Home தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-37
செவ்வாய், 06 டிசம்பர் 2022
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
தந்தை பெரியார் வேடமிட்டு அழகு மொழியில் உரை தந்தை பெரியார் வேடமிட்டு அழகு மொழியில் உரை தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி -இரா.வெற்றிக்குமார் ஆகியோரின் மகள் அ.வெ.கயல், தான் படிக்கும் தஞ்சை பிளாசம் பள்ளி வி... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-38 கே.பாண்டுரங்கன் INFINITIVE, GERUND, PARTICIPLE மின்னல் என்பது மேகங்களின் உராய்வால் ஏற்படுவது. அது அளவிட முடியாத அளவிற்கு மின்சாரத்தை உற்பத... மேலும்
கணக்கும் இனிக்கும் கணக்கும் இனிக்கும் உமாநாத் செல்வம் திசையறிவு   எல்லா குழந்தைகளுக்குமே நான்கு திசைகள் எவை என்பது தெரிந்து இருக்கும். அது மிக எளிதாகவும் விளங்கிவிடும். இரண... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-37
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சொற்சொடர் அறிவோம்

நாம் எல்லோரும் பழங்குடியில் இருந்து வந்தவர்கள்தாம்! பேசாத பழங்குடியின மனிதர்கள் பேச ஆரம்பித்ததே மொழியினால்தான். இப்போது நாம் நாகரிகம் வளர்ந்த மனிதர்களாகிவிட்டோம். பல மொழிகள் தோன்றின. காலப்போக்கில்அவற்றில் பல அழிந்தன.


மொழிகள் அழியாமல் இருக்க இலக்கணம் வகுத்தலும் தொடர்ந்து பயன்படுத்துதலும் மிக மிக அவசியம். பயன்படுத்தாத மொழிகள் அழிந்துபோன அணுக்கள் போன்றவை.

தேவையான, அறிவுப் பூர்வமான மொழிகளை அழியாமல் காப்போம்.


தமிழ் மொழி உலகத்தில் நீங்காமல் நிற்பதற்கு நம் முன்னோர்கள் முறையான இலக்கணம் வகுத்தார்கள். தொடர்ந்து பயன்பாட்டிலும் எப்போதும் வைத்தார்கள்.


ஆங்கில மொழியும் அழியாமல் நிற்கிறது-. காரணம், முறையான ஆங்கில இலக்கணமும்  தொடர்ந்து நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருவதுமே ஆகும்.
நாம் இவ்விரு மொழிகளையும் பிழையின்றி எழுத-_முறையான இலக்கணத்தைப் படித்து வந்தோம்.
இன்னும் நிறைய இலக்கணம் படிப்போம். அந்த வரிசையில் இப்போது நாம் பார்க்க இருப்பது:

Simple Sentence (எளிய சொற்றொடர்)
Compound Sentence (கூட்டுச் சொற்றொடர்)
Complex Sentence (கலப்புச் சொற்றொடர்)


1. SIMPLE SENTENCE  (எளிய சொற்றொடர்)

ஆங்கிலச் சொற்றொடரில்... Subject + Verb + Object என்ற வரிசையில்... அதாவது எழுவாய், வினைச்சொல், பயனிலை (அல்லது வினைமுற்றுச் சொல்) என்ற வரிசையில் வந்து ஒரு சொற்றொடர் இருந்தால் அது (Simple Sentence) எளிய சொற்றொடர்.

(தமிழில் எழுதும்போது... மேலே சொன்ன வரிசை மாறுபடும். ஆனால், பொருள் மாறாது)

குறிப்பு (Clue):

ஆங்கிலச் சொற்றொடரில்... முக்கியமாக ஒரே ஒரு வினைச்சொல் (Verb)மட்டுமே வந்து நிறைவடையும் ஒரு சொற்றொடர்.
(எ.கா.)

  • Ragul Gandhi goes on a long Walking Tour.
    ராகுல் காந்தி நீண்ட நடைப்பயணம் போகிறார்.
  • The sun rises in the east.
    சூரியன் கிழக்கில் உதிக்கிறது.

2. COMPOUND SENTENCE (கூட்டுச் சொற்றொடர்):

ஆங்கிலச் சொற்றொடரில்... ஒன்றையொன்று சாராமல் (Independent Clauses) தொடர்ந்து வரும் இரண்டு எளிய சொற்றொடர்களை and, or, but
போன்ற இணைப்புச் சொல்லால் இணைப்பது கூட்டுச் சொற்றொடர் (Compound Sentence) எனப்படும்.

குறிப்பு (Clue):

இரண்டு எளிய சொற்றொடர்களுக்கு இடையில் ஓர் ஒத்துழைப்பு இணைப்புச் சொல்(co-ordinating)  வரும் (FANBOYS = For, And, Nor, But, or, Yet, So) (ஏற்கெனவே அத்தியாயம்- _13இல் படித்துள்ளோம்.)
(எ.கா.)

  • Ragul has been going on a long walking tour and he has been worrying about the people of India.
    ராகுல் நீண்ட நடைப்பயணம் போய்க் கொண்டிருக்கிறார். மேலும் அவர் மக்களைப் பற்றி கவலை கொண்டிருக்கிறார்.
  • Akilan celebrates Pongal. But he doesn’t celebrate Diwali
    அகிலன் பொங்கல் விழாவைக் கொண்டாடு-கிறார். ஆனால் அவர் தீபாவளியைக் கொண்டாடு-வதில்லை.

3. COMPLEX SENTENCE (கலப்புச் சொற்றொடர்):
ஆங்கிலச் சொற்றொடரில்... சார்ந்து வரும் சொற்றொடரும் (Dependent Clause), சாராமல் வரும் சொற்றொடரும் (Independent Clause)
சார்பு இணைப்புச் சொல்லால் இணைக்கப்பட்டு வருவது கலப்பு சொற்றொடர்(Complex Sentence)
எனப்படும்.
குறிப்பு (Clue):

இரண்டு சொற்றொடர்களுக்கு இடையில் Though, Eventhough, Because, If, While, Who...
போன்ற சார்பு இணைப்புச்சொல்(Sub-ordinate Conjunction)  வரும் (ஏற்கெனவே அத்தியாயம்-_14இல் படித்துள்ளோம்!)

(எ.கா.)

  • Eventhough he was wounded in his leg, he participated in foot ball.

அவருக்கு காலில் காயம்பட்ட போதிலும், அவர் கால்பந்து விளையாட்டில் கலந்துகொண்டார்.

  • If we concentrate in our work, nobody can disturb us

நம்முடைய வேலையில் நாம் கவனமாக இருந்தால், எவராலும் நம்மைத் தொந்தரவு செய்ய முடியாது.
(தொடரும்)



Share
 

முந்தைய மாத இதழ்

சுட்டிக் குழந்தை சுட்டிக் குழந்தை அன்னை இடுப்பில் பவனி வர அடம்பிடிக்குதுஅத்தைமகன் காதைத்திருகி அழுகையாக்குதுசுடுநீரில் குளியல் என்றால் நடு... நடுங்குதுசேற்றை வாரி... சந்தனம... மேலும்
பரிசு வேண்டுமா? பரிசு வேண்டுமா? கேள்விகள் மேலிருந்து கீழ்:1.    மகாராஷ்டிராவில் தோன்றி ஆந்திரா வரை பாயும் இந்தியத் துணைக் கண்டத்தின் மூன்றாவது பெரிய ஆறு (4)2.    “நீலச்... மேலும்
கதை கேளு... கதை கேளு... கதை கேளு... கதை கேளு... விழியன் "தேன்மிட்டாய்...""தேன்மிட்டாய் யாரும் உள்ளூர் கடையில வாங்கக்கூடாது""எதுக்கு?""உங்க தெருவுல யாருக்கும் கொடுக்கக்-கூடாதுன்னு கட்டுப... மேலும்
ஊஞ்சலாடுங்கள் தேன்சிட்டுகளே! ஊஞ்சலாடுங்கள் தேன்சிட்டுகளே! தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6ஆம் வகுப்பில் இருந்து 9ஆம் வக... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-37 சொற்சொடர் அறிவோம் நாம் எல்லோரும் பழங்குடியில் இருந்து வந்தவர்கள்தாம்! பேசாத பழங்குடியின மனிதர்கள் பேச ஆரம்பித்ததே மொழியினால்தான். இப்போது ... மேலும்