Home தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
திங்கள், 27 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 35

நாம் இதுவரை நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றிற்கு மாற்றும்போது என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டும் என்று 5 Steps  வரை (5 படிகளில்) பார்த்தோம்.

இது 6ஆவது (Step) படிமுறை.

Step 6 இன்படி

நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாற்றினாலோ அல்லது அயற்கூற்றிலிருந்து நேர்க்கூற்றுக்கு மாற்றினாலோ ஆங்கில இலக்கண அமைப்பின்படி சொற்களை இடமாற்றம் (Placement மாற்றத்தை) செய்ய வேண்டும்.

இதை நாம் தொடக்கம் முதலே செய்து வந்தோம். ஆனால், எப்படிச் செய்தோம் _ என்று தெரியாமல் மாற்றம் செய்து வந்தோம். இப்போது ஆங்கில முறைப்படி தெரிந்துகொள்ளலாம்.

இந்தவித இடமாற்றங்கள் (Placement) சாதாரணச் சொற்றொடர்களிலும், கட்டளைச் சொற்றொடர்களிலும் இருக்காது. பெரும்பாலும் கேள்விச் சொற்றொடர்களிலும், உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் தான் வரும்.
கீழே உள்ள சொற்றொடர்களில் ஆங்கில இடமாற்றத்தை மட்டும் பாருங்கள்!
எ.கா(1) (கேள்விச் சொற்றொடர்)
நேர்க்கூற்றில்:
இனியா தமிழ்மலரிடம், “நீ அஞ்சல் அலுவலகத்திற்கா சென்றுகொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டாள்.

Iniya said to Tamizhmalar, “Are you going to Post office?” (இட மாற்றத்திற்கு முன்)

இதை அயற்கூற்றில்:


இனியா தமிழ்மலரிடம் அவள் அஞ்சல் அலுவலகத்திற்குத்தான் சென்று கொண்டிருந்தாளா என்றவாறு வினவினாள்.

Iniya asked Tamizh malar if she was going to Post office
(இடமாற்றத்திற்குப் பின்)
_என்று சொல்வோம்.

இங்கே...Are you என்பது she was என்றவாறு இடம் மாறியுள்ளது அல்லவா?

எ.கா: (2) (உணர்ச்சிச் சொற்றொடர்)

நேர்க்கூற்றில்:

இசைமொழி தேன்மொழியிடம், “என்னே அருமையான பாட்டு இது!’’ என்றாள்.

Isaimozhi said to Thenmozhi, “Wow! What a wonderful song this is!” (இட மாற்றத்திற்கு முன்)

இதை அயற்கூற்றில்:

இசைமொழி தேன்மொழியிடம் அந்தப் பாட்டு மிக அருமையாக இருந்ததாகச் சிலாகித்தாள்.

Isai mozhi exclaimed Thenmozhi that that song was very wonderful  என்றவாறு இடம் மாறியுள்ளது அல்லவா?

உணர்ச்சித் தொடர்களில் very அல்லது much போன்ற சொற்களை (அயற்கூற்றில் மட்டும்) அழுத்தமாகச் சொல்வதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதை ஏற்கெனவே படித்துள்ளோம்.

ஆகவே, நமக்குத் தெரியும்... இதுவரை நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மா(ற்)றும்போது 6 படிமுறைகளைப் பயன்படுத்தினோம். _ என்று.
அதேபோல்தான்... அதே 6 படிமுறைகளை (அல்லது வழி முறைகளை) அயற்கூற்றிலிருந்து நேர்க்கூற்றுக்கு மா(ற்)றும்போதும் தலைகீழாகப் பயன்படுத்த வேண்டும்.

அதாவது, (நேர்க்கூற்று)
A →  B   (அயற்கூற்று)
என்பதிலிருந்து
B  →  A என்று
மாறும்போது,
பழைய (நேர்க்கூற்று)
A எப்படியிருந்ததோ அப்படியே மாற வேண்டும். அதாவது “மேற்கோள் குறி’’ வரவேண்டும், இணைப்புச் சொற்கள்
(Conjunction) நீங்க வேண்டும், இறந்த காலம் (Past - tense) நிகழ்காலமாக (Present - tense ஆக) மாறவேண்டும், மாற்றமடைந்த (முந்தைய நாள்) the previous day போன்றவை Yesterday (நேற்று) என்று மாற வேண்டும், இடமாற்றம் அடைந்த சொற்கள் மீண்டும் பழையபடி தலைகீழ் இடமாற்றம் அடைய வேண்டும்.

Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்