Home சிறார் கதை : தவளை ராஜாவான கதை
வியாழன், 30 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
சிறார் கதை : தவளை ராஜாவான கதை
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

உதயசங்கர்


மண்டூர் நாட்டை ஆண்டு வந்த மன்னர் நோய்வாய்ப்பட்டுத் திடீரென்று இறந்து விட்டார். அவருக்கு வாரிசு இல்லாததால் மக்கள் என்ன செய்வது என்று யோசித்தனர். ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுக்கவேண்டும். உடனே அவர்கள் ராஜகுரு மாமண்டூவைச் சந்தித்தனர். ராஜகுரு ஏதோ புரியாத மொழியில் முணுமுணுத்தார். பரணிலிருந்து பெரிய பெரிய ஓலைச்சுவடிகளை எடுத்துப் புரட்டினார். பின்னர் கண்ணைமூடி இரண்டு நாள்கள் உட்கார்ந்து விட்டார். சாப்பிடுவதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் மட்டும் கண்களைத் திறந்தார். மக்கள் அவரையே பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.
கூட்டம் அதிகமாக அதிகமாக அவரைப் பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்றால் ஒரு கட்டணம். அங்கேயே இருக்கவேண்டும் என்றால் அதிக கட்டணம். அவசர அவசரமாய் பார்க்கவேண்டுமென்றால் ஒரு கட்டணம் என்று விதவிதமாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. மக்கள் வரிசை வரிசையாக நின்றனர்.
அவர் சொல்லும் வார்த்தைகளில் தான் தங்களுடைய எதிர்காலம் இருப்பதாக மக்கள் நினைத்தனர். ஒரு நாளாயிற்று, இரண்டு நாள்களாயிற்று. மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறக்கவில்லை. ஒருவார்த்தை பேசவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்திருந்தார்கள். மாமண்டூ ராஜகுருவே அவருடைய சீடர்கள் மூலம் அவருடைய படங்களை அச்சடித்து விற்க ஏற்பாடு செய்தார். அத்துடன் டீக்கடைகள், ஹோட்டல்கள், சர்பத் கடைகள் எல்லாம் ஆரம்பித்தார். குழந்தைகளுக்கு ராட்டினம் கூட வந்து விட்டது.
எல்லாரும் எப்போது மாமண்டூ ராஜகுரு பேசுவார் என்று காத்துக்கொண்டிருந்தனர்.
“என்ன பேசிட்டாரா?”
“என்ன சொல்லிட்டாரா.?.”
“என்ன  குறிப்புக் கொடுத்தாரா?”
“என்ன சைகை காட்டினாரா?”


என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டே திரிந்தனர். மக்கள், அவரவர் வேலையை விட்டுவிட்டு அங்கு வந்து கிடந்தனர். எல்லாரும் ராஜகுரு வாயைப் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.
மழைக்காலம் தொடங்கியது. மக்கள் எல்லாரும் கலைந்து போகத் தொடங்கினார்கள். உடனே மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறந்தார். மக்களை ஏற இறங்கப் பார்த்தார்.
உடனே தரையில் கட்டம் வரைந்து அதற்குள் குறுக்குமறுக்கும் கோடுகள் போட்டார். சோழியைக் குலுக்கிப் போட்டார். தாயக்கட்டையை உருட்டினார். நெற்றியில் கையை மடக்கி வைத்தார். எல்லாத் திசைகளிலும் கைகளை வீசினார். பின்னர் வாயைத் திறந்து,
“ஏரி.. குளங்களுக்குப் போங்கள்.. அங்கே யார் சத்தமாகப் பேசுகிறார்களோ.. அவரை அழைத்து வாருங்கள்.. அவர் தான் மண்டூர் ராஜா..”


என்று சொன்னார். அவ்வளவுதான். மக்கள் எல்லாரும் உடனே அந்த நாட்டில் இருந்த ஏரி, குளம், கண்மாய், குட்டை, என்று நீர்நிலைகளுக்குப் படையெடுத்தார்கள். மழைக்காலம் தொடங்கி விட்டதால் தவளைகளின் சத்தம் மட்டும் தான் கேட்டது. வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை.
“கொர் கொர் கொர்ர்ர்ர்..” என்று மழைக்காலத்தை வரவேற்று தவளைகள் பாடிக்கொண்டிருந்தன. கூட்டமாகச் சத்தம் போட்டதால் யார் அதிகச் சத்தம் போடுகிறார்கள் என்று கணிக்கமுடியவில்லை. அதனால் எல்லாத் தவளைகளையும் பிடித்து பெட்டிகளில் அடைத்து அரண்மனைக்குக் கொண்டு போனார்கள். ராஜகுருவே தேர்ந்தெடுக்கட்டும்.
அரண்மனையில் ஆயிரக்கணக்கான தவளைகள் கொர்ர்கொர்ர் கொர்ர்... கிர்ர்ர்க் கிர்ர்க் கிராக்க்.. என்று தவளைகளின் விதவிதமான சத்தங்களால் அரண்மனை ஆடியது. ராஜகுருவுக்குத் தெரியும் யார் ராஜாவாக வந்தாலும் அவருக்குப் பிரச்னையில்லை. அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் எல்லாரும் நடந்து கொள்வார்கள். அதனால் எல்லாத் தவளைகளையும் அரண்மனை அரச சபையில் விடச்சொன்னார்.


அப்படியே செய்தார்கள். தவளைகள் எல்லாம் கிராக் கிர்ர் கிர்ர்க் கிர்ர்ர் என்று கத்திக்கொண்டே அங்குமிங்கும் தத்தித் தாவிக் குதித்தன. அப்போது சிம்மாசனத்தில் ஒரு பூச்சியைப் பார்த்தது ஒரு தவளை. அவ்வளவுதான். அந்தத் தவளை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க் கிர்ர்ர்ர்ர்ராரரரக் என்று கத்திக் கொண்டே பாய்ந்து சிம்மாசனத்தில் இருந்த பூச்சியை தன்னுடைய நாக்கை நீட்டி லபக்கியது. உடனே மாமண்டூ ராஜகுரு ஒரு மாலையை எடுத்துக் கொண்டு வந்து அந்தத் தவளை ராஜாவுக்கு அணிவித்தார்.
மக்கள் எல்லாரும் “தவளைராஜா வாழ்க! தவளைராஜா வாழ்க!” என்று வாழ்த்தினார்கள். தவளைராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் எங்காவது பூச்சிகள் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தது.
ராஜகுரு மக்களின் அறியாமையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்.


அந்தக் கூட்டத்தில் அறிவுக்கரசன் என்ற சிறுவன் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ராஜகுருவின் தந்திரம் புரிந்தது. மழைக்காலம் முடிந்ததும் தவளை ராஜா பேசமாட்டார். அப்போது அவருடைய பெயரைச் சொல்லி, தானே ஆட்சி செய்யலாம் என்ற ராஜகுருவின் திட்டத்தை அவன் தெரிந்து கொண்டான்.
உடனே அவன் தவளைமொழி தனக்குத் தெரியும் என்றான்.
தவளைராஜா சொல்வதை மக்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதாகச் சொன்னான்.
ராஜகுருவால் மறுப்புச் சொல்லமுடியவில்லை.


அப்போது தவளைராஜா ஒரு பெண் தவளைக்காகப் பாட்டுப் பாடினார். கிர்ரக்கிர்ராக்கி கிர்ர்கி கீர்ராக்கி கிகிகிர்ர்ர்ர்ர்க்க்க்க்.. என்று பாட்டுப் படித்தார். மக்கள் எல்லாரும்
“ராஜா என்ன சொல்கிறார்?” என்று அறிவுக்கரசனைப் பார்த்துக் கேட்டனர். அறிவு,
“அய்யோ! அதை நான் எப்படிச் சொல்வேன்... நம்முடைய ராஜகுரு நாட்டின்  செல்வத்தைக் கொள்ளையடித்து பதுக்கி வைத்திருக்கிறார்.. அவரைக் கைது செய்யும்படி.. உத்தரவு போடுகிறாரே ராஜா..”
மக்கள் திகைத்துப் போனார்கள். ஆனாலும் ராஜாவின் உத்தரவாயிற்றே. மீற முடியுமா? ராஜகுருவைக் கைது செய்தார்கள். இப்போது மறுபடியும் தவளைராஜா,
கிர்ர்ர்ர்ர்ராக் கிகிகிகிகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கத்தினார். மக்கள் அறிவுக்கரசனைப் பார்த்தார்கள்.
“ராஜா இனிமேல் மன்னராட்சி கிடையாது.. .. மக்கள் தங்களுக்குச் சேவை செய்ய சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கட்டும்..  அவர்கள் ஆளட்டும்...”
உடனே மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
‘கிராக் கிர்ரக்’ என்று மறுபடியும் தவளைராஜா கத்தினார்.
உடனே அறிவுக்கரசன்,
“என்னை என் குளத்திலேயே விட்டு விடுங்கள் என்று சொல்கிறார் தவளைராஜா..” என்று சொன்னான்.
அப்புறம் என்ன!
மண்டூர் அறிவூராக மாறியது. மக்களை மக்களே ஆட்சி செய்யும் நல்லாட்சி மலர்ந்தது.<

Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்