Home கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
வியாழன், 02 பிப்ரவரி 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
தங்கும் எங்கும் பேரின்பம் தங்கும் எங்கும் பேரின்பம் புது ஆண்டுந்தான் பிறந்தாச்சு புதுமை எங்கும் மலர்ந்தாச்சுஇதழ்களில் புன்னகை பூத்தாச்சு இல்லறம் எங்கும் ஒளியாச்சு;*மதுகை என்றும் உண்டாச்சு *ம... மேலும்
அசத்தும் அறிவியல் அசத்தும் அறிவியல் ஓடு இல்லாத முட்டை செய்வோமா?அறிவழகன் முட்டைக் கூடுகள் மிகவும் வலுவானவை. முட்டை ஓட்டை உருவாக்கும் கால்சியம் கார்பனேட் மிகவும் கடினமானது.... மேலும்
கணக்கும் இனிக்கும் கணக்கும் இனிக்கும் உமாநாத் செல்வன் கடந்த முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் நண்பர்களானார்கள் வந்தியனும் சேந்தனும். அவ்வப்போது அலைப்பேசியில் பேசிக்கொள்வார்கள்.... மேலும்
சிறார் கதை சிறார் கதை வசீகரன் லாலு, லூலூ இரண்டும் நல்ல நண்பர்கள், நட்புக்கு இலக்கணமாக வாழும் அன்பு முயல்கள், எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வர். கிடைக்கும் உணவை... மேலும்
செயத்தக்க... ப.மோகனா அய்யாதுரை செயத்தக்க... ப.மோகனா அய்யாதுரை கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்றால் உலகம் முழுமையும் முடங்கிப் போனது. பெரும் வர்த்தக நிறுவனங்கள் கூட கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. பெரும் ... மேலும்
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

 

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பாற மரங்கள் இல்லை...

கலங்காமலே

கண்டம் தாண்டுமே! என்று ஒரு திரைப்படப் பாடலில் எழுதியிருப்பார் கவிஞர் நா.முத்துக்குமார்.

நெடுந்தொலைவு பறக்கும் பறவைகள் ஏராளம். பறவைகள் பற்றிய ஆய்வின் மூலம் நமக்கு அறிவியல்பூர்வமாகவே இத் தகவல்கள் உறுதியாகக் கிடைத்துவிடுகின்றன. இதுவரை பதிவு செய்யப்பட்ட இத்தகைய இடப்பெயர்வுகளில் கடந்த மாதம் (2022 அக்டோபர்) அதிகத் தொலைவு கடந்த சாதனை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

2022 அக்டோபர் 13 அன்று வட அமெரிக்கக் கண்டத்தின் அலாஸ்காவில் இருந்து புறப்பட்ட பட்டை வால் மூக்கன் வகைப் பறவை(Bar-tailed godwit)  ஒன்று 11 நாட்கள் 1 மணி நேரம் இடைவிடாது பறந்து, அக்டோபர் 24 அன்று ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள டாஸ்மேனியாவின் ஆன்சன்ஸ் விரிகுடாவை வந்தடைந்தது. அது கடந்த தொலைவு 13560 கி.மீ, அதாவது 8436 மைல். (இதற்கு முன்பு அளக்கப்பட்டுள்ள அதிகபட்சத் தொலைவு 13050 கி.மீ.தான்)
இந்தத் தொலைவை, சராசரியாக மணிக்கு 51 கி.மீ. வேகத்தில் பறந்து கடந்து வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது என்ன தெரியுமா பிஞ்சுகளே! இவ்வளவு தொலைவைக் கடந்த இந்தப் பறவையின் வயது 5 மாதங்கள் மட்டுமே! ஜெர்மனியின் மாக்ஸ் பிளான்க் நிறுவனத்தைச் சேர்ந்த பறவையியல் ஆய்வாளர்களின் ஆய்வில் இத்தகவல் கிடைத்துள்ளது.  234684 என்ற எண்ணிடப்பட்ட வில்லை அணிந்த பட்டை வால் மூக்கனின் இந்தப் பயணம் செயற்கைக் கோள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தொலைவைக் கடக்கும் வழியில், மரங்கள் இல்லை; அது தரையிறங்கவில்லை; தூங்கவில்லை; ஓய்வெடுக்கவில்லை; சாப்பிடவும் இல்லை.

யம்மாடி... நமக்கு வீட்டிலிருந்து பள்ளிக்குக் கொண்டு செல்லும் உணவுப் பையில் நொறுக்குத் தீனி இல்லாவிட்டாலே சோர்ந்துபோய் விடுகிறோம். இது எத்தனை நாளு... எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கு..?!
- டார்வின்


Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்