Home மருத்துவக் குறிப்பா?
ஞாயிறு, 05 பிப்ரவரி 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
தங்கும் எங்கும் பேரின்பம் தங்கும் எங்கும் பேரின்பம் புது ஆண்டுந்தான் பிறந்தாச்சு புதுமை எங்கும் மலர்ந்தாச்சுஇதழ்களில் புன்னகை பூத்தாச்சு இல்லறம் எங்கும் ஒளியாச்சு;*மதுகை என்றும் உண்டாச்சு *ம... மேலும்
அசத்தும் அறிவியல் அசத்தும் அறிவியல் ஓடு இல்லாத முட்டை செய்வோமா?அறிவழகன் முட்டைக் கூடுகள் மிகவும் வலுவானவை. முட்டை ஓட்டை உருவாக்கும் கால்சியம் கார்பனேட் மிகவும் கடினமானது.... மேலும்
கணக்கும் இனிக்கும் கணக்கும் இனிக்கும் உமாநாத் செல்வன் கடந்த முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் நண்பர்களானார்கள் வந்தியனும் சேந்தனும். அவ்வப்போது அலைப்பேசியில் பேசிக்கொள்வார்கள்.... மேலும்
சிறார் கதை சிறார் கதை வசீகரன் லாலு, லூலூ இரண்டும் நல்ல நண்பர்கள், நட்புக்கு இலக்கணமாக வாழும் அன்பு முயல்கள், எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வர். கிடைக்கும் உணவை... மேலும்
செயத்தக்க... ப.மோகனா அய்யாதுரை செயத்தக்க... ப.மோகனா அய்யாதுரை கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்றால் உலகம் முழுமையும் முடங்கிப் போனது. பெரும் வர்த்தக நிறுவனங்கள் கூட கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. பெரும் ... மேலும்
மருத்துவக் குறிப்பா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

ஃபார்வேர்டு மெசெஜுக்கு சொல்லுங்க நோ

“குழந்தைகளின் வளர்ச்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அவர்களுக்கான சத்தான சமச்சீர் உணவு. ஆனால் இந்தியா இத்தகைய உணவுகள் கிடைக்காமல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஏராளம். 36% குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற உயரம் இல்லாமலும், 19% குழந்தைகள் தங்கள் உயரத்திற்கேற்ற பருமன் இல்லாமலும் இருக்கிறார்கள்.

6 முதல் 59 மாதம் வரையிலான குழந்தைகளில் 67% பேர் இரத்த சோகையுடன் இருக்கிறார்கள். வசதி படைத்தோர், வசதியற்றோர் என பலதரப்பட்ட குழந்தைகளும் இதில் அடங்குவர்.

உரிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால் அவதியுறும் குழந்தைகளும், அதற்கான வாய்ப்பிருந்தும் உண்ணாத குழந்தைகளும் இதில் உள்ளனர்.
பிஞ்சுகளுக்குத் தாய்ப் பால் வழங்குவதன் அவசியத்தைப் பெற்றோர் உணர்ந்திட வேண்டும். முதல் 6 மாதத்திற்கு தண்ணீர், பால் உள்பட வேறு எதுவும் குழந்தைக்குத் தேவையில்லை; தேவையான அனைத்தும் தாய்ப்பாலில் உள்ளது என்கிறார்கள் மருத்துவதுர்கள்.

அதே நேரம் நோய் எதிர்ப்பு சக்திக்கும் தாய்ப்பால் மிகவும் முக்கியமானதாகும். பிற உணவுகள் கொடுக்கத் தொடங்கிய பின்னும் தாய்ப்பால் மிகவும் முக்கியமாகும்.  கோவிட் காலத்திற்குப் பிறகு உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி தொடர்பாக நாம் கவலை கொண்டிருக்கிறோம் இல்லையா? இதை மேம்படுத்த ஊட்டச்சத்தும் மிகவும் அவசியமாகும்” என்று யுனிசெப் அமைப்பின் சார்பில் டேராடூனில் நடைபெற்ற கிரிட்டிகல் அப்ரைசல் ஸ்கில்ஸ் பயிற்சி முகாமில் பங்கேற்ற ஊட்டச்சத்து நிபுணரும் யுனிசெப்பின் குழந்தைகள் மேம்பாட்டு வல்லுநருமான காயத்ரி சிங் தெரிவித்தார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், தாமஸ் ராய்ட்டர்ஸ் பவுண்டேசனும் இணைந்து செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக இந்தப் பாடத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மற்றொரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், “இத்தகைய ஊட்டச்சத்து கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்காகத் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்திருக்கும் காலை உணவுத் திட்டம் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. குறைந்த அளவே உண்ணும் வகையில் தான் சிறிய குடல் குழந்தைகளுக்கு இருக்கிறது. அதனால் தான் அடிக்கடி உணவு உண்டாலும் கூட, அடிக்கடி பசி உணர்வு வருகிறது. ஆனால், வறுமையின் காரணமாக காலையில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசின் திட்டம் எத்தனை முக்கியமானது என்பதை அனைவரும் அறிவார்கள்” என்றும் எடுத்துக் கூறினார்.

மருத்துவத் துறை சார்ந்து செய்திகளில் வரும் பல்வேறு பொய்ச் செய்திகளையும், புரளிகளையும் உரிய மருத்துவர்கள் மூலம் தெளிவுபெற்று ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்பதற்கான அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. யூ டியூபில் வருகிறது; வாட்ஸ் அப்பில் வருகிறது என்று கண்ட கண்ட கசாயங்களைக் குடிப்பதும், நோய்த் தடுப்பூசிகளை மறுப்பதும் எத்தகைய கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் வல்லுநர்கள் எடுத்துரைத்தனர்.

பிஞ்சுகளே, மருத்துவம் தொடர்பாக வரும் எந்தச் செய்தியையும், கற்றுத் தேர்ந்த மருத்துவரிடம் விளக்கம் பெற்றே நீங்களும் பிறருக்குச் சொல்ல வேண்டும். பெரியோர்கள் எதையோ ஃபார்வேர்டு செய்து கொண்டேயிருக்கும் வியாதிக்கு நீங்களும் ஆட்பட்டுவிடக் கூடாது!

- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்