தா தங்கத் தாத்தா எமக்கு வாய்த்த சிங்கத் தாத்தா எங்கள் வாழ்வில் ஏற்றம் தந்து எம்மைக் காத்த அன்புத் தாத்தா!
ஆடு மாடாய் வீழ்ந்து கிடந்த அடிமை இனத்தை மீட்ட தாத்தா! நாடும் வாழ நாமும் வளர நலமாய்த் தொண்டு செய்த தாத்தா!
கடவுள் ஆன்மா மோட்சம் நரகம் கற்பனை என்று சொன்ன தாத்தா மடமை இருளில் வீழ்ந்து கிடந்த மனித இனத்தை மீட்ட தாத்தா!
போதி மரத்துப் புத்தன் போலே புதுமை கண்ட அரிய தாத்தா சாதி சமயம் வேண்டா மென்று சரியாய்ச் சொன்ன பெரியார் தாத்தா!
|