Home கதை கேளு... கதை கேளு...
வியாழன், 30 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
கதை கேளு... கதை கேளு...
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

விழியன்

மூவரின் கனவிலும் சாக்லேட் மரம் வந்து-கொண்டே இருந்தது. சாக்லேட் வழிந்துகொண்டே இருந்தது. மரத்தின் இலைகள் சாக்லேட்டாக இருந்தன. கிளைகள் சாக்லேட், அதன் விதைகள் சாக்லேட். தண்டுப்பகுதியும் சாக்லேட். எல்லாமே பழுப்பு நிறத்தில்தான் இருந்தன. மரத்தில் இருந்து ஒரு இலையைப் பறித்தால் உடனே அங்கே ஒரு இலை வந்துவிடும். அதுவும் சாக்லேட் இலைதான். கிளையை உடைத்தாலும் அப்படித்தான். தண்டுப்பகுதியில் தொட்டு நக்கினால் அவ்வளவு சுவை. அந்தப் பகுதியே சாக்லேட் வாசத்தால் நிறைந்து இருந்தது. மூவருக்குமே இதே போன்ற கனவு. மாறி மாறி வரும். காலை எழுந்ததுமே இன்றைக்கு சாக்லேட் மரம் எப்படி இருந்தது என்று விவரிப்பார்கள். நிநிநி, கககா, லுலுலு இவர்கள்தான் அந்த மூவர். ஒன்றாகப் பிறந்த மூவர். மும்மூர்த்திகள். அப்படியும் சொல்லமுடியாது கககா ஆண் குழந்தை, மற்ற இருவரும் பெண் குழந்தைகள். ஒரே மாதிரி ஆடைகள் போட்டால் யார் நிநிநி, கககா, லுலுலு எனக் கண்டுபிடிப்பது சிரமம்.
“அந்த சாக்லேட் மரம் மெய்யாலுமே இருக்குமா?” - நிநிநி
“கனவை எல்லாம் நம்பினா வேலைக்கு ஆகுமா?” - கககா
“அப்ப எப்படி அதே கனவு மூனு பேருக்கும் மாத்தி மாத்தி தினமும் வருதாம்?” - லுலுலு
“ஆமால்ல”
“ஆமாவா இல்லையா?”
இன்னும் அவங்க வயசை நீங்க கேட்கல. மூனு பேர் வயதையும் கூட்டினா பதினைந்து. ஒரு நாள் அவங்க வீட்ல வளக்குற அணிலைத் துரத்திட்டு ஓடினாங்க. அணில் அவங்களை எங்கோ கூட்டிக்கிட்டுப் போச்சு. அவங்களும் வேகமா ஓடினாங்க. ஒரு மலை மாதிரி இருந்த இடத்தை அடைந்ததும் அது சர்ர்ன்னு காணாமப் போயிடுச்சு. எங்க போச்சுன்னு தேடினாங்க. கிடைக்கல. அந்த இடத்தில ஒரு குளம் இருந்தது. ஒரு மரத்தின் நிழலில் மூவரும் நின்றார்கள்.


“ஹே, உங்களுக்குச் சாக்லேட் வாசனை வருதா?”
“ஆமாம். கனவுல வர்ற அதே சாக்லேட் வாசனை”
“அதேதான்”
சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. காய்ந்த மரங்கள், செடிகள், தூரத்தில் சில காகக்கூட்டம். ஆளுக்கு ஒரு திசைக்குச் சென்று தேடலாம் என்று பிரிந்தார்கள். நிநிநிக்கு குளத்தின் அருகே இருந்து சாக்லேட் வாசனை வந்தது. அதன் அருகே சென்றாள். ஒரு குட்டி மீன் திடீரென நீரில் இருந்து வெளியே எட்டிப்பார்த்து, “நிநிநி, சாக்லேட் மரம் இருக்கும் இடம் எனக்குத் தெரியும். என்கூட வரியா?” என்றது. என்னடா இது திடீரென மீன் பேசுதுன்னு ஆச்சரியம். இம்மாம் சின்னா மீனு, இதுகூட நான் எப்படி போவது என யோசித்தாள் நிநிநி. “வா ஏறு” என்று சொல்லி மீன் நிநிநியைவிடப் பெரிதானது. மெல்ல குளத்தில் இருந்த மீன் மீது ஏறினாள். “கெட்டியா பிடிச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு லபக் என்று நீருக்குள் சென்றது. குளத்தின் கீழே வேறு ஒரு உலகம் இருப்பதைப் பார்த்தாள் நிநிநி. குட்டிக் குட்டி மீன்கள் எல்லாம் கை அசைத்தன. மீண்டும் சாக்லேட் வாசனை வந்ததும் சுற்றிப் பார்த்தாள். அந்த மீன் நின்றது. அவர்கள் எதிரே அந்த சாக்லேட் மரம் இருந்தது. கனவில் பார்த்தது போலவே இருந்தது. வாயடைத்து நின்றாள்.
ஆனால் மரம் வாட்டமாக இருந்தது. அது மகிழ்ச்சியாக இல்லை என்பது நன்றாகப் புரிந்தது.


“ஹலோ சாக்லேட் மரமே... எப்படி இருக்க?”
“இதோ பயந்து நீருக்கு அடியில ஒளிஞ்சிட்டு இருக்கேன் நிநிநி” என்றது.
அதற்குள் மரத்தில் வழிந்த சாக்லேட்டை ருசிக்க ஆரம்பித்து இருந்தாள். திடீரென அப்பகுதியே அதிர்ந்தது. தூரத்தில் உருண்டையாக அவர்களை நோக்கி ஏதோ வந்தது. தரையில் படுத்துவிட்டாள். உருண்டை அவளைக் கடந்தது. அது சாக்லேட் மரத்தின் வாய்க்குள் சென்றது. மின்சாரம் தாக்கினால் எப்படி அதிருமோ அப்படி மரம் அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குப் பின்னர் சமநிலைக்கு வந்தது.
“நீரில் விழுந்த நெகிழிகள் அந்த உருண்டை. நீரில் இருக்கும் உயிரினங்கள் அதனால் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. நான் அவற்றை உண்டு என் உயிரை மெல்ல மெல்லத் தியாகம் செய்கின்றேன். எல்லா இடத்திலும் குப்பை போட்றாங்க நிநிநி” என்றது மரம் சோகமாக.


இதே சமயம் கககாவிடம் ஒரு மண்புழு பேசி, கககாவைச் சின்னதாக்கி மண்ணுக்குள் அழைத்துச் சென்று இருந்தது. பூமிக்கு அடியில் கககா சாக்லேட் மரத்தைச் சந்தித்தான். ஒரே இருட்டாக இருந்தபோது அங்கே சில மின்மினிப் பூச்சிகள் மின்னவே, சாக்லேட் மரத்தைப் பார்த்துவிட்டான். அவனும் வாயடைத்து நின்றான். அதே மரம். ஆனால் மூச்சுவிடவே சிரமப்பட்டது. நீருக்கு அடியில் சாக்லேட் மரம் எப்படி உருண்டையை விழுங்கியதோ அதே போல இங்கும் ஓர் உருண்டை வந்தது. “நிலத்திற்கு அடியிலும் மக்காத குப்பைகள் கக்கா” என்று மெலிந்த குரலில் சொல்லியது.
லுலுலுவின் கதையே வேறு. வெண்புறா ஒன்று அவளை அழைத்துச்சென்றது. ஆமாம் மேகத்திற்கு மேலேதான். அங்கேதான் அவள் சாக்லேட் மரத்தைப் பார்த்தாள். “சாக்கி...” என ஓடி அணைத்துக்கொண்டாள். கை, உடல் முழுக்க சாக்லேட் ஒட்டிக்கொண்டது. “நீதான் எங்க கனவில வந்ததா?” எனப் பேச ஆரம்பித்தாள். அவளுடைய வெள்ளைச் சட்டை முழுக்க பழுப்பு நிறமாக மாறி இருந்தது. திடீரென புறாவின் கண்களில் ஏதோ பயம் தொற்றிக்கொண்டது. என்ன ஏது எனப் புரிந்துகொள்ள முயலும் முன்னர் காற்றில் ஒரு சுழற்சி. கருமை நிறத்தில் இருந்தது. புயல்போலச் சுழன்று வந்தது. சாக்லேட் மரம் ஆவென வாயைத் திறக்க, புழுதி அதற்குள் சென்றது. “காற்றில் இருக்கும் மாசினை விழுங்கினேன்” என நடுக்கத்துடன் சொன்னது சாக்லேட் மரம். இந்த மரத்திற்கு விழுதுகள் நிறைய இருந்தன.


‘ஊஞ்சல் ஆடலாமா?’ என லுலுலு கேட்டாள். ‘ஓ’ என்றது மரம். திடீரென தட் தட் தட் என சத்தம். விழுதில் ஆடுவதை நிறுத்திவிட்டு மரத்தின் அருகே சென்றாள். இரண்டு கதவுகள் இருந்தன. இரண்டிற்குப் பின்னால் இருந்துதான் தட்டுகின்றார்கள்.
நீருக்கு அடியில் இருக்கும் மரத்திலும், பூமிக்கு அடியில் இருக்கும் மரத்திலும் இதேபோல இரண்டு கதவுகள் இருந்தன. மூவரும் ஒரே நேரத்தில் மற்ற இரண்டு கதவுகளையும் திறந்தனர்.
“லுலுலு...”
“ஹே கககா...”
“அட நிநிநி”
மூவரும் முதன்முதலாக பிரிந்து சென்ற மரத்தின் கீழே நின்றுகொண்டிருந்தார்கள்.
“நீங்க சாக்லேட் மரத்தை பார்த்தீங்களா?”
ஆமாம் என்று தலை ஆட்டினார்கள்.
“ஆனா பாவம்”
“ஆமா பாவம்”
கககா தன் பாக்கெட்டில் இருந்து குச்சி ஒன்றினை எடுத்தான். சாக்லேட் கிளை. “இதை நம்ம தோட்டத்தில் நட்டுவைத்து வளர்ப்போம். அது பத்திரமாக வளர உலகை மாற்றுவோம்”
“மாற்றுவோம்”

Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்