Home முடநம்பிக்கை போச்சு....
வியாழன், 02 பிப்ரவரி 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
தங்கும் எங்கும் பேரின்பம் தங்கும் எங்கும் பேரின்பம் புது ஆண்டுந்தான் பிறந்தாச்சு புதுமை எங்கும் மலர்ந்தாச்சுஇதழ்களில் புன்னகை பூத்தாச்சு இல்லறம் எங்கும் ஒளியாச்சு;*மதுகை என்றும் உண்டாச்சு *ம... மேலும்
அசத்தும் அறிவியல் அசத்தும் அறிவியல் ஓடு இல்லாத முட்டை செய்வோமா?அறிவழகன் முட்டைக் கூடுகள் மிகவும் வலுவானவை. முட்டை ஓட்டை உருவாக்கும் கால்சியம் கார்பனேட் மிகவும் கடினமானது.... மேலும்
கணக்கும் இனிக்கும் கணக்கும் இனிக்கும் உமாநாத் செல்வன் கடந்த முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் நண்பர்களானார்கள் வந்தியனும் சேந்தனும். அவ்வப்போது அலைப்பேசியில் பேசிக்கொள்வார்கள்.... மேலும்
சிறார் கதை சிறார் கதை வசீகரன் லாலு, லூலூ இரண்டும் நல்ல நண்பர்கள், நட்புக்கு இலக்கணமாக வாழும் அன்பு முயல்கள், எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வர். கிடைக்கும் உணவை... மேலும்
செயத்தக்க... ப.மோகனா அய்யாதுரை செயத்தக்க... ப.மோகனா அய்யாதுரை கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்றால் உலகம் முழுமையும் முடங்கிப் போனது. பெரும் வர்த்தக நிறுவனங்கள் கூட கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. பெரும் ... மேலும்
முடநம்பிக்கை போச்சு....
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

”கிரகணத்தப்ப சாப்ட்ட ....
எந்தப் பிரச்சனையும் இல்ல !
சிறுமி ஆனந்தினியின் நேரடி அனுபவம்

25.10.2022 ஆம் தேதி பள்ளிக்கு விடுமுறை எடுத்து விட்டு அம்மாவின் ஃபிரண்ட்ஸ் வீட்டிற்கு போகலாம் என கிளம்பினோம். அப்போது என்னோட மாமா போன்ல பாத்துட்டு மாமி கிட்ட இன்று சூரிய கிரகணம் என்று சொல்லி 9 மாதம் கர்ப்பமாக இருந்த எனது மாமியை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறுசொல்லி, “வெளியில் வரக் கூடாது, கிரகணம் பிடிக்கும் போது சாப்பிடக்கூடாது, அந்த நேரத்தில் கை கால்கள் அசைத்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும்” என்றும், “நான் வேலைக்குப் போகாமல் உன்னுடன் இருக்கிறேன்” என்றும் கூறினார்.

வெளியில் செல்கிறோம் என்ற ஆர்வத்தில் கிளம்பி வந்து விட்டோம். எதிர் பாராத விதமா அம்மாவின் நண்பர்கள் கடற்கரை (பீச்சு)க்கு வர, அங்கிருந்து எனது சித்தப்பா மூலம் பெரியார் திடல் வந்தோம். அங்கே வந்து பார்த்தால்...  சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலா வந்து சூரியனை மறைக்கும் அந்த சூரிய கிரகணச் நேரத்தில் பாப்பாவை வயிற்றில் சுமந்துள்ள எழில் அக்கா, சத்தியா அக்கா இவர்களுடன் ஆசிரியர் தாத்தாவும் எல்லாரும் சிற்றுண்டி சாப்பிட்டனர்.
கடந்த முறை சூரிய கிரகணம் ஏற்பட்ட போது,  அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டு  சாப்பிட்ட சீர்த்தி அக்கா அவங்க பையனோட அங்க வந்து இருந்தாங்க. எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. காலைல வீட்ல மாமிக்கு நடந்ததையும் மாலை பெரியார் திடல்ல நடந்ததையும் யோசிக்க வச்சது. மாடிக்குப் போயி டெலஸ்கோப் மூலமா நான், என்னைப் போல நிறைய அக்கா தம்பிமார்கள் எல்லாரும் சூரிய கிரகணத்தைப் பார்த்தோம். எழில் அக்கா தனக்கு பாப்பா பொறந்தா லைவ்ல காட்டுறதா சொன்னங்க. எல்லாமே சாப்பிட்டு முடிச்சிட்டு சத்யா அக்கா, எழில் அக்காவோட பேசிட்டு கிளம்பினோம். “உங்களுக்குப் பயம் இல்லையா?ன்”னு கேட்டேன். “பயம் இல்லை, இதெல்லாம் சும்மா பயமுறுத்துறதுக்காகச் சொன்னாங்க” என்று இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா சொன்னாங்க. எனக்கும் மகிழ்ச்சியா இருந்துச்சு.

கிரகணத்தின் பேரால பொய் சொல்லி நம்மள ஏமாத்தறாங்கனு நான் தெரிஞ்சிகிட்டேன். மறுநாள் என் நண்பர்கள் கிட்ட நடந்த எல்லாத்தையும் சொன்னேன். இப்ப (நவம்பர் 17) அந்த எழில் அக்காக்கு பாப்பா பொறந்திருக்குனு கேள்விப்பட்டேன். ஒரு மூடநம்பிக்கையை வைச்சு எத்தனை பேரை பயமுறுத்தியிருப்பாங்க? இப்போ அது பொய்ன்னு நேரடியா நானே தெரிஞ்சுக்கிட்டேன். இதையும் என் நண்பர்கள் கிட்ட சொல்லி அவங்களுக்கும் புரிய வைப்பேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு!

- ஆ.சு.ஆனந்தினி, 5ஆம் வகுப்பு,
கீகீஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஒரத்தூர்.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்கோட்டில் சுந்திரன் (நிலா) வரும்போது, ஏற்படும் ஒளிமறைப்பு ஆகும்.
பூமியிலிருந்து பார்க்கும் போது தெரியும் சூரியனை, நடுவில் வரும் நிலா மறைக்கும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும் இதனால் பூமியில் எந்த பாதிப்பும் மாற்றமும் ஏற்படுவதில்லை.

Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்